அம்மா மேலான தெய்வம் நீங்கள்



அம்மா நீங்கள்
தெய்வத்துள் உறையும் தெய்வம் நீங்கள்
மேலான தெய்வம் நீங்கள்
என் உதிரத்தில் கலந்தவர் நீங்கள் அம்மா
அகிலம் வெல்லவைக்க
வளர்த்தெடுத்த ஆதாரம் நீங்கள்


புத்தகம் தூக்கிக்கொண்டு
புறப்பட்டதும்
கூடவந்த வழிகாட்டி நீங்கள்
துவிச்சக்கர வண்டி எடுத்தோடத்
துவங்கியதும் பின்னாலே
கவனமாக கூடவே வந்தீர்கள் அம்மா
அப்பாவிடம் சிலவேளைகளில்
அவ்வப்போது வாங்கிய ஒவ்வொரு அடியும்
எனது படிப்பினைகள் - அதில்
மனமும் கண்ணும் உங்களுக்கு
மெல்லவாக கலங்கியது
என் உந்துசக்தி

துடிக்கும் இதயத்தின் ஒவ்வொரு
துடிப்புக்கும் சொந்தக்காரி நீங்கள் தான்
உலகின் எதற்கும் ஈடாகாத
அன்பின் சுரபி
எம் எதிர்காலமே உங்கள்
எண்ணமாக
பரிவும் எம் உயிரில் கலந்த
பாசமாக
உங்கள் வாழ்க்கையை எமக்கே தந்த
எங்கள் வாழ்விலே இனிப்பவர் நீங்கள்

பாடசாலை விட்டதும்
ஒரு நிமிடம் பிந்திவிட்டால்
வீட்டு வாசலுக்கும் பின்னுக்கும் முன்னுக்குமாய்
"ஓடி ஓடி" இன்னும் வராத ஏக்கம் உங்களுக்கு
வந்ததும் அன்புடன் பரிமாறும்
உணவுக்கு நிகரேது அம்மா
இன்னும் உள்ளத்தில் பரிமாறும்
எண்ணங்கள் நிறையவே அம்மா
ஒவ்வொரு தினங்களும் உங்களுக்கே அம்மா
இன்று எல்லோரும் உங்களுக்காய் தினம்
அன்று என் கவிதையில் சில மட்டும்
எங்கும் எவரிடமும்
கிடைக்காத பாசம் -அதுவெம்
முன்னே வாழும் தெய்வம்
உங்களிடமிருந்து மட்டும் தான்
உங்களைப்பிரியா வரம் வேண்டும் எமக்கு
எப்பிறப்பிலும் உன்மகனாக

1 comment:

கோபிநாத் said...

அம்மாவை பற்றி என்ன எழுதினாலும் அழகு தான்...

மிக அருமையான கவிதை...

\\பாடசாலை விட்டதும்
ஒரு நிமிடம் பிந்திவிட்டால்
வீட்டு வாசலுக்கும் பின்னுக்கும் முன்னுக்குமாய்
"ஓடி ஓடி" இன்னும் வராத ஏக்கம் உங்களுக்கு\\

இதற்க்கு எல்லாம் என்ன செய்ய போகிறோம் நாம்...!!!