நிறைவாக நிறைவுற்ற அமீரக பதிவர்களின் இஃப்தார் நிகழ்வு


அமீரக பதிவர்களின் 2009 ம் ஆண்ண்டுக்கான இஃப்தார் நிகழ்வு ஆவணி மாதம் இருபத்தியேழாம் தேதி நேற்று இடம் பெற்றது,முதல் முறையாக இஃப்தார் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட மகிழ்ச்சி எனக்கு.அண்ணாச்சியின் அழைப்போடும் அசாத் அண்ணனின் வாகன வசதியும் கூடி வர நண்பன் சுபைரும் எம்மோடு இணைந்துகொள்ள டுபாய் மற்றும் சார்ஜா முழுவதும் சுற்றிவந்து அண்ணாச்சியின் வீட்டினை இறுதியில் அடைந்தோம்
அமீரக பதிவர்கள் மாகா நாட்டுக்கு பிறகு மீண்டும் பதிவர்களின் முகங்களை நேரிலே கண்டது மிகச்சந்தோசமாக இருந்தது.எல்லோருக்குமிடையில் உரையாடல்கள், மற்றும் கலகலப்பான நகைச்சுவைகள் எல்லாம் பகிர்ந்தபடி இருக்க இஃப்தாருகான நேரமும் நெருங்கியே வந்தது

,அந்த வேளையில் பதிவர் சுல்தான் அவர்கள் வருகை அமைந்திருந்தது,எல்லோருடனும் கைகொடுத்து தன் அன்பை அவர் வெளிப்படுத்தவும் நேரம் நெருங்கிவிட்டது.

நேரமும் வந்தவுடன் எல்லோரும் உணவு பரிமாறி ஆரம்பித்தனர் சாப்பிடுவதற்காக

,அதுவரை நேரமும் கலகலபாக கதைத்துக்கொண்டிருந்தவர்கள் சாப்பிட தொடங்கியவுடன் சாப்பாட்டிலேயே முழுக்கவனமும் செலுத்தியவர்களாய் கொஞ்சம் அமைதியாகிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்,அவ்வப்போது சுவாரஷ்யமான கதைகள் சூடுபிடித்தன.சில பதிவர்கள் தங்களுக்கே பிடித்த உணவுகள் பழங்கள் என்பவற்றிற்கு கிட்டவாக அமர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது
,ஆரம்பித்ததன் பின் சில நிமிடங்களில் பல்வேறு பழக்கலவைகள், ஐஸ்கிறீம் வகைகள் தாங்கியபடி பதிவர் சுந்தர் அவர்கள் குடும்பசகிதம் வந்து நிகழ்வைசிறப்பித்தார்,அவரின் வருகையின் போது அவருக்கு எல்லா பதிவர்களும் எழுந்து நின்று வரவேற்றதை அவந்தானிக்கமுடிந்தது.எல்லோரும் வரவேற்க லொள்ளுப்பதிவர் சுந்தர் ஐயா கொண்டுவந்த பழக்கலவையை கையிலேந்தி இதையும் இப்பவேமுடித்துவிடுவோமா என்று கேட்க அதை புரியாணிக்கு பின்னே உண்ணலாம் என்று எல்லோரும் கருத்து தெரிவிக்க லொள்ளுபதிவரின் முயற்சி கைவிடப்பட்டது.


தொடர்ந்து எல்லோரும் பழங்களும் பழச்சாறுகளும் சாப்பிட்டு குடித்த பின் இஸ்லாமிய மதம் சார்ந்தவர்கள் தங்கள் தொழுகைகளில் ஈடுபட்டனர்.அதைத்தொடர்ந்து சிறிதாக எல்லோரும் கூடியபடி உல்லாசமாக உரையாடல்களில் ஈடுபட்டனர்.முக்கியமாக புதிதாக அமீரகப்பதிவர்களுடன் இணைந்துகொண்ட பதிவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன்ர்.இதற்கு நடுவே அண்ணாச்சி வழிப்படுத்துக்கொண்டிருந்தார்.




அவரே சகல பதிவர்களையும் அவர்களின் நகைச்சுவைத்தன்மைகளை நகைச்சுவையாக அறிமுகம் செய்துகொண்டிருந்தார்,
அதனைத்தொடர்ந்து முக்கியமாக சொல்ல கூடிய நிகழ்வுகள் இடம்பெற்றது,முதலில் சிங்கை நாதன் பதிவருக்கான அமீரகபதிவர்களின் பங்களிப்பு பற்றி மகிழ்ச்சி தெரிவித்தார்.அதாவது வலைபதிவில் மட்டுமே எமக்கு நண்பராக இருந்து அதைவிட சிலருக்கு அவரை தெரிந்திருக்காமல் கூட இருந்திருக்கலாம்,அப்படியிருக்க்கும்போது வலைப்பதிவில் இணைந்துவிட்டதனால் அவருக்கு அளித்த பங்களிப்பு மெச்சுதற்குரியது என்று பாராட்டினார்,இன்னொரு விடயம் பதிவரல்லாத வாசகன் ஒருவர் பதிவினைப்படித்தவராய் வங்கி கணக்கிற்கு தன் பங்கை அளித்தமையை அண்ணாச்சி நினைவூட்டி அவையெல்லாம் தமக்கு உற்சாகம் அளித்ததாகவும் அதற்கான நன்றியுணர்வையும் பகிர்ந்தார்.அதேபோல எல்லோரும் சிங்கை நாதன் சிறப்புடன் சீரோடு வாழவேண்டும் என்றும் பிரார்த்தித்தார்கள்,
தொடர்ந்து முதன்முதலாக அமீரகபதிவர்கள் சந்திப்பில் இணைந்துகொண்ட வலைப்பதிவர் கவிஞர் ராஜா கமால் இன் கவிதைத்தொகுப்பு நூல் வெளியீடு இடம்பெற்றது,இந்த முதல் நூலை நண்பன் வாங்கி கௌரவித்தார்



தொடர்ந்து சுல்தான் அவர்கள் மற்றும் கிறுக்கல்களுக்கு சொந்தக்காரர் ஜெசீலா அவர்கள் வாங்கி கௌரவித்தார்கள்,
தொடர்ந்தும் உரையாடல்கள்,கும்மாளங்கள்,சூடான விவாதங்களின் நடுவில் நகைச்சுவைகள் என்று நகைச்சுவையாகவே தொடர்ந்துகொண்டிருந்தது,தொடர்ந்து ஒரு பாரம்பரிய நிகழ்வான கும்மியடி நிகழ்வு இடம்பெற்றது.அவற்றில் எல்லோரும் ஓரே நேரத்தில் அடிக்க வெளிக்கிட்டதால் அதை சரியாக அவதானிக்க முடியவில்லை என்றாலும் எல்லோரும் மிகவும் உணர்வுபூர்வமாகவும் உல்லாசமாகவும் இருந்தமை அவதானிக்கப்பட்டது,

வலைப்பதிவுகளில் விமர்சனங்களின் முக்கியத்துவமும் இல்லை இல்லை அவற்றை தனிப்பட்ட கருத்தாக எப்படியும் எடுக்கலாம் என்றவாறே விவாதங்கள் சூடு பறக்க தொடர்ந்தும் இரவு நேர உணவு பரிமாற நேரமும் வந்தது,அவரவர் விருப்பங்களுக்கு அமைவான உணவுகள் பரிமாற்றத்தோடு நிறைவுறும் நேரம்,
பதிவர்களும் சிறு சிறு குழுக்களாக வட்டமிருந்தறே தங்கள் கருத்துக்களை பகிர்ந்து விடைற்றுக்கொண்டிருந்தார்கள்.


எல்லோர் முகங்களிலும் மிக்க மகிழ்ச்சி,மீண்டும் எப்போது சந்திக்கலாம் என்ற கேள்வியை எல்லோரும் மனதில் கேட்டவர்களாய் விடைபெற்றார்கள்.


12 comments:

கிளியனூர் இஸ்மத் said...

அருமையாக பதிச்சிருக்கீங்க...

அகமது சுபைர் said...

நன்றாக அவதானித்து எழுதியுள்ளீர்கள். நன்று..

கோபிநாத் said...

\\சில பதிவர்கள் தங்களுக்கே பிடித்த உணவுகள் பழங்கள் என்பவற்றிற்கு கிட்டவாக அமர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது\\

;))))

மின்னுது மின்னல் said...

நல்ல அவதானிப்புகள் !!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான பதிவு தினேஷ்.

நேரில் பார்த்தது போல இருந்தது உங்கள் வர்ணனை. அங்கங்கே தூவப்பட்டுள்ள நகைச்சுவையை ரசித்தேன்.. உதாரணமாக கலையின் முன் வைக்கப்பட்ட தர்பூசினி பார்த்து நீங்கள் கூறிய..
//
சில பதிவர்கள் தங்களுக்கே பிடித்த உணவுகள் பழங்கள் என்பவற்றிற்கு கிட்டவாக அமர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது
//

:))

கலையரசன்.. said...

இலங்கை தமிழில் படிப்பதற்க்கே ஆனந்தமாக இருக்கிறது. நீங்களும் ஒரு முறை இஃப்தார் நிகழ்ச்சியை கண் முன்னே கொண்டுவந்துவிட்டீர்கள்!!

☀நான் ஆதவன்☀ said...

நீங்க எப்ப இவ்வளவு போட்டோ எடுத்தீங்க? எல்லாமே கலக்கல் :)

அருமையான தொகுப்பு

குசும்பன் said...

அருமை! ஆமா அடிக்கடி உங்களை கலை மிரட்டினாரே என்னா விசயம் அது?:)))

அது ஒரு கனாக் காலம் said...

Good report sir,....( sorry the google tamil link not working)...

துபாய் ராஜா said...

இந்த நேரத்தில் அமீரகத்தில் இல்லாதது வருத்தம்தான் என்றாலும் நிகழ்ச்சியை கண்முன் கொண்டுவந்த உங்கள் பதிவு மகிழ்ச்சியை தந்தது. வாழ்த்துக்கள்.

கரவைக்குரல் said...

வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி கிளியனூர் இஸ்மத்
நன்றி சுபைர்
நன்றி கோபிநாத்
நன்றி மின்னுதுமின்னல்
நன்றி செந்தில்வேலன்
நன்றி கலையரசன்
நன்றி ஆதவன்
நன்றி குசும்பன்
நன்றி அது ஒரு கனாகாலத்துக்கு சொந்தக்காரர் சுந்தர் ஐயா

எம் தமிழை ரசித்ததாக குறிப்பிட்டிருக்கிறீர்கள் கலை,
ரசனைக்கு நன்றி

ஆதவா உங்களுக்கு முன்னேதான் எடுத்தேன் இவ்வளவும்,அதுதான் நீங்க எல்லாம் இந்த போட்டோவில் (ஆங்கிலத்தில் புகைப்படம்)இருக்கிறீர்கள்

செந்தில் வேலா நான் குறிப்பிட்டு யாரையும் சொல்லவில்லையே?
நீங்கள் தான் வடலூரானை குறிப்பிடுகிறீர்கள்

குசும்பனே செந்தில்வேலன் சொன்ன பின் தான் புரிந்தது ஏன் மிரட்டினார் என்று,ஏனென்றால் எனக்கும் தர்பூசனியில் ஒரு பிடிப்பு,
அதுவாக இருக்கலாம் இல்லையா?

சரி எல்லோருக்கும் மீண்டும் நன்றி

கீழை ராஸா said...

நல்ல பதிவு...உங்கள் பார்வையில் சந்திப்பின் நிகழ்வுகளை அழகாக தொகுத்து உள்ளீர் வாழ்த்துக்கள்...