எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட தாயகத்தின் பதிவர் சந்திப்பு 23.08.2009அன்று நாளை கொழும்பில் நடைபெறவிருக்கிறது.சென்னையிலும் சிங்கப்பூரிலும் அமீரகத்திலும் மற்றும் பல்வேறு நாடுகளிலும் இடம்பெற்ற பதிவர்களின் சந்திப்புக்கள் வெற்றிகரமாக இடம்பெற்று நிறைவேறி சில நாள்களுக்குள் தாயகத்தில் வரலாற்றில் இடம்பிடிக்கும்வகையில் பதிவர் சந்திப்பு கொழும்பின் தமிழ்சங்கத்தில் இடம்பெற இருக்கிறது.
மகிழ்ச்சியான விடயம்.
பல்வேறு பகுதிகளிலும் பதிவர்கள் சந்தித்திருந்தாலும் "தம் தாய்மண்ணில் பதிவர்கள் ஒன்றுகூடவில்லையே" என்ற அந்த அந்த பதிவர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு இது மிகச்சந்தோசமான விடயம்.இந்த நிகழ்வைப்பற்றி அறிவித்தவுடனும் பதிவர்களின் பின்னூட்டங்களையும் கருத்துக்களும் இதை பறைசாற்றும்.
பல்வேறு நோக்கங்களையும் அடிப்படையில் சிந்தித்து அவற்றை எவ்வாறு வழிப்படுத்த வேண்டும் என்ற பெரிய எதிர்பார்ப்போடு முன்னெடுக்கப்படும் இந்த சந்திப்பின் முக்கிய அம்சங்கள் வரவேற்புக்குரியது.
வெறுமனே இணையத்திலேயே பதிவுகளை இட்டு பதிவர்களுடனும் மற்றும் இணைய வாசகர்களுடனும் தங்கள் எழுத்துக்களை பதிந்துவிடும் வலையுலகப் பதிவர்களின் திறமைகளை வெளியுலகத்துக்கு கொண்டு செல்லப்பட இந்த பதிவர் சந்திப்பு வழிகோலவேண்டும் என்பதே பெரும் எதிர்பார்ப்பும் கூட.சாதரண வாசகர்களின் கைகளிலும், தாயகத்தின் எந்த மூலைக்கும் இப்படியான வலைப்பதிவர்களின் பதிவுகள் பார்க்க அல்லது கேட்க செய்யவேண்டும்.அதே போலவே பதிவர்களின் எழுத்துத்துறைக்கு அப்பால் அவர்களின் இன்னோரன்ன திறமைகளுக்கும் இது வழிசமைக்க வேண்டும்,எதிர்காலத்தில் எம் கலைகள் வாழவும் கலாச்சார நிகழ்வுகளுக்கு மதிப்பளித்து அவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த பதிவர் சந்திப்புக்கள் அமையவேண்டும்.இவையெல்லாம் இப்பதிவர்சந்திப்பில் வெற்றியளிக்கும் என்ற விடயம் மனமகிழ்ச்சியைத்தருகிறது
முதற்கட்டத்திலேயே பதிவர்களின் ஆலோசனைகளோடு சிறப்பான நிகழ்ச்சி நிரல் தயாரிப்புடன் இடம்பெறுகிறது இந்த நிகழ்வு.அது பதிவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைவது குறிப்பிடத்தக்கது.அது மட்டுமல்லாமல் வலைப்பதிவாளர்களுக்கு மட்டுமேயல்லாமல் அவர்கள் பதிவர்கள் அல்லாதவிடத்தும் அந்த நிகழ்வு மற்றயவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.இவையெல்லாம் தொடர்ந்தும் இந்த சந்திப்பு பரிணமிக்கவிருக்கிறது என்பதை பறைசாற்றுகிறது
இதைவிட பதிவர்களின் அனுபவப்பகிர்வுகள், மற்றும் அவர்களின் சகலவிதமான பிரச்சினைகளுக்குமான ஆலோசனகள் என்பனவற்றிற்கு இந்த சந்திப்பு களங்கொடுக்கிறது.ஆகவே இந்த சந்திப்பு முற்றிலும் சகலருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவிருக்கிறது.
அதைவிட இந்த சந்திப்போடு கூடிய முக்கிய வரலாற்று விடயங்கள் ஆதிரையால் ஆராயப்பட்டது,அவையெல்லாம் பெருமைக்குரிய விடயங்களாகும், (அதை திரும்ப நான் மீளிசைக்க விரும்பவில்லை, அதை கண்டுபிடித்த அதை ஆதிரையில் அழுத்துவதன் மூலம் பார்வையிடலாம்),அதேபோல இது பற்றிய சகல விடயங்களையும் மற்றும் நிகழ்ச்சி நிரலையும் நீங்கள் வந்தி,லோஷன்,மற்றும் புல்லட் ஆகியோரின் வலைப்பதிவுகளில் முற்றுமுழுதாக அறிந்து கொள்ளமுடியும்.
கடைசியில் ஒருவிடயம் ,"என்னதான் என்னைப்போல யாரும் சிந்திக்கலாம் அப்படி செய்ய வேண்டும் இப்படிசெய்யவேண்டும் என்று". ஆனால் இவர்களைப்போல ஒரு அடித்தளம் இடுவதென்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமாகும்.இவர்களின் அடித்தளம் நீண்டகாலம் வாழவேண்டும்.அவ்வாறே வாழ்ந்து பதிவர்களின் சிந்தனைகளும் திறமைகளும் வரலாறு படைக்கவேண்டும் என்று வாழ்த்துவதில் பெருமையடைகிறோம்.
என்றென்றும் நிலைத்துவாழ எல்லோரும் பலம் சேர்ப்போம்
புதிய அத்தியாயத்தைத் தொடக்கவிருக்கும் இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு சீரும் சிறப்புமாக நடைபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. எங்களால் இயலுமானவரை இந்நிகழ்வை சிறப்புற நடாத்த அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்றோம்.
ReplyDeleteபதிவர் சந்திப்பு நிறைவு பெற்றதும், அது தொடர்பான தகவல்களை பதிவேற்றுகின்றோம்.
மீண்டும் உங்கள் ஆதரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
நிகழ்வினைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கருத்துக்களையும் சாட்டிங்க் மூலமாகச் சொல்ல கீழே உள்ள சுட்டிக்குச் செல்லுங்கள்
ReplyDeleteபதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்புச் சுட்டி
www.livestream.com/cowboymathu
இலங்கை வலைப்பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்;)
ReplyDeleteஅண்ணை இதுக்கு முதல் கொமெண்டை பப்ளிஷ் பண்ணாதீங்கோ.. இந்தாங்கோ சரியான லிங் http://kiruthikan.blogspot.com/2009/08/blog-post_22.html
ReplyDeleteவாழ்த்துகள் :)
ReplyDeleteஇலங்கை பதிபவர் சந்திப்புக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் :))
ReplyDelete