கொஞ்சம் பொறுங்கோ அண்ணை நேரமில்லை

என்ன நேரமில்லையா?????


இது தான் இப்போது அடிக்கடி எல்லோருடைய வாயிலும் வரும் வசனங்களில் ஒன்று.அதை கொஞ்சம் எல்லோருக்கும் புரியக்கூடியபடி ஆங்கிலத்திலும் சொல்வார்கள்(buzy).
உண்மையில் அவர்கள் நேரமில்லாமல்தான் அலைகிறார்களா? அல்லது
நேரமில்லை நடிக்கிறார்களா என்பதில்லை இங்கு கேள்வி.
இந்த நேரம் ஏன் இல்லாமல் போக வேணும் என்ற கேள்வி தான் இந்த பதிவின் நோக்கம் .
பண்டைய காலங்களில் எந்தவித விஞான வளர்ச்சியும் இல்லாமல் வாழ்ந்த மனிதனுக்கும் இந்த இதே பேச்சு இருந்ததா என்ன?
எந்த இடத்துக்கும் நடையாய் சென்று தன் அன்றாட பணிகளையெல்லாம் செய்து மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்த மனிதனுக்கு இன்று எந்த பணிகளையும் மிக வேகமாக செய்யக்கூடியவாறு வசதிகளையும் பெற்றபின்பு ஏன் இந்த நிலைமை என்று தான் புரியவில்லை

உதாரணமாக ஒன்றைக்குறிப்பிட்டால் இப்போது எல்லோருடைய கைகளிலும் கைத்தொலைபேசி இன்றியமையாததொன்றாகி விட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.அதன் மூலம் வீட்டிலிருந்தவாறே எல்லோருடனும் உரையாடி தங்க தேவைகளை நிறை வேற்றுவதும் அறிந்து கொள்வதுமாக இன்றைய உலகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. முன்னைய காலங்களில் இவையெல்லாம் இருந்ததா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில்.அப்படியென்றால் எப்படி இன்றைய காலங்களில் நேரமில்லாமல் போகவேணும் . சிந்தித்துப்பாருங்கள்.

மனிதன் தேவையற்ற சிந்தனைகளை மனதுள் வளர்க்கிறானா?
வேண்டாத ஆசைகளை மனதுக்கு ஊட்டுகின்றானா?
மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி உணர்கிறானா?
தன்னை மற்றவர்கள் பெரிதுபடுத்தி எண்ணுவார்கள் என்று நினைக்கிறானா?
அளவுக்கு மிஞ்சிய வேலைகளை தோள்மேலே சுமக்கிறானா?
மற்றவர்கள் தன்னை வேலையற்றவர்கள் என்று எண்ணி விடுவாரோ என்ற கூச்சமா?
உண்மையில் நேரம் தான் போதாதா?

ஏன்தானோ புரியவில்லை.ஆனால் இன்று நேரமில்லை என்று எல்லோரும் அலைவது மட்டும் தான் உண்மை. இருபத்திநான்கு மணிநேரம் என்பது இன்றைய மனிதனுக்கு போதியளவு இல்லை என்பது மட்டும் புரிகிறது.ஆனால் இதை கூட்டிவிட்டால் மட்டும் அது போதுமா என்ற கேள்வியும் வரத்தான் செய்கிறது.
அதெல்லாம் சரி எனக்கு இதையெல்லாம் சொல்ல எனக்கும் நேரமில்லை.
நான் பிறகு வாறன்.
உங்களுக்கும் நேரம் இல்லாமல் இருந்தாலும் கொஞ்சம் நேரம் எடுத்து உங்கள் கருத்தை சொல்லுங்கோ

2 comments:

Anonymous said...

உலகத்தின் பின்னால் ஓடும் மனிதன் கடவுளுகேன்ரும் சில நேரம் குடுக்க வேண்டும்.அவரது பாதத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் பல.
போராட்டம் சூழ்ந்த இந்த உலகில் நாட்டுக்காக ஜெபிக்க அழைக்கபடுகிறோம்

Anonymous said...

ஒரு கருத்தை கூறும் போது ஏதோ சொன்னால் போதும் என்று நினைத்து கூறுவதை விடுத்து அது எப்பிடி மற்றவர் எண்ணங்களை சென்றடைய வேண்டும் .
என்ற சிந்தனையை திறம்பட கொண்டுள்ளீர் ..தங்கள் சிந்தனை வளம் சிறக்க வாழ்த்துக்கள் ...