09-09-09 : வரலாற்றில் அமீரகம் தன் பெயரைப்பொறிக்கிறது
09.09.09 இந்த திகதிக்காக காத்திருந்து அந்த திகதியிலேயே பல்வேறு சவால்களுக்கும் முகம்கொடுத்து வெற்றிகரமாக வளைகுடா நாடுகளில் முதற்தடவையாக மெட்ரோ ரயில் தானியங்கி சேவை ஆரம்பித்து சாதனை படைக்கிறது ஐக்கிய அரபு இராச்சியம் அமீரகம்.பொதுவாக அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இந்த மெட்ரோ ரயில் சேவை இருக்கின்றது எனினும் வளைகுடா நாடுகளில் முதற்தடவையாக இதை தன் சேவைக்கு கொண்டுவர டுபாய் மாநகரம் தயாராகிவிட்டது. பொதுவாக சற்று வித்தியாசமாக தங்கள் வடிவமைப்புக்களும் அறிமுகப்படுத்தல்களும் இருக்க வேண்டும் என்று விரும்பும் அனைத்து வளகுடா நாடுகளைப்போலவே அமீரகம் டுபாயும் தனது ஆரம்பத்திகதியை 09.09.09 என்றவாறே தெரிந்தெடுத்து இரவு 09 மணி வரை காத்திருந்து அதை ஆரம்பிக்கிறது.ஆனால் 09மணி 09 நிமிடம் 09 செக்கன்களிலோ இந்த ஆரம்பம் என்று அறியக்கிடைக்கவில்லை.அது நடந்தாலும் ஆச்சரியபடுதற்குமில்லை.
குறுகிய காலத்து செயற்றிட்டத்தின் விளைவாக கிடைத்த இந்த சேவை என்றும் அதன் பயன் மிகப்பெரியது என்றும் பெருமைப்படுகிறது அமீரகம்,இதன் மூலம் பொருளாதாரத்தில் மிகவும் ஒரு முக்கியமான கட்டத்தின் ஒரு உன்னதமான நிலைக்கு நகரமுடியும் என்றவாறே தன் சேவையை ஆரம்பிக்கிறது.ஏறத்தாள முப்பாதாயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு தொழிலாளிகளின் ஒட்டுமொத்த செயற்பாடுகளும் மிக வேகமான செயற்பாடுகளும் இதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.இவர்களில் பெரும்பாலானோர் நம்மவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.அவர்கள் இந்த வேலைகளில் தங்களை இணைத்துக்கொண்டமை குறித்து பெருமைப்பட்டதையும் அவதானிக்க முடிகிறது.
அதுமட்டுமல்லாமல் நகரங்களின் வீதிப்போக்குவரத்தில் காணப்படும் வாகன நெரிசல்களை குறைக்க முடியும் என்பதோடு நேரம் என்பது முக்கியமான இந்த காலங்களில் இந்த ஆரம்பம் நேரச்சேமிப்பை உறுதிசெய்யும் என்பதும் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பாகும்.அதேபோல மூன்று பெரும் சர்வதேச விமான நிலையங்களுடன் இருக்கும் டுபாய் மாநகரம் அவற்றுடனான ரயில் சேவைத்தொடர்பு பிரயாணிகளின் வருகையில்,பயணத்தில் வரும் இடர்பாடுகளை தவிர்க்கமுடியும் என்று எண்ணபடுகிறது.இதன் மூலம் உல்லாசப்பயணிகளின் வருகையை அதிகரிக்க எண்ணுகிறது டுபாய்.அதன் முலம் உல்லாசப்பயணத்துறையையும் தன் பொருளாதாரத்தில் நம்பியிருக்கும் டுபாய் அதில் கூடியளவு வருமானத்தை ஈட்டமுடியும் என்றும் நம்புகிறது.
ஒட்டுமொத்தத்தில் மிகபெரிய ஆடம்பர வேலைப்பாடுகளுடன் காசைக்கொட்டி அதில் பெரும் பணியை முடித்திருக்கிறது டுபாய்.ஒவ்வொரு ரயில் நிலையங்களின் இறுதி வேலைப்பாடுகள் மிகவும் நேர்த்தியாகவும் ஆடம்பரத்தின் ஒட்டு மொத்த வடிவமாகவும் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
பச்சை,சிவப்பு என்று பெயர்களை சூட்டி தனது ரயில் பாதைகளை வடிவமைத்திருப்பதோடு தொடர்ந்தும் நீலம் மற்றும் நாவல் நிறங்களுடனான் பெயர்களுடன் வடிவமைக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது மெட்ரோ ரயில் சேவை அணி.
இவைகளோடு உலகத்தரங்களில் பல்வேறு நவீன தொழி்நுட்பங்களை உள்ளடக்கியதாக தானியங்கி ரயில் சேவையாக வருகிறது டுபாய் மெட்ரோ(DUBAI MEDRO),அதைவிட உலகத்தில் மெட்ரோ சேவையில் உள்ள ரயில்களில் மிகப்பெரிய ரயிலைக்கொண்டதும் இந்த டுபாய் மெட்ரோ ரயில்சேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் உலகின் மிகபெரிய கட்டடம்,மற்றும் மிகவும் வித்தியாசமான வடிவங்களுடனான கட்டடங்கள் என்று எல்லாம் பெருமையடையும் டுபாய் மாநகரம் இப்போது மெட்ரோ ரயில் சேவையையும் ஆரம்பித்து பெருமைப்படுகிறது.பல்வேறு நாடுகளிலும் எப்போதே ரயில் சேவைகள் காணப்பட்டாலும் அண்மையில் ஆரம்பித்த இந்த டுபாய் மெட்ரோ மிகவும் உன்னத நிலையில் வலம் வரும் என்பதில் ஐயமில்லை.தொழி நுட்பங்களில் பல்வேறு வருகைகளுக்கு பின் ஆரம்பிக்கப்பட்டதால் அவற்றின் தொகுப்பாக அமைந்திருக்கும் இந்த மெட்ரோ சேவை தொழி நுட்ப உலகில் ஒரு முக்கிய வருகை என்பதும் மறுப்பதற்குமில்லை.
இதிலை இன்னுமொரு விசயம் ”என்னடா இப்பதான் இந்த நாட்டிலை ரெயின் ஓடப்போகுதோ? எங்கடை நாட்டிலையெல்லாம் எப்பவே எந்த காலத்திலிருந்தே இருக்கெல்லோ” என்று பெரிய கொட்டாவி விடுவதும் விளங்குது,அது ஒவ்வொரு நாட்டினதும் தேவையில் தங்கியிருப்பதோடு மட்டுமல்லாமல் அதை எவ்வளவு தொழிநுட்பங்களின் சேர்க்கையாக சேவை அமையப்பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய அம்சங்களாகும்.
இந்தப்பதிவை எனக்கும் சரியாக 09.09.09 ஆம் நாள் ஒன்பது மணி ஒன்பது நிமிடம் ஒன்பது செக்கனுக்கு போடாலாம் என்று ஒரு எண்ணம்,டுபாய் மெட்ரோ(DUBAI MEDRO) ஆரம்பித்து அது ஓட வெளிக்கிட நானும் பதிவேற்றி ஓடலாம் என்ற எண்ணத்தில் சரியாக ஐக்கிய அரபு இராச்சியம் அமீரக நேரத்தில் பதிவேற்றப்படுகிறது.இந்த புகைப்படங்கள் ஐக்கிய அரபு இராச்சியம் அமீரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் Gulf News இலிருந்து பெறப்பட்டது, நன்றி Gulf News
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
அருமையான பதிவு!
ஆனால் டுபாய் பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறது என்று கேள்விப்பட்டேனே? அப்போது இது எப்படி?
துபாய் மெட்ரோவைப்பற்றி ஒரு தெளிவான தொகுப்பை வழங்கி உள்ளீர்கள்.....வாழ்த்துக்கள்
அருமையான பகிர்வு நண்பா. அதுவும் சுடச்சுட :)
//இதிலை இன்னுமொரு விசயம் ”என்னடா இப்பதான் இந்த நாட்டிலை ரெயின் ஓடப்போகுதோ? எங்கடை நாட்டிலையெல்லாம் எப்பவே எந்த காலத்திலிருந்தே இருக்கெல்லோ” என்று பெரிய கொட்டாவி விடுவதும் விளங்குது,அது ஒவ்வொரு நாட்டினதும் தேவையில் தங்கியிருப்பதோடு மட்டுமல்லாமல் அதை எவ்வளவு தொழிநுட்பங்களின் சேர்க்கையாக சேவை அமையப்பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய அம்சங்களாகும்.//
உண்மை தான் தினேஷ்....
(சென்ற வாரம் கவியரங்கு வருவிங்கன்னு எதிர் பார்த்தேன்..???)
அவசரத்தில் பிழையாய் அடித்துவிட்டீர்கள் போல DUBAI MEDRO அல்ல Dubai Metro!
ஆகா...கலக்கல் போஸ்டு ;))
நிறைய பயன் தரும் இந்த ரயில் சேவை.
விரைவில் ரயில் கூட ஒரு பதிவர் சந்திப்பு வச்சிடுவோம் ;)
அருமையான தொகுப்பு தினேஷ்..
அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்!
கிரீஸ் நாட்டிலிருந்து வந்த அன்பருக்கு நன்றிகள்
ஆதித்தன் டுபாய் பொருளாதார நெருக்கடியால் கொஞ்சம் பாதிக்கப்பட்டது உண்மைதான்,அதாவது கட்டட நிர்மாணத்துறைகள் மட்டுமே மிகக்கூடிய அளவில் இருந்ததால் அந்த துறையில் ஒரு ஆட்டம் கண்டது.
ஆனால் போக்குவரத்துத்துறையின் முக்கியத்துவம் கருதி இதில் நடந்துகொண்டிருந்த செயற்றிட்டத்தில் எந்த வித ஆட்டமும் இல்லாமல் வெற்றிகரமாக முடிவுபெற்றிருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதித்தா
கருத்துக்கும் வரவுக்கும் நன்றி கிளியனூர் இஷ்மத்
பதிவைப்பற்றிய கருத்துக்கு நன்றி செந்தில்வேலா
கீழை ராஸா கவியரங்குக்கு வரமுடியவில்லை என்பது எனக்கும் கவலைதான்,கவியரங்கு ஒருபுறமிருக்க சாப்பாடை நினைக்க பெரும் கவலையாக இருந்தது,வேலைகளால் இருந்த நேரமின்மையால் கலந்துகொள்ள முடியவில்லை,இனிவரும் காலங்களில் கலந்துகொள்ளுவேன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஆமாம் DUBAI METRO என்று தான் அமைத்திருக்கவேண்டும் NANO
உங்கள் கருத்துக்கும் வரவுக்கும் நன்றி NANO
கலக்கல் போஸ்ட் என்று பொய் வேறு கூறிய கோபினாத்
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
கலையரசன் வரவுக்கும் அருமை என்று கூறிவிட்டீர்களே அதுக்கும் நன்றி,
குசும்பன் உங்கள் வரவுக்கு நன்றிகள் பல
கருத்துக்கும் நன்றி
படம் அழகு. நானும் பயணித்தேன். பதிவாக எழுத எண்ணம்.
உங்கள் அழைப்புக்கு நன்றி 'கரவை'
நல்ல ஒரு பதிவு... அதிகமான தகவல்களை உள்ளடக்கித்தந்துள்ளீர்கள்...
வாழ்த்துக்கள்
பிரியமுடன்
டயானா
http://wisdomblabla.blogspot.com/
நல்ல முயற்சி பாராட்டுகள்
Post a Comment