வாங்கப்போனது என்ன? கிடைத்தது என்ன?



"இண்டைக்கு விடியக்காத்தாலை எழும்பி முழிவியளத்திற்கு யாரிலை முழிச்சனோதெரியாது"எண்டு,மண்டையை போட்டுடைத்துக்கொண்டிருந்தாராம் நம்மவர்.
”எங்கையோ போய் கொண்டிருந்த என்னை கலைச்சுக்கொண்டு வந்தானே, என்ன கஷ்டகாலம் என்னைக்கலைச்சுக்கொண்டு வந்ததோ” என்று அழாத குறையாக சொல்லிக்கொண்டிருந்தார் நம்மவர்.

"என்னடா என்ன நடந்தது" எண்டு நண்பன் கேட்டால் சொல்லுறாரேயில்லை.

"டேய் உனக்குள்ள யோசிக்காமல் என்ன நடந்தது எண்டு சொல்லு,அப்பத்தான்.. உனக்கு மனசுக்கு நிம்மதியாக இருக்கும்" எண்டு இன்னுமோர் நம்மவரான அவரின் நண்பர் கேட்க

”டேய் நான் நடந்ததை நினைச்சு சிரிக்கவோ அல்லது எந்நிலையை யோசிச்சு அழவோ"என்று மண்டையப்போட்டு உடைத்தபடியே இருந்தார்.
" அப்பவும் முந்த நாள் அம்மா சாஸ்திரம் பாத்துப்போட்டு சொன்னவா,இப்ப ஏழரை சனியன் கூடிக்கிடக்குது எண்டு ,ஆனால் இப்படி சனியன் விடுதேடிவந்து குந்தியிருக்கும் எண்டு யாருக்கு தெரியும்?நல்லூர்முருகா............."என்று வேண்டித்திட்டாத தெய்வங்களுமில்லை


"இவன் என்னடா ஒண்டுமே சொல்லுறான் இல்லையே" என்று நினைத்த நண்பரான நம்மவர் தன் புலனாய்வினை முடுக்கிவிட்டபோது கிடைத்த கதைதான் இது


விடியற்காலையில் வழமை போலவே பல்கலைக்கழகத்துக்கு புகையிரதம் மற்றும் பஸ்சில் பயணம் செய்வதுபோல் அன்றும், ஆனால் சற்று தாமதமாக வீட்டிலிருந்து புறப்பட்டதால் கொஞ்சம் அவசரமாக பஸ்சில் ஏறுவதும், புகையிரதத்தை ஓடிபிடிப்பதுமாக, பாதைகளை கடப்பதுமாக பல்கலை நோக்கி ஓடுகிறார் நம்மவர்.
ஒருவேளை பாதையொன்றினை குறிக்கிடுவதற்காக இரண்டுபக்கமும் பார்க்கும்போது காரினுள் இருக்கும் இரு இளைஞர்களின் அழைப்பு,
தன்னத்தான் அழைக்கிறார்களோ தெரியாது என்ற பெரிய சந்தேகம் இருப்பதால் அவர்களை என்னவென்று கேட்பதா என்றவாறான ஒரு சின்ன எண்ணம்.
என்றாலும் ”இந்த நாட்டிலை ஆயிரம் பேர் இருப்பாங்கள் என்னத்துக்கு சும்மா கதைச்சு வீண்வம்பு” என்று நினைத்த நம்மவர் சற்று விலகிச்சென்றாராம்.

ஆனாலும் நம்மவரை நோக்கி அவர்களின் கார் நகர்கிறது.
”இதென்ன ஆக்கினையெடாப்பா” என்றவாறு நின்று என்ன என்று பார்த்தராம் நம்மவர்.

ஏனென்றால் நம்மவர் ”அச்சம் என்பது மடமையெடா அஞ்சாமை திராவிடர் உரிமையெடா” பரம்பரையிலிருந்து வந்தவரல்லவா. நின்று பார்த்தாராம் ஒரு பார்வை.
ஆனாலும் வந்த அந்த இளைஞர்கள் மிகவும் சிரித்த முகத்தோடு இருக்க ஒரு இளைஞர் ஒரு பெட்டியுடன் எழுந்து வந்து அந்த பெட்டியை திறந்து காட்டினால் அதற்குள் ஒரு அழகிய மடிக்கணனி(லப் டொப்).
”இதை நான் விற்கப்போகிறேன் உங்களுக்கு வேணுமா? கடையிலை வாங்கினால் 400 பவுணுக்கு கிட்ட வரும், எனக்கு 200 பவுண் தந்தால் போதும்” என்று சொல்ல
நம்மவருக்கு ”இதை வாங்கினால் என்ன” என்று என்ற சின்ன எண்ணம்.
என்றாலும் "சிலவேளைகளில் ஏமாற்றக்கூடியவர்களுக்கும் இந்த லண்டனில் குறைவில்லை சும்மா ஏமாத்துவார்கள் என்ற பயம்"
"இருந்தாலும் வாங்கலாமா என்று பரிசோதித்துபார்ப்போம்" என்று பரிசோதிக்க ஆரம்பித்தார் நம்மவ்ர்.

பரிசோதிக்கும்போது நம்மவருக்கு அது பிடித்துவிட்டது.இதை எப்படியாவது விலையைக்குறைத்தேனும் வாங்கியேயாக வேண்டும் என்று மனதிற்குள் முடிவெடுத்தவராய்
"இப்ப என்னிடம் நீங்கள் கேட்கும் பணம் இல்லை, இன்னும் விலையைக்குறைத்தால் வாங்கலாம்" என்று நம்மவர் சொல்ல விலை நிர்ணயிப்பிற்கான பேச்சுக்கள் ஆரம்பமகியதாம்.
இறுயிதில் இதற்கான முடிவு எட்டப்பட்டு அந்த ,மடிக்கணணி நூற்றியைம்பது பவுண்களுக்கு தருவதாக அந்த இளைஞ்ன் சம்மதிக்க "பணம் எடுப்பதற்கு வங்கிக்கு நம்மவர் செல்ல வேணும்" என்று சொல்ல நம்மவரை அவர்கள் தங்கள் காரிலேயே ஏற்றிக்கொண்டு சென்றார்களாம்.
நம்மவருக்கு எப்படி அந்த காரில் ஏறும் அளவுக்கு அந்த துணிச்சல் வந்தது என்றால் அந்த மடிக்கணணியில் இருக்கும் ஆர்வத்தை தவிர வேறொன்றுமில்லை.

பல்கலை செல்வதற்கு புறப்பட்ட நம்மவர் அதற்கு செல்லாமல் மடிக்கணனி வாங்கும் கனவு நனவாகிறதே என்ற ஆர்வத்தோடு வங்கியில் பணம் எடுத்தவராய் மீளவும் மடிக்கணணியை பரிசோதிக்கிறார்.கணனிகள் பற்றிய அறிவு சற்று நிறைந்த இந்த நம்மவர் தாறுமாறான கேள்விகளால் பரிசோதித்தாராம்.
நிறைவான பதில்கள், தரமான மடிக்கணணி என்ற நிறைந்த மனதோடு மடிக்கணணியை பெட்டியோடு வாங்கியபடி வீட்டுக்குவந்தார்.
வீட்டுக்குவந்து நண்பர்களுடன் வெறும் நூற்றியைம்பது பவுண்களுக்கு வாங்கிவிட்ட மடிக்கணணியை பற்றிய கதையோடு மடிக்கணணியை ஆரம்பிக்க ஆர்வத்தோடு திறக்கிறாராம். ஆர்வத்துடன் திறந்தவருக்கு ஆச்சரியம் தான் காத்திருந்தது!!!!!!!!!????????

என்னடா ஆச்சரியம் என்றால்
சிலவேளைகளில் எதிர்பார்க்காத திறன்கள் மடிக்கணணியில் காணப்பட்டிருக்கும்
.மடிக்கணணி திறக்கும் பொது "டமார்" என்று வெடித்திருக்கும்.
மடிக்கணனியின் உள்ளே சில வேளைகளில் மின்கலம் (பற்றரி) இல்லாது இருந்திருக்கும்.(என் றாலும் பரிசோதிக்கும்போது இருந்திருக்குமே)
ஆனால் அப்படி ஒன்றுமே நடக்கவில்லையாம்
அப்ப ஏன் தான் நம்மவர் மண்டையைபோட்டுடைக்கிறார்.

உண்மையில் பெட்டியை திறந்தவருக்கு ஆச்சரியம் இல்லை ஏமாற்றம் தான் காத்துக்கிடந்தது. பெரியளவு பணங்கொடுத்து பெரியளவு எதிர்பார்போடு திறந்த அவருக்கு பெட்டியினுள் வெங்காயம் தான் கிடந்தது.


வெங்காயம் மிகச்சிறப்பாக பொதியடைக்கப்பட்டு மடிக்கணணி வரும் பெட்டிக்குள்ளேயே சிறப்பாக பொதிசெய்யப்பட்டிருந்தது.உண்மையில் அந்த வெங்காயத்தின் விலை பத்து பவுன்களும் பெறமாட்டாது.

"இறுதிவரை மடிக்கணணியை பரிசோதித்த நம்மவருக்கு பெட்டிக்குள் வெங்காயம் வந்தது எவ்வாறு?"
"வெங்காயம் வாங்குவதற்காக பல்கலையும் போகாமல் நேரத்தையும் செலவழித்து இறுதியில் பணத்தையும் இழந்துவிட்டேனே"
என்றவாறு நம்மவர் ஏமாறிய முகத்தோடு குழம்பியபடி மண்டையைப்போட்டுடைத்தார்.
"போனது போகட்டும் இனி ஆகவேண்டியதைப்பார்க்க வேண்டும்" என்று மனதை திடம்படுத்தி
இப்போ அடிக்கடி சொல்லும் இந்த நம்மவர் அந்த ஏமாற்றும் இளைஞர்களை தேடித்திரிகிறார்.

இந்த சம்பவம் உண்மைச்சம்பவமே.இவ்வாறான சம்பவங்கள் லண்டனில் இடம்பெறுவதாக சொல்லப்படுகின்றன.பிரபலமான வானொலியொன்றில் ஒரு நிகழ்ச்சியில் கூட ஒரு நேயர்
"ஏமாற்றம்" பற்றிய சுவாரஷ்யமான கருத்துப்பகிர்வின் போது இதேவிடயம் குறிப்பிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இது இன்னுமொருவர் இவ்வாறு புலம்பெயர் தேசத்தில் ஏமாற்றப்படகூடாது என்ற நோக்கத்துடனும் இது படிப்பினையாக இருக்கும் என்ற எண்ணத்துடனும் பதிவிடப்படுகிறது.

தம்பி நொண்ட நொண்ட அக்கா இருக்க சொல்ல



"மோதர மோதர மட்டக்குழிய"
"மோதர மோதர மட்டக்குழிய"
மோகனக்குரலால் கூவியழைக்கிறார்
கொண்டக்டர்

வேகமாக ஓடும் பஸ்ஸையும்
பம்பலப்பிட்டி சந்தியிலை
லாவகமாய் மறிச்சு வைத்து
பக்குவமாய் அழைக்கிறார்
கொண்டக்டர்

விழுந்தடிச்சு ஓடிவந்து
ஏறிய இளைஞர் அணி
வந்த சனம் போதுமெண்டு
"அண்ணை ரைட்" சொன்னார்
கொண்டக்கடர்

''முன்னுக்குப்போ முன்னுக்குப்போ''
சத்தம் போட்டு கத்தினாலும்
"லங்காவே" சனமெல்லோ
காதுக்கு கேட்டால்தானே
சலித்தபடியே கொண்டக்டர்???????

சலித்தாலும் காசு வாங்க மறக்கமாட்டார்

மெல்ல மெல்ல தேரூர்வதுபோல்-கொழும்பு
பல்கலையும் ஓடிக்கடந்து
மருதானை வழி நோக்கி ஓடினாலும்
மறிச்சு வைத்து சனம் ஏத்த நல்லமனம்
கொண்டக்டர்....

சனம் கொஞ்சம் குறைந்துவிட
ஏறிய இளைஞர் படை
இருக்கை எல்லாம் ஆக்கிரமி்ப்பு

மருதானை வந்தவுடன்
மெல்ல மெல்ல நடை நடந்து
புன்னைகை அவள் முகத்தில் பரவ
மெதுவாக பஸ் ஏறும் இளநங்கை

நல்ல ஒரு வளத்தியவள்
நின்ற படி பஸ்ஸின் கைப்பிடி
எட்டுதில்லை நங்கைக்கு
பஸ் ஆடும் பக்கமெல்லாம்
கால் வைத்து ஆடியபடி
நிலை தடுமாறும் இளநங்கை

“என்ன பழக்கமிது இந்த பொடியள்
எங்கதான் படிச்சுதுகளோ” என்று
”பொம்பிளைபிள்ளையது படும்பாடு தெரியவில்லையோ” என்று
கூடி நிக்கும் சனமெல்லாம் ஒரு பார்வை பார்க்க

நம்மவர் மெல்ல எழும்பி
”இருக்கோ அக்கா “ என்று சொல்லியபடி
நொண்டி நொண்டி அசைகிறாராம்
”ஐயையோ ஐயையோ் ,இங்க வாங்கோ”
’’மெல்லவாக இருங்கோ தம்பி’’
””உங்களுக்கு இல்லாத சீட் என்ன தேவை எனக்கு””
கலக்கத்துடன் சங்கடத்தில் இளநங்கை

”அந்த ஏலாத பொடியனுக்குள்ள புத்தி கூட
இந்த பொடியளுக்கில்லையோ” என்று
வந்து நின்ற சனமெல்லாம் புறுபுறுக்க

“ஏலாத கட்டமிது- என்
நண்பன் நடித்துவிட்டான்
கெட்டிக்காரன் ”
என்று நினைத்தபடியே
கூடவந்த இன்ன்ரொருவர்
எழுந்துகொள்ளும் நிர்ப்பந்தம்

எழும்பினார் மற்றவர்!!!!!!!!!!!!!!!!

நங்கையவள் சிம்பிளாக நன்றிதனை சொல்லியபடி
உட்கார்ந்தாள் இருக்கைதனில்
முன்னாடி இடம்விட்ட
நொண்டிய நம்மவருடன்
அன்புபேசி நன்றி பகிர்ந்து
பஸ்சிலே பயணம்

இருக்கைக்காக நொண்டியதன்
சிரிப்பு ஒருபக்க மனதில்
அன்பு மொழி பேசிய இள
நங்கையவள் பேச்சும் மறு பக்க மனதில்

”மோதர மோதர மட்டக்குழிய
மோதர மோதர மட்டக்குழிய”
பஸ் உம் ஓடுது இங்கு
மனதும் கற்பனையில் ஓடுது





குறிப்பு: அண்மையில் சிறிலங்கா கொழும்பில் மட்டக்குழி-கல்கிஸ்ஸ பாதையில் ஊர்ந்துகொண்டிருக்கும் 155 பஸ்சில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி வதன நூலில் நண்பி ஒருவர் "எவன் மனிதன்" என்ற கருவின் கீழ் நடந்த ஒரு விடயத்தைப்பற்றி குறிப்பிட்டிருந்தார்.அந்த அம்சத்தோடு கொஞ்சம் என் கற்பனைக்கும் இடங்கொடுத்து அமைந்த பதிவுதான் இது.