விடைபெற்ற அமீரகம்- வரவேற்ற இங்கிலாந்து

பல்வேறு அனுபவங்களைத்தந்த அமீரகத்துக்கு அண்மையில் விடைகொடுத்து தொடர்ந்து இங்கிலாந்து மண்ணில் சில காலம் உலாவுவதற்கு அனுமதிகிடைத்திருக்கிறது,
இங்கு இங்கிலாந்து வரவேற்றிருப்பது ஒரு வகையில் இருக்க அமீரகத்தில் கிடைத்த அனுபவங்களோ மிக அதிகம்,இங்கிலாந்தில் எப்படியான அனுபவங்கள் கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பும் அதேபோல அவற்றுள் பல விடயங்கள் ”அப்படி இருக்கும் இப்படி நடக்கும்” எம்முடன் கூடியிருப்போரால் எடுத்துச்சொல்லப்படுகின்றன என்பது ஒருபுறமிருக்க அமீரகத்துக்கான வருகையில் கிடைத்த அனுபவங்கள்,அங்கு வாழ்ந்த காலங்களில் தந்த அனுபவங்கள்,பார்த்த விடயங்கள்,ரசித்த அம்சங்கள், மெய்சிலிர்த்த அம்சங்கள்,கேட்கவேண்டும் என்று நினைத்த பல கேள்விகள்,கேட்ட சில கேள்விகள்,அதைவிட வயிறுகுலுங்க சிரித்த விடயங்கள் என்று பல விடயங்கள் விடைபெற்ற அமீரகத்திலடங்கியிருக்கின்றன.


அவற்றில் சொல்ல முடிந்தவற்றை நினைவிலிருப்பவற்றை தொடர்ப்பயணமாக பாலவனத்தில் பயணம் என்று உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமென்று நினைக்கின்றேன், நேற்றுவரை மிக்க சூட்டுடன் வாழ்ந்து இன்று திடீரென்று குளிராக்கினால் எப்படி ஒரு பொருள் இறுகிப்போகுமோ அப்படியாக இறுகிவிட்டேன் என்றாலும் உங்கள் ஆதரவுடன் அந்த பயணம் தொடரும்,
அது பாலைவனத்தில் ஒரு பயணம்,

இங்கிலாந்து வந்தவுடன் பல சுவாரஷ்யமான விடயங்கள் இருந்தாலும் சில சுவாரஷ்யமான அனுபவங்கள்,நாட்டுக்கு வந்து கைவிரலால் எண்ணக்கூடிய நாள்கள் மட்டுமே,அதாவது நான்கு நாள்கள்,



அதில் நானும் என் மனதும் ரசித்துச்சிரித்தவை பல,அவற்றுள் சில இவை

பொதுவாக வளைகுடா நாடுகள் வெப்ப நிலை அதிகமான நாடுகள் என்பது எல்லோருக்கும் தெரியும்,சூட்டிலிருந்து வந்த நான் இப்ப கடும் குளிராக்கிடக்கு எண்டு சொல்லுது என் மனசு,கடும் வெப்பநிலையிலிருந்து சடுதியாக மாறிய மாற்றம் என்பதனாலோ என்னவோ,ஆனால் இது தான் குளிர் காலத்தின் ஆரம்பம் என்று எல்லாரும் சொல்லுகினம்,
ஐயோ கடவுளே இதைவிட இன்னும் குறையப்போகுதோ எண்டு யாரையும் விடாமல் கேட்டுப்போட்டன்,

மற்றது முதற்கட்டமாக 20 ஸ்ரேலிங்க் பவுண் தண்டம் கட்டிப்போட்டன் பாருங்கோ, நான் விட்டது பிழையோ அவர் விட்ட பிழையோ யார் விட்ட பிழையோ எனக்குத்தெரியாது,ஆனால் கட்டிப்போட்டன்,முந்த நாள் தான் வந்தன் எண்டு சொல்ல கேட்டானே அவன்,”இல்லை தா“ எண்டு கேட்டான் நான் குடுத்திட்டன்.”ஏன் குடுத்தது எப்படி குடுத்தது” என்பது எண்ட விசயம் அது என்னோடையே இருக்கட்டும்,ஆனால் ஒண்டு மட்டும் சொல்லுறன் எந்த ஒரு விசயத்தையும் ”பிளான்”(Plan) பண்ணி செய்யிறது மட்டுமில்லாமல் எல்லாத்தும் ஓம் எண்டு சொல்லி தலை மட்டும் ஆட்டக்கூடாது எண்டது தான் இப்ப நான் எடுத்த முடிவு பாருங்கோ

அதைவிட இன்னுமொரு சுவாரஷ்யவிடயம்
பொதுவாக இங்கு ரயில் வண்டியில் தான் எல்லோரும் பயணம்,
அப்பிடி ஒருநாள் நானும் ஒரு பயணி,எனக்கு பக்கத்திலை ஒரு பயணி,
”அட இவரை எங்கையோ கண்ட மாதிரி இருக்கே” எண்டு என்னுடைய மனசு சொல்லுது, நானும் அவரை வைச்ச கண் வாங்காமல் பார்க்கிறன்,அப்ப அவரும் பார்க்கிறார்,ஆனால் ”கதைக்கட்டோ” எண்டு மனசு சொன்னாலும் அந்த மனமே தடுக்குது ”சீ சீ வேண்டாம்” எண்டு,
ஆனால் அந்த மனுசனோ நான் பார்க்க ரயில் வண்டியின்ரை முகட்டை பார்க்கிறார்,
”என்னடா இந்த மனுசன் இப்படி செய்யுது” எண்டு ”இவர் யார்”எண்டு நினைச்சு பார்க்கிறன்,
”எனக்கு படிப்பிச்ச வாத்தியார் யாருமோ” எண்டும் என்ரை மனசு கேட்கிறது,
கடைசியிலை தான் அவர் யார் எண்ட முடிவுக்கு வந்தன் பாருங்கோ,
அந்த மனுசனை நான் ஒரு நாள் மேடையிலை பார்த்திருக்கிறன்,ரி வி வழிய அவரைப்பற்றியும் அவர் கருத்துச்சொல்லுற விசயங்கள் கேட்டிருக்கிறன்,ஆனால் அவருக்கு பக்கத்திலை நான் இருப்பன் எண்டு கனவிலையும் காணவில்லை,அப்பிடி அந்த மனுசன் பெரிய மனுசன்,எங்கடை நாட்டிலை எண்டால் அவர் எனக்கு கிட்ட இருக்கவே மாட்டார்,அந்த மனுசன் இண்டைக்கு எனக்கு பக்கத்திலை இருக்குது எண்டு நினைச்சுத்தான் அந்த எண்ணம்,
அவர் யாருமில்லை ””சுப்பர்ஸ்ரார் ரஜனிகாந்தின் விருதுபெற்ற ஒரு திரைப்படமும் அதேபெயரை அந்தக்கால திலகத்துக்கும் அதுதான் பெயர்”,எனக்குப்பக்கத்திலை இருந்தவருக்கும் பெயரின் முதல் மூன்று எழுத்துக்களும்”” அதுதான் பாருங்கோ,
உங்களுக்கு விளங்கியிருக்காமல் விடுமா என்ன?
அவரிடம் பலகேள்விகள் கேட்கலாம் என்று நினைத்திருந்தாலும் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கம்,
ஆனால் அவர் என்னை ஏன் கடைக்கண்ணால் பார்த்தார் எண்டு தான் எனக்கு இன்னும் விளங்கவில்லை,????

இப்படியாக வந்துவிட்ட நான்கு நாள்களில் வந்துவிட்டவற்றுள் சில இவை,வந்தாச்சு எல்லோ
எல்லாமே அனுபவித்து ரசிக்க வேண்டும்,

ஏலவே குறிப்பிட்டதைப்போல பாலைவனத்தில் பயணம் காலங்கள் எல்லாம் கூடிவர தொடர்ந்து வரும்,மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம்.

18 comments:

Unknown said...

வாழ்த்துக்கள் அண்ணை.... அந்த ஆள் ஆரெண்டு சொல்லண்ணை. என்ன மாதிரி மர மண்டையள் இருக்கிற் இடத்தில நீங்கள் இப்பிடி புதிரெல்லாம் போட்டால் என்னெண்டு... அவர் எங்கட ஊர் எண்டால், உவர் மலர்விழி அக்காவின்ர புருசனே????

கோபிநாத் said...

என்ஜாய் ! ;))

ம்ம்ம்...தொடர் எழுதி கலக்குங்கள் ;)

அந்த மனிதர் ஒர் அளவுக்கு கண்டுபிடிச்சிட்டேன் இருந்தாலும் நீங்களே சொல்லிடுங்க ;)

கிளியனூர் இஸ்மத் said...

உங்கள் பாலைவனத்தில் பயணம் கட்டுரை சிறப்பாக வருவதற்கு வாழ்த்துக்கள்....ஆங்கிலநாட்டு அனுபவம் அருமை...

குசும்பன் said...

கரவை குரல் அங்கிருந்து வர ஆம்பித்துவிட்டதா? வாழ்த்துக்கள்.

அப்புறம் அந்த கிசு கிசு எல்லாம் புரியவில்லை.

DJ said...

அவ‌ரொரு எம்பியாக்கும் :-)

அகமது சுபைர் said...

உங்கட கதை கேக்கேக்க எண்ட கதையொன்னு மனசில் வருதண்ணை. உங்கட கதை காண ஆவலாய் இருக்கண்ணை.

ரூபன் தேவேந்திரன் said...

"ஏழை வாலிபர் நிதியத்திற்கு" சேர வேண்டிய 10 பவுண்சை குடுத்து இருந்தால், இப்படி 20 பவுண்ஸ் போயிருக்காது. எனவே உடனடியாக இந்த மாதத்திற்குரிய பணத்தை நிதியத்தில் சேர்த்து, கிழவிதோட்ட பிள்ளையாரின் அருளை பெறவும் :)

வினோத் கெளதம் said...

என்ஜாய் பண்ணுங்க..:)

கரவைக்குரல் said...

//வாழ்த்துக்கள் அண்ணை.... ///

நன்றி தம்பி


///அந்த ஆள் ஆரெண்டு சொல்லண்ணை. என்ன மாதிரி மர மண்டையள் இருக்கிற் இடத்தில நீங்கள் இப்பிடி புதிரெல்லாம் போட்டால் என்னெண்டு... அவர் எங்கட ஊர் எண்டால், உவர் மலர்விழி அக்காவின்ர புருசனே????///

புதிர் ஒண்டும் போடவில்லை தம்பி
வடிவா விளக்கமாகத்தான் போட்டிருக்கு என்ன?
மலர்விழி அக்காவை தெரிஞ்ச உங்களுக்கு அவாவின்ரை புருஷன்ரை பெயர் தெரியாமல் போனதோ ??????????????/

கரவைக்குரல் said...

////என்ஜாய் ! ;))

ம்ம்ம்...தொடர் எழுதி கலக்குங்கள் ;)//

கலக்கமுடிந்தால் கலக்குவம்,நே ரம் கிடைக்க வேணுமே ?

//அந்த மனிதர் ஒர் அளவுக்கு கண்டுபிடிச்சிட்டேன் இருந்தாலும் நீங்களே சொல்லிடுங்க ;)///


கண்டுபிடிச்சால் போதுமே
பெயர் நேரடியாக சொல்லக் கூடாதே

கரவைக்குரல் said...

//உங்கள் பாலைவனத்தில் பயணம் கட்டுரை சிறப்பாக வருவதற்கு வாழ்த்துக்கள்....//

நன்றி
நேரம் கிடைக்க கிடைக்க எழுதுவம்

ஆங்கிலநாட்டு அனுபவம் அருமை...

நான் தண்டம் கட்டினதும் அருமையோ ஹீஹிஹிஹ்

கரவைக்குரல் said...

//கரவை குரல் அங்கிருந்து வர ஆம்பித்துவிட்டதா? வாழ்த்துக்கள்//

நன்றி குசும்பரே

//அப்புறம் அந்த கிசு கிசு எல்லாம் புரியவில்லை.//

வரமுன்னரே கிசுகிசுக்கின்றீர்களே ஹிஹிஹிஹி

கரவைக்குரல் said...

//அவ‌ரொரு எம்பியாக்கும் :-)//

கருத்தை கச்சிதமாய் கவ்விக்கொண்டீர்கள் போங்கள் DJ

கரவைக்குரல் said...

//உங்கட கதை கேக்கேக்க எண்ட கதையொன்னு மனசில் வருதண்ணை. ///

மனசிலை வந்தால் மட்டும்போதாது
சொல்ல வேணும் என்ன?
சொல்லுங்கோ கேட்க ஆவலாய் இருக்கிறோம்

//உங்கட கதை காண ஆவலாய் இருக்கண்ணை//

காலங்கள் கூடிவர எல்லாம் வரும்

கரவைக்குரல் said...

//"ஏழை வாலிபர் நிதியத்திற்கு" சேர வேண்டிய 10 பவுண்சை குடுத்து இருந்தால், இப்படி 20 பவுண்ஸ் போயிருக்காது. எனவே உடனடியாக இந்த மாதத்திற்குரிய பணத்தை நிதியத்தில் சேர்த்து, கிழவிதோட்ட பிள்ளையாரின் அருளை பெறவும் :)///

சம்மந்தப்பட்ட பிரச்சாரம் உங்களின் பெயரை மையப்படுத்தி நடந்து கொண்டிருக்கிறது.
வெகுவிரைவில் தகவல்கள் கரவைக்குரலில் வெளியாகும்

கரவைக்குரல் said...

//என்ஜாய் பண்ணுங்க..:)//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தங்க முகுந்தன் said...

வணக்கம்! இவ்வார யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவரானமைக்கு எமது வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி!

maruthamooran said...

கரவை குரல் அங்கிருந்து வர ஆம்பித்துவிட்டதா? வாழ்த்துக்கள்.

யாழ்தேவியின் நட்சத்திர வாரத்துக்கும் வாழ்த்துகள்.