கரவெட்டி ---குறிப்புக்கள் சில

கரவெட்டி ;



வதிரி உடுப்பிட்டி துன்னாலை கரணவாய் என்று பெயர் சொல்லக்கூடிய கிராமங்களை எல்லையாக கொண்டு வடமராட்சியில் ஒரு முக்கிய கிராமம் தான் இது.

இந்த கரவெட்டியில் நெல்லியடி,சம்மந்தர் கடையடி,கிளவிதோட்டம்,
யார்க்கரை,அத்துளு,கட்டைவேலி என்றவாறாக சிறு சிறு
கிராமக்குடிகளை கொண்டு விளங்குகிறது. ஊர் வழக்கில் நெல்லியடியை கரவெட்டி என்று சொல்லுவதில்லை. அதை நெல்லியடி என்றே சொல்லிக்கொள்ளுவார்கள்.

கேவளை, தூவெளி, நுகவில் வயல் பகுதி, சாமியன் அரசடி, கொவில்சந்தை, போன்றவற்றை எல்லை கோடுகளாக கொண்டு அழகிய கிராமமாக விளங்குகிறது

இதில் கேவளை சந்தி முந்தி ஒரு முக்கியமான இடமாக இருந்திருக்கின்றது.
ஏனென்றால் சாவகச்சேரி ஊடாக முந்தி பஸ் ஓடிய காலத்தில் கனகம்புளியடி, கப்பூது,அந்தணதிடல் ஊடாக இந்த சந்திக்குதான் பஸ் எல்லாம் வந்து போறதாம்.அது மட்டும் இல்லாமல் யாழ்ப்பாணம் நகரத்திலிருந்து போற பஸ் கூட புத்தூர் வழியாக வந்து கப்பூது வந்து இந்த சந்தி வந்து தான் பருத்தித்துறை போகும். அப்படியாக இந்த சந்தி ஒரு முக்கியமான ஒரு இடமாக விளங்கியிருந்தது என்றால் மிகையாகாது.


அதுமட்டும் இல்லாமல் இந்த சந்தியை ஆயம் என்றும் ஆயக்கடவை என்றும் ஆயச்சந்தி என்றும் சொல்லுவது வழமை. கரவெட்டியின் பெயர் வரக்காரணம் இந்த ஆயக்கடவை என்றும் சொல்லப்படுகிறது.அதாவது நாட்டின் உள்ளூர் வழிகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி கூடிய கவனம் செலுத்திய ஒல்லாந்தர்கள் இந்த இடத்தில் கிரவெட்(Gravet) நிறுவியிருந்தார்கள். இந்த கிரவெட்(Gravet) தான் பின்னர் திரிவடைந்து கரவெட்டியானது என்றும் ஒரு சான்று கூறப்படுகிறது. ஆனால் இன்றுவரை சரியான ஒரு காரணம் அறியப்பட்டதாக தெரியவில்லை.

எதுஎப்படியாகயிருப்பினும் இந்த கரவெட்டியின் தெற்கு வாயிலாக இருந்த ஆயக்கடவை அன்றும் இன்றும் ஒரு முக்கியமான தளமாக இருந்துகொண்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால் இதனூடாக பஸ் ஓட்டங்கள் கொஞ்சம் இப்ப கொஞ்சம் குறைந்துவிட்டது.

கரவெட்டியில் கோவில்களுக்கும் குறைவு இல்லை என்று தான் சொல்ல வேண்டும், வெல்லனிற்பிள்ளையார் கோவில்,கிளவிதோட்டம் விநாயகர் கோவில்,தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் கோவில்,யார்க்கரை விநாயகர் கோவில்,அத்துளு அம்மன் கோவில்,நுணுவில் பிள்ளையார் கோவில்,சாமியன் அரசடி வைரவர் கோவில் என்று கோவில்களின் பெயர் படலம் சென்றுகொண்டே இருக்கிறது.
விநாயகர் வழிபாடு, மற்றும் அம்மன் வழிபாடு இங்கு முக்கியத்துவம் பெற்று விளங்குவதோடு கிராமிய தெய்வங்கள் வழிபாடும் இங்கு காணப்படுகிறது.

கரவெட்டியில் அறிவுசார் விருத்திக்காக பாடசாலைகளுக்கும் குறைவில்லை.கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி, கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்,கட்டைவேலி யார்க்கரை விநாயகர் வித்தியாலயம்,திரு இருதயக்கல்லூரி என்று பாடசாலைகளும் விளங்கி இருக்கிறது. இந்த பாடசாலைகள் கரவெட்டியில் பல்வேறு அறிவாளிகளை உருவாக்கி கரவெட்டியின் திறமைசார் பொக்கிசங்களாக இருப்பது இங்கு நினைவுகூரவேண்டிய ஒன்று.

இப்படியாக கரவெட்டி பற்றி நான் அறிந்த விடயங்களை எனது முதல் தொகுப்பாக தருகின்றேன்.இன்னும் விடயங்கள் அறியும் போது உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவேன்.அது மட்டும் இல்லாமல் இன்னும் பல வேறு விடயங்களுடன் அவ்வப்போது நான் உங்களை சந்தித்துகொண்டே இருப்பேன்

8 comments:

தாசன் said...

\\கரவெட்டியில் அறிவுசார் விருத்திக்காக பாடசாலைகளுக்கும் குறைவில்லை.கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி, கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்,கட்டைவேலி யார்க்கரை விநாயகர் வித்தியாலயம்,திரு இருதயக்கல்லூரி என்று பாடசாலைகளும் விளங்கி இருக்கிறது. இந்த பாடசாலைகள் கரவெட்டியில் பல்வேறு அறிவாளிகளை உருவாக்கி கரவெட்டியின் திறமைசார் பொக்கிசங்களாக இருப்பது இங்கு நினைவுகூரவேண்டிய ஒன்று.\\

நன்றி கரவைக்குரல். மீண்டும் ஒரு முறை உங்கள் பதிவு ஊடாக கரவெட்டிக்கு சென்று வந்த மகிழ்ச்சி. தொடர்ந்து பதிவு செய்யுங்கள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஞாபகம் வருதே.....ஞாபகம் வருதே.....காற்ச்சட்டை இல்லாமல் திரித்த நினைவுகள்.

நன்றி நண்பரே உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.

தாசன் said...

உங்களின் பதிவை கண்டு மகிழந்தேன். தொடர்ந்து பதிவு செய்ய என் வாழ்த்துக்கள்.

உடுவை எஸ். தில்லைநடராசா said...

கரவைக்குரல் என் வாழ்த்துக்கள்.

சினேகிதி said...

கல்யாணி மிஸ்ட வீட்டுக்கு வரும்போதுதச்சந்தோப்புப் பிள்ளையார் கோயிலுக்கு வந்திருக்கிறேன்.

விக்னேஸ்வராப் பள்ளிக்கூடமும் தெரியும் மற்றொண்டும் தெரியேல்ல.

காரணப்பெயர் பற்றிய விளக்கம் நல்லா இருக்கு.

BOOPATHY said...

கரவெட்டி பற்றிய சிறிய அறிமுகம் அருமை. வாழ்த்துக்கள்
அத்துளுக்குளம், வயல்வெளி, நல்லதண்ணி கிணறுகள் இவைபற்றி சொல்லவே இல்லை. ம்..... தண்ணியை கண்டால் பயம் என்று புரிகிறது.

கரவைக்குரல் said...

நன்றி தாசன் வாழ்த்துக்கு

உங்கள் வாழ்த்துக்கள் என்னை பெருமிதம் அடையச்செய்கிறது நன்றி உடுவை எஸ் தில்லை நடராஜா

நன்றி சினேகிதி உங்கள் பகிர்விற்கும் வரவிற்கும்
தண்ணியைக்கண்டால் பயம் தான்
அந்த சுனாமிக்கு பிறகு
நன்றி பூபதி வாழ்த்துக்கும் வரவிற்கும்

Unknown said...

எனக்கு உங்கள் பகிர்வு கண்டு பெருமையாக இருக்கிற்றது கரவை சென்று வந்தது போல் ஒரு உணர்வு. இருந்ந்தாலும் நல்ல தண்ணீர் கிணற்றை மறந்ததேனோ?