பணம் அல்ல குணமே வாழ்க்கை-சுட்டிக்காட்டிய வானவில்


வானவில்
நோர்வேயிலிருந்து வெளிவருகின்ற வானவில் இப்போது லண்டன்
ஐரோப்பிய தேசமெங்கும் பெறக்கூடியதாக இருக்கிறது.வித்தியாசமான
வடிவில் வெறுமனே அரசியல் சார்ந்த விடயங்களுக்கு மட்டும் முன்னுரிமை
கொடுக்காமல் பல அம்ச விடயங்களைஉள்ளடக்கி வானவில்
வெளிவந்துகொண்டிருக்கிறது.
பலதுறை சார்ந்த எழுத்துகளுக்கான இடைவெளி புலத்து தேசத்து
சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளில் இருக்கின்றது என்ற எண்ணத்தை
கருத்தில் கொண்டு ஒவ்வொரு துறைசார் வல்லுனர்களையும்
அவர்களுக்கான பலதுறை சார்ந்த ஆழமான அறிவினை பலதரப்பட்ட
மக்களுக்கும் கொண்டு செல்லவேண்டும் என்ற மிகப்பெரிய சவாலோடு
வெளிவந்துகொண்டிருக்கிறது வானவில்.
இந்த மாத இதழில் பல் துறை சார்ந்தவர்களுக்கான பகிரங்க அழைப்பை கூட
விடுத்திருக்கிறது வானவில்.அந்த அந்த துறைகளில் ஈடுபாடு மற்றும்
ஆழமான அறிவு உடையவர்கள் ஒவ்வொரு பகுதியாக மக்கள் மத்தியில்
பரவவிடும் எண்ணம் இருந்தால் அதற்கான களங்களை உருவாக்க வானவில்
தயாராக இருக்கும் எண்ணத்தை பதிவு செய்திருக்கிறது.
இவை புலத்தில் பல் துறை சார் தமிழ் சஞ்சிகை அல்லது பத்திரிகைக்கான
இடைவெளியை குறைக்கும் என்பது ஆசிரியர் குழுவின் எண்ணம்.
வானவில்லின் ஆரம்ப காலங்கள் இதுவாகையால்
எழுத்தாளர்கள்,ஆர்வலர்கள்,வாசகர்கள் என்று பலதரப்பட்டவர்களின்
கருத்துகளை மிகபெரியளவில் எதிர்பார்க்கிறது வானவில் ஆசிரியர் குழு.


அதற்கான விடயங்களை வானவில்லின் உத்தியோகபூர்வ இணையத்தளம்
சென்று பார்க்க முடியும்.
அழுத்துங்கள் இங்கே வானவில்
பேஸ் புக்கில் வானவில்
கடந்த வானவில்லில் எனது பதிவையும் உள்வாங்கியிருந்தது
மிக்க நன்றிகள் வானவில்லுக்கு
சுட்டிவிரல் என்ற பகுதியினூடாக சுட்டிக்காட்டிய விடயத்தை இன்று
கரவைக்குரல் பதிவு செய்கிறது.


சுட்டி விரல்

பணமல்ல குணமே வாழ்க்கை
உறவுகளும் அவர்களுடனான பிணைப்பும் அதில் கிடைக்கும்
சந்தோஷமான வாழ்க்கையும் யாரும் அறியாததொன்றல்ல.உறவுகள்
என்பது சொந்தத்தினூடாக வருவதுமல்ல.அது தனது சமுதாயம் வரை
உறவுப்பிணைப்புகள் நீளும்.அந்த உறவுபிணைப்புகளில் இருக்கும் உறவு
நிலைகள் தாயகத்திற்கு என்று ஒரு வகையும் புலத்திற்கு என்று
ஒருவகையும் இருக்கபோவதுமில்லை.அப்படியாக அமைந்துவிட்டால் அது
எங்கோ தங்கள் அடையாளங்களை தொலைத்து வேறு பாதைகளில்
சமுதாயம் சென்றுகொண்டிருக்கிறது என்று தான் எண்ணத்தோன்றும்.

புலத்தில் ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்ப பணமானது கிடைக்கும்.
உழைத்து வாழ வேலை கிடைக்காவிட்டால் அந்தந்த வாழும் நாடுகளின்
அரசாங்கம் அவர்களை ஏதோவொரு கட்டுப்பாடுகளுடன் அவர்களுக்கான
பணத்தேவையை ஓரளவு நிறைவு செய்துகொண்டிருக்கிறது.

இவை ஒருபுறமிருக்க வாழ்ந்துகொண்டிருக்கும் மற்றவர்களுடனான
அன்புப்பரிமாறல்களும் பாச உணர்வுகளும் பகிர்ந்துகொள்ளபடுகிறதா
என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுகிறது.இவைதான் ஒரு சமுதாயப்
பிரிவினைகளுக்கான உந்துதலாகத்தான் அமையப்போகிறது.
தாயகம் கடந்து அந்த சமுதாய இருப்பிடம் தாண்டி வேறு புலத்தில்
நிற்கும்போது அங்கு அந்த சமுதாய அடிப்படைவிடயங்களுக்கான
சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படும்போது ஒரு காலத்தில் அந்த சமுதாயம்
பேசாத ஒரு பொருளாக மாறிவிடும் என்பதை எமது சமுதாயம் உணர
மறுக்கின்றது என்பதே இன்றைய கவலை.
அதுவும் வாழ உறுதியான பணவலிமையை ஏதோவொருவகையில்
பெற்றுவிடலாம் என்ற சூழலில் வாழுகின்றவர்கள் தாயகத்தில் வாழ்கின்ற
மகிழ்ச்சியை பெற்றுவிட தேடியலைகின்ற சூழல் ஏன் வருகிறது?
உண்மையில் அடிப்படை விடயங்களை நோக்கும் போது  பணம் என்பது
தேவையானதே, பணத்தாலே மட்டும் மகிழ்வான வாழ்க்கையை
பெற்றுவிடலாம் என்று அற்பத்தனமாக யாரும் நினைப்பார்களா என்றும்
தெரியவில்லை. அதைவிட மகிழ்வான வாழ்க்கை என்பதை பணத்தைவிட
உற்றவர்கள் மற்றவர்கள் மீது காட்டும் அன்பு பாசப்பரிமாறல்கள் அதனூடான
பண்பு என்றும் மகிழ்வைத்தரும் என்பது யாரும் அறியாத விடயமுமல்ல.
ஆனால் புலத்தில் ஒரு சிறிய மனக்கசப்புகளே அல்லது சின்ன சின்ன
புரிந்துணர்வற்ற தன்மைகளே சமுதாயபிரிவினைகளுக்கு
வழிவகுக்கின்றமை சமுதாயப்பாதையை கேள்விக்குறியாக்குகின்றது.

ஊரோடு இருக்கும் காலங்களில் அக்கம்பக்கம் சிலவேளைகளில்
மிகப்பெரிய சண்டைகள் வந்தாலும் அவர்களிடத்தில் ஏதோ ஒரு பிணைப்பு
என்றும் இருக்கும்.புலத்தில் வாழ்கின்ற எமது சமுதாயமும் ஒரே மொழியால்
இனத்தால் ஒன்றிவிட்டபோதும் ஏன் இப்படியாக
மாறுபடுகிறது.அன்பு,பாசம்,இரக்கம்,புரிந்துணர்வு என்பனவெல்லாம்
சிதைந்து பண ஆசை விஞ்சுகிறது என்பதையே சுட்டிக்காட்டவேண்டிய
தேவையெழுகின்றது.

ஓரணியாக திரண்ட இனம் இப்போது சின்னாபின்னமாகி சிதைந்து
போகுமோ என்று சிந்திக்குமளவுக்கு புரிந்துணர்வற்ற போக்கு நிலைகள் காணப்படுகிறது.

சாதரணமாக பாதையோரத்தில் இருந்து உயர்வாக கொள்ளப்படும்
அமைப்புக்கள் வரை சமுதாயத்தில் உள்பிரிவினைகள்
விரிந்துகொண்டேபோகிறது.
புலத்தில் அவை ஒரு வெட்கக்கேடான செயற்பாடுகளாக
விரிந்துகிடக்கின்றது
.உதாரணங்கள் சொல்லி அதை ஒப்புவிக்கவேண்டியதுமில்லை.
அவை சாதாரண ஒவ்வொரு மனங்களும் மௌனமாக நினைத்து
அழுகின்ற விடயங்களாகவோ அல்லது வாய்களால் இவைகளைப்பற்றி
பேசி பேசி பேசிப்பலனில்லை என்று மனம் வெதும்பும்  விடயங்கள்.
தொடர்ந்தும் கைவிடப்பட்ட விடயங்களாக மாறுமேயானால் சமுதாயம்
அடையாளம் தெரியாத இனமாக இன்னும் காலங்களில் மாறிவிடலாம்.

ஒவ்வொரு சமுதாயத்துக்குமான அடையாளம் அந்த மொழி அதன்
கலாச்சாரங்கள் அழிக்கபடமால் எவ்வளவுதூரம் பாதுகாக்கபடுகிறதோ
அவ்வளவுதூரம் அந்த இனம் வாழும் என்பது உண்மை.அந்த உண்மைய
புரிந்துகொண்ட சமுதயாமாக புலத்தில் உண்மையான புரிணர்வை நாடி
செல்ல வேண்டும்.அதைவிடுத்து எங்கள் பணம் எங்கள் வாழ்க்கை என்றும்
நாம் செல்லும் பாதை சரியானதே என்றும் பிடிவாதத்தோடு செல்லும் போக்கு
சொந்த பந்த  பாசங்கள் அறுந்து தமிழ் சமுதாயம் என்று புலத்தில் அற்ற ஒரு
சமுதாயம் என்ற நிலை வந்துவிடும்காலம் தொலைவில் இல்லாது வெகு
சீக்கிரம் வந்துவிடலாம் .அது தம்மை தாமே சுட்டுக்கொண்டு சமுதாயம்
அழிக்கும் நிலைக்கும் தள்ளிவிடும் என்று சுட்டிவிரல் சுட்டிக்காட்டுகிறது.

நன்றி வானவில்