அக்காவும் சிரிச்சா தங்கச்சியும் சிரிச்சா

அந்தி மாலை நேரம்
கொழும்பு மாநகரத்திலே வெள்ளவத்தையில்,
'றோயல் பேக்கரி' களைகட்டும் நேரம்
அங்கும் இங்கும் முந்திக்கொண்டு
அலுவல் பார்க்கும் சனக்கூட்டம்
'நோ லிமிட்டுக்கு'(Nolmit)லிமிட்(Limit)இல்லாத பெருங்கூட்டம்

'லிட்டில் ஏசியாவுக்கு'(Little asia)
சின்ன ஆசியவே வந்து போகும்
'ஹோட்டல்சபாயர்க்கு'(hotel sapphire)முன்னாலே
கூடிக்கதைக்கும் வயதான குழு ஓன்று
என்ன கதைக்கினம் எண்டு யாருக்குமே தெரியாது

அங்கொரு இங்கொரு கூட்டமாய்
சந்தியிலே அரட்டை அடிக்கும் பொடியள் படை
குறட்டை விட்டாவது......................!
போற வாற சனத்தை
திரும்பி பார்க்க வைக்க துடிக்கும்
பார்த்தாலே போதும் என்றால் சிரித்தால் எப்படி இருக்கும்?
தங்கையோடு அக்காவாக இருக்க வேணும்
இரட்டை பிள்ளைகள் போல அழகுக்கும் குறைவில்லை!?
அன்போடு கதைபேசி
'வசந்தம் மிக்ஸ்சராக' இருக்க வேணும்
மென்று கொண்டு ருஷியாக
மெல்ல மெல்ல நடைநடந்து
உல்லாசமாக தமைமறந்து போகினம்

" சீ என்ன பழக்கம் இது
றோட்டு வழிய சாபிடுறது"
சீர்திருத்தும் கடுந்தொனியில்
கட்டழகு வாலிபனின் குரலொன்று!

"என்னடா சொல்லுறாய்
எதுக்கு நீ இப்ப சொல்லுறாய்" என்றதுபோல்
முறாச்சுக்கொண்டு அக்கா பார்க்க...........!
நக்கலால் வெட்கத்தோடு - முகச்
சினத்தோடு தங்கை நோக்க.................!

" என்னை கோவிக்க வேண்டாம்
டீச்சர் தான் சொன்னவா,
றோட்டு வழிய சாப்பிடுறது கூடாத பழக்கம் எண்டு
வேணுமென்றால் டீச்சரை கோவியுங்கோ"

கடும்தொனியை கொஞ்சம் தாழ்த்தி
சிறு குழந்தைபோல் செல்லமாய் சொல்ல

அக்காவும் சிரிச்சா அழகிய தங்கையும் சிரிச்சா

பார்த்தாலே போதும் என்ற வாலிபமனசுக்கு
சிரிச்சால் எப்பிடி இருக்கும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

4 comments:

PPattian said...

சுவையான கவிதை..

மார்க்கெட் கூட்டத்தையும்.. முன்னாலேயே இருக்கிற போலீஸ் ஸ்டேஷனையும் விட்டுட்டீங்க..:)

Mathu said...

haha Nice :)

Anonymous said...

Royal Bakery பக்கத்தில் உள்ள சைவர் கடை மறந்திட்டுது

சுபானு said...

அழகான கவிதை... வெள்ளவத்தைக்கு அப்படியே அழைத்துச் சென்றுள்ளீர்கள்... >3