தம்பி நொண்ட நொண்ட அக்கா இருக்க சொல்ல



"மோதர மோதர மட்டக்குழிய"
"மோதர மோதர மட்டக்குழிய"
மோகனக்குரலால் கூவியழைக்கிறார்
கொண்டக்டர்

வேகமாக ஓடும் பஸ்ஸையும்
பம்பலப்பிட்டி சந்தியிலை
லாவகமாய் மறிச்சு வைத்து
பக்குவமாய் அழைக்கிறார்
கொண்டக்டர்

விழுந்தடிச்சு ஓடிவந்து
ஏறிய இளைஞர் அணி
வந்த சனம் போதுமெண்டு
"அண்ணை ரைட்" சொன்னார்
கொண்டக்கடர்

''முன்னுக்குப்போ முன்னுக்குப்போ''
சத்தம் போட்டு கத்தினாலும்
"லங்காவே" சனமெல்லோ
காதுக்கு கேட்டால்தானே
சலித்தபடியே கொண்டக்டர்???????

சலித்தாலும் காசு வாங்க மறக்கமாட்டார்

மெல்ல மெல்ல தேரூர்வதுபோல்-கொழும்பு
பல்கலையும் ஓடிக்கடந்து
மருதானை வழி நோக்கி ஓடினாலும்
மறிச்சு வைத்து சனம் ஏத்த நல்லமனம்
கொண்டக்டர்....

சனம் கொஞ்சம் குறைந்துவிட
ஏறிய இளைஞர் படை
இருக்கை எல்லாம் ஆக்கிரமி்ப்பு

மருதானை வந்தவுடன்
மெல்ல மெல்ல நடை நடந்து
புன்னைகை அவள் முகத்தில் பரவ
மெதுவாக பஸ் ஏறும் இளநங்கை

நல்ல ஒரு வளத்தியவள்
நின்ற படி பஸ்ஸின் கைப்பிடி
எட்டுதில்லை நங்கைக்கு
பஸ் ஆடும் பக்கமெல்லாம்
கால் வைத்து ஆடியபடி
நிலை தடுமாறும் இளநங்கை

“என்ன பழக்கமிது இந்த பொடியள்
எங்கதான் படிச்சுதுகளோ” என்று
”பொம்பிளைபிள்ளையது படும்பாடு தெரியவில்லையோ” என்று
கூடி நிக்கும் சனமெல்லாம் ஒரு பார்வை பார்க்க

நம்மவர் மெல்ல எழும்பி
”இருக்கோ அக்கா “ என்று சொல்லியபடி
நொண்டி நொண்டி அசைகிறாராம்
”ஐயையோ ஐயையோ் ,இங்க வாங்கோ”
’’மெல்லவாக இருங்கோ தம்பி’’
””உங்களுக்கு இல்லாத சீட் என்ன தேவை எனக்கு””
கலக்கத்துடன் சங்கடத்தில் இளநங்கை

”அந்த ஏலாத பொடியனுக்குள்ள புத்தி கூட
இந்த பொடியளுக்கில்லையோ” என்று
வந்து நின்ற சனமெல்லாம் புறுபுறுக்க

“ஏலாத கட்டமிது- என்
நண்பன் நடித்துவிட்டான்
கெட்டிக்காரன் ”
என்று நினைத்தபடியே
கூடவந்த இன்ன்ரொருவர்
எழுந்துகொள்ளும் நிர்ப்பந்தம்

எழும்பினார் மற்றவர்!!!!!!!!!!!!!!!!

நங்கையவள் சிம்பிளாக நன்றிதனை சொல்லியபடி
உட்கார்ந்தாள் இருக்கைதனில்
முன்னாடி இடம்விட்ட
நொண்டிய நம்மவருடன்
அன்புபேசி நன்றி பகிர்ந்து
பஸ்சிலே பயணம்

இருக்கைக்காக நொண்டியதன்
சிரிப்பு ஒருபக்க மனதில்
அன்பு மொழி பேசிய இள
நங்கையவள் பேச்சும் மறு பக்க மனதில்

”மோதர மோதர மட்டக்குழிய
மோதர மோதர மட்டக்குழிய”
பஸ் உம் ஓடுது இங்கு
மனதும் கற்பனையில் ஓடுது





குறிப்பு: அண்மையில் சிறிலங்கா கொழும்பில் மட்டக்குழி-கல்கிஸ்ஸ பாதையில் ஊர்ந்துகொண்டிருக்கும் 155 பஸ்சில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி வதன நூலில் நண்பி ஒருவர் "எவன் மனிதன்" என்ற கருவின் கீழ் நடந்த ஒரு விடயத்தைப்பற்றி குறிப்பிட்டிருந்தார்.அந்த அம்சத்தோடு கொஞ்சம் என் கற்பனைக்கும் இடங்கொடுத்து அமைந்த பதிவுதான் இது.

6 comments:

S.M.S.ரமேஷ் said...

கவித கவிதை!!

ஜீவன்பென்னி said...

நல்லாயிருக்கு.

வடலியூரான் said...

கவிதை,கவிதை பிரமாதம்..

கருணையூரான் said...

அவ கதையாக எழுதியதை நீங்க கவிதையாக்கியது உங்கள் திறமை வாழ்த்துக்கள்

கரவைக்குரல் said...

S.M.S.ரமேஷ்
///கவித கவிதை!!///

ம்ம்ம்..................


ஜீவன்பென்னி
/////நல்லாயிருக்கு.////

நன்றி ஜீவன்பென்னி

வடலியூரான்
///கவிதை,கவிதை பிரமாதம்.////.

ஆகா பிரமாதமா??????????
நன்றி வடலியூரான்

கருணையூரான்
///அவ கதையாக எழுதியதை நீங்க கவிதையாக்கியது உங்கள் திறமை வாழ்த்துக்கள்///

நன்றி கருணையூரான்

tharani strfm said...

romba atputham..............