தென்கச்சி கோ.சுவாமிநாதனின் இழப்பு கவலையளிக்கிறது



காலை வேளைகளில் ஒவ்வொரு நாளும் இன்று ஒரு தகவலுடன் சந்திக்கும் தென்கச்சி கோ.சுவாமி்நாதன் இவ்வுலகை நீத்துவிட்டார் என்பது மிகக்கவலைதரும் விடயமாகும்.
பாடசாலைக்காலங்களின் நாங்கள் இருக்கும் போது காலைவேளையில் அப்படியும் இப்படியுமாக அவசரத்தில் காலையுணவு எடுக்கும்போதும் சுடச்சுட தேநீர் அருந்தும் போதும் ”இன்று ஒருதகவலுடன்” வந்துவிடுவார் தென்கச்சி அவர்கள்,அந்தக்காலங்களின் ஆகாச வானொலியின் செய்திகளையே எம்மவர்கள் கேட்பதுண்டு,அதன் பின்னர் ”இன்று ஒரு தகவலுடன்” சந்திப்பார் அந்தப்பெரியவர்,


வாழ்வியலில் முன்னேறத் தேவையான கதைகளே அவர் சொல்லும் கதைகள்,பொதுவாக அப்படியான கதைகள் இளம்பராயத்தில் யாரையும் கவர்ந்துவிடுவதில்லை எனினும் அவரின் கதை சொல்லும் பாங்குதான் எல்லோரையும் கவர்ந்திழுப்பதற்கு காரணம்,
ஆரம்பத்தில் அவர் ஏதாவது நடைமுறை உதாரணத்தை கூறுவார்,தொடர்ந்து தத்துவம் பகிர்வார்,அதைத்தொடர்ந்து ஒரு நகைச்சுவை விடயத்தை நடைமுறை வாழ்க்கையோடு இணைத்து கூறுவார், சொல்லும் பாங்கு எதிலும் சிறிதும் இடைவெளில் இல்லாமால் கேட்போரை சிறிதும் புலன் திரும்பாது இருக்கும் படியாக இருக்கும்.அதைவிட கதை முடிவு தான் எல்லோரையும் பேசவைக்கும்,அவரையும் உலகப்புகழில் பேசவைத்ததும் அவரின் கதைமுடிவுகள் என்று கூறலாம்,
அத்துடன் தென்கச்சி அவர்களின் குரல் வளமும் ஒரு வித்தியாசமான,சுவையான ஒரு கவர்ச்சியானதாகும், எந்த ஒரு பாடல்கள்,செய்திகள்,விளம்பரங்களுக்குமிடையில் தென்கச்சியின் குரல் ஒலிக்கும் போது எங்கிருந்தாலும் அதை உணரமுடியும், எங்கிருந்தாலும் உடனடியாக வானொலியை நோக்கி ஓடிவரச்செய்யும்,குரலிலேயே நகைச்சுவையும் சந்தோசமான இடங்களில் சந்தோசமும் வெளிபடுத்தக்கூடியவகையில் குரலின் தளதளம்பலுடன் ஒரு கம்பீரமிருக்கும்,

என் பாடசாலைக்காலங்களில் அவரின் கதையுடன் தான் நான் சைக்கிள் எடுத்துக்கொண்டு கல்லூரி நோக்கிப்போவது வழமை,அவரின் கதையின் நகைச்சுவையின் பரிமாறத்துடனேயே நாம் கல்லூரி செல்வதுண்டு,காலையுணவு எடுப்பதற்கு மறந்திருக்கிறோம்,ஆனால் இன்று ஒரு தகவல் கேட்பதற்க்கு மறந்ததில்லை,அப்படியாக கல்லூரி வாழ்க்கையில் எம்மோடு பின்னிப்பிணந்தவர் அந்த பெரியவர்,


அவரின் கதைகள் அன்னாரின் சொந்த ஆக்கங்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்,அவரின் கதைகள் கூட பாகம் ஒன்று, இரண்டு என்று பல பாகங்கள் என்று வெளிவந்திருக்கிறது,தான் வானொலியில் பகிர்ந்து கொள்ளும் தன் ஊரோடு கூடிய வட்டார மொழியிலேயே அந்த நூலை அவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது,ஆரம்பத்தில் வாசிப்பவர்களுக்கு சில வேளைகளில் வாசிக்கும் போது சொற்பதங்களின் கருத்துகள் உணர்ந்துகொள்வதற்கு கடினமாக உணந்தாலும் தொடர் வாசிப்பால் அந்த கதைகளின் உள்ளார்ந்த விடயத்தையும் நகைச்சுவைகளையும் உணரமுடியும் என்பது வெளிப்படையுண்மை,

தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும் தென்கச்சி அவர்கள் ”இன்றைய நாள் இனிய நாள்” என்ற ஒரு அம்சத்தை நேயர்களுடன் பகிர்ந்தவர்,அதிலும் பல்வேறு நேயர்களைக்கவர்ந்தவர்,
ஆனால் வானொலியிலேயே எம் கல்லூரிக்காலத்திலிருந்து எம்மோடு இணைந்தவர் என்று சொல்லலாம்,அவர் தகவலுடன் வரும் நேரம் இதற்கு முக்கிய காரணம் என்றும் சொல்லலாம்,

இப்படியாக எம் கல்லூரிக்காலத்தில் இணைந்திருந்த விடயங்களில் ”இன்று ஒரு தகவல்” கூட ஒரு முக்கிய அம்சமே,அதற்கு சொந்தக்காரர் எங்கள் தென்கச்சி கோ.சுவாமி நாதன் அவர்கள்,
அப்படி எம்மோடு இணந்திருந்த ஒருவரின் இழப்பு கூடித்திரிந்த ஒரு நட்பை இழந்துவிட்டதான கவலை,அவரின் இழப்பு புத்தம்புது தகவல்கள் மற்றும் வாழ்வியலின் படிப்பினைகள் தத்துவங்கள் தேடுபவர்களுக்கு பெரும் இழப்பு,மிகுந்த கவலைதரும் விடயம்,அவரின் கதைகளும் அதன் நூல்களும் குரல் வண்ணமு்ம் எப்போதும் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களி நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கும்

படம் ஹிந்து இணையத்தளம் நன்றி

7 comments:

  1. உங்களுக்கும் இத்தகைய அனுபவமா!
    சிறுவனாக இருந்தபோது, என் காதுகளில் ரீங்காரமிட்டு ஒலித்த குரலில் முதலில் வருவது தென்கச்சியினுடையதே! நண்பன் செய்தியைச் சொன்னதும் நான் சற்று ஆடித்தான் போய்விட்டேன்.

    ReplyDelete
  2. அவரி இழப்பு உண்மையில் கவலை அளிக்கின்றது:((((
    ஊடகங்கள் மூலம் அவர் எங்களுடன் வாழ்ந்து வந்தார்.

    ReplyDelete
  3. All India Radio சென்னை வானொலி நிலையத்தின் காலை மலரில் 7.15-7.25 செய்திகளுக்குப் பிறகுதான் வருவார் தென்கச்சியார். இடையில் சில விளம்பரங்கள் போடுவார்கள். விளம்பரங்கள் நீண்டால் கோபமாக இருக்கும். தென்கச்சியாரின் இன்று ஒரு தகவல் முடிந்த அடுத்த கணத்தில் சைக்கிள் ஏறினால் 7.55க்கு ஹாட்லியில் நிற்கலாம். 2002ம் ஆண்டோடு தென்கச்சியாரின் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது என்று நினைக்கிறேன் (தென்கச்சியார் ஓய்வு பெற்றார்). அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நான் பார்த்ததில்லை. பலரது பாடசாலைக் காலங்களோடு இணைந்திருக்கிறார் தென்கச்சியார்.. பேரிழப்புதான்


    இப்போதெல்லாம் சென்னை வானொலியில் 'காலை மலர்' போடுகிறார்களா தெரியவில்லை. தென்கச்சியாரோடு இன்னும் பல அருமையான நிகழ்ச்சிகள் போடுவார்கள். ஒரு கொஞ்சக்காலம் வைரமுத்து தன் குரலில் கொஞ்சக் கவிதைகள் வாசித்தார்.... ஹும்ம். எல்லாம் ஒரு காலம்

    ReplyDelete
  4. //உங்களுக்கும் இத்தகைய அனுபவமா!
    சிறுவனாக இருந்தபோது, என் காதுகளில் ரீங்காரமிட்டு ஒலித்த குரலில் முதலில் வருவது தென்கச்சியினுடையதே! நண்பன் செய்தியைச் சொன்னதும் நான் சற்று ஆடித்தான் போய்விட்டேன்.//


    அதே அனுபவம், நீங்கள் சொன்னதைக்கேட்டுவிட்டு விரைந்து வந்தேன் உங்கள் பதிவிற்கு,அவரைப்பற்றி இருக்கும் என்று,சற்று ஏமாந்து தான் போய்விட்டேன்,
    உங்கள் வரவிற்கு நன்றி ஊர்சுற்றி

    ReplyDelete
  5. //அவரின் இழப்பு உண்மையில் கவலை அளிக்கின்றது:((((
    ஊடகங்கள் மூலம் அவர் எங்களுடன் வாழ்ந்து வந்தார்.//

    உண்மையாக வேந்தன்
    உங்கள் கருத்துக்கும் வரவிற்கும் நன்றி

    ReplyDelete
  6. //All India Radio சென்னை வானொலி நிலையத்தின் காலை மலரில் 7.15-7.25 செய்திகளுக்குப் பிறகுதான் வருவார் தென்கச்சியார். இடையில் சில விளம்பரங்கள் போடுவார்கள். விளம்பரங்கள் நீண்டால் கோபமாக இருக்கும். தென்கச்சியாரின் இன்று ஒரு தகவல் முடிந்த அடுத்த கணத்தில் சைக்கிள் ஏறினால் 7.55க்கு ஹாட்லியில் நிற்கலாம்//

    சரியாகச்சொன்னீர்கள்

    //2002ம் ஆண்டோடு தென்கச்சியாரின் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது என்று நினைக்கிறேன் (தென்கச்சியார் ஓய்வு பெற்றார்). //

    இது எனக்குத்தெரியாது,அப்போ அதற்கு பின்னர் அப்படியான நிகழ்வு ஒன்று இருக்கவில்லையா?

    //பலரது பாடசாலைக் காலங்களோடு இணைந்திருக்கிறார் தென்கச்சியார்.. பேரிழப்புதான்//

    கதைகளை ஆவலோடு கேட்பவர்களுக்கு பேரிழப்பு

    ReplyDelete
  7. //இது எனக்குத்தெரியாது,அப்போ அதற்கு பின்னர் அப்படியான நிகழ்வு ஒன்று இருக்கவில்லையா?
    //
    அதற்குப் பிறகு 'இளசை சுந்தரம்' அந்த நிகழ்ச்சியை வழங்கினார்.

    மீண்டும் தென்கச்சியே சில வாரங்களுக்கு இன்று ஒரு தகவல் வழங்கினார் என்று ஞாபகம்(இது சரியா என்று தெரியவில்லை).

    கடைசியாக நான் அந்த நிகழ்ச்சியைக் கேட்டபோது இளசை சுந்தரம் அவர்கள் நடத்திக்கொண்டிருந்ததாத்தான் இன்றும் நினைவிருக்கிறது.

    இப்போது என்ன நிலவரம் என்று தெரியவில்லை.

    ReplyDelete