பெறுமதி இழக்கும் ஆயிரம் ரூபா




ஒரு காலத்தில் ஆயிரம் ரூபாவினால் எத்தனையோ விடயங்களை சாதிக்கும் காலம் இருந்தது. இப்போது அதற்கு பெறுமதி இல்லாமல் போகும் தன்மை காணப்படுவதாக எல்லோரும் கதைப்பது கேட்க முடிகிறது.அதன் பின்பு தான் எனக்கு இதையும் மேலோட்டமாக அலச எண்ணம் தோன்றியது.
முந்திய காலங்களில் எல்லாம் ஐந்நூறு ரூபாவை குயில் என்றும் ஆயிரம் ரூபாவை மயில் என்றும் கூறி அதற்கு ஒரு சிறப்பிடம் கொடுத்துவந்ததை யாரு மறக்க முடியாது.
அதாவது ஒரு வேலை செய்யச்சொன்னால் "ஒரு மயில் இருந்தால் அல்லது தந்தால் இலகுவாக முடித்துவிடலாம் " என்று மற்றவரை கிண்டலாக சொல்லுவதை நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் இன்று ஆயிரம் ரூபாவை எடுத்தால் ஏதாவது ஒரு அத்தியாவசிய பொருள் வாங்கிவிட்டாலே அது மாற்றிய காசாக மாறி அதன் வலுவிழந்துவிடுகிறது. "சும்மா நூறு ,இருநூறு கிராம் சாமான் வாங்கினவுடனேயே ஆயிரம் ரூபா மாயமாக மறைஞ்சு போச்சே " இது சந்தையில் கதைக்கும் அம்மாமாரின் கருத்து.
""அந்த காலம் பத்து ரூபவுக்குள்ள மதிப்பே இல்லாமல் போச்சே,பத்தாயிரம் ரூபா கூட ஒரு மாத செலவுக்கு காணாமல் இருக்கிறதே" எண்டு தலையில் கை வைக்கும் ஆடவர் கூட்டம்.
இப்படியே எங்கு கேட்டாலும் எவ்விடத்தில் கேட்டாலும் ஆயிரம் ரூபாவின் தன்மை இழந்துவிட்டதை சொல்லி எல்லோரும் புறுபுறுப்பதை கேட்கலாம்.
இவையெல்லாம் ஆயிரம் ரூபா பெறுமதி இழந்துகொண்டு செல்வதையே எடுத்துக்காட்டுகின்றது என்று கூறலாம்

5 comments:

  1. \\ஒரு வேலை செய்யச்சொன்னால் "ஒரு மயில் இருந்தால் அல்லது தந்தால் இலகுவாக முடித்துவிடலாம் " என்று மற்றவரை கிண்டலாக சொல்லுவதை நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் இன்று ஆயிரம் ரூபாவை எடுத்தால் ஏதாவது ஒரு அத்தியாவசிய பொருள் வாங்கிவிட்டாலே அது மாற்றிய காசாக மாறி அதன் வலுவிழந்துவிடுகிறது. "சும்மா நூறு ,இருநூறு கிராம் சாமான் வாங்கினவுடனேயே ஆயிரம் ரூபா மாயமாக மறைஞ்சு போச்சே " இது சந்தையில் கதைக்கும் அம்மாமாரின் கருத்து.\\

    கரவைக்குரல் இது காலத்திற்க்கு எற்ற பதிவு.தொடர்ந்து பதிவு செய்யுங்கள் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. என்ன தாசன் உங்களுக்கு நீங்களே பின்னூட்டம் இடுகிறீர்கள்.

    ReplyDelete
  3. கண்டுபிடிப்பவர்கள் தங்கள் பெயர்களை குறிப்பிட மறப்பது என்னகரணம்
    உங்கள் கண்டுபிடிப்பில் தவறு வந்துவிடும் என்று தானோ?

    இதற்கு கரவைக்குரல்தான் பதில் சொல்ல வேணும்

    ReplyDelete
  4. \\என்ன தாசன் உங்களுக்கு நீங்களே பின்னூட்டம் இடுகிறீர்கள்.\\

    நண்பரே இது எனது வலைப்பதிவு இல்லை. இது வளர்த்து வரும் இளம் படைப்பாளி ஒருவரால் பதிவு செய்யப்படுகின்றது.

    ReplyDelete
  5. கரவைக்குரல் என்ன பதில் சொல்வது.
    இது கரவையிலிருந்து ஒரு உளறல்
    அவ்வளவு தான்.
    உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete