காலிமுகத்திடலில் பனைகள்









யாழ்ப்பாணத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று பனை ஆகும். இந்த பனை ஒரு கற்பகதருவாக இருப்பது உங்கள் யாவருக்கும் தெரிந்த ஒன்று தான் .அதன் பனங் கிழங்கு என்பதிலிருந்து அதன் பனையோலை வரை மனிதனுக்கு பலவழிகளில் உதவுவனவாகத்தான் அமைந்திருக்கிறது.

தென்னிலங்கையிலிருந்து யாழ் வரும் விருந்தினர்கள் அல்லது பயணிகள் எல்லோரும் பனையின் பயனை அனுபவிக்காமல் வீடு திரும்பமாட்டார்கள். பனங்கள்ளை சுவைக்க அவர்கள் எந்த மூலைக்கு சென்று வரவும் தயங்கமாட்டார்கள். ஏனென்றால் "அவர்களுக்கு இங்கு கித்துள் கள் தான் கிடைக்குமாம். அத்துடன் பனங்கள்ளின் சுவையே தனியாம்" இது தென்னிலங்கை மக்களின் கருத்து. இந்த பனங்கள்ளின் சுவையறிந்தது மட்டுமல்லாமல் பனையின் பல்வேறு பயன்களையும் அறிந்து அதை தென்னிலங்கையே கொண்டுவந்தால் தமக்குச்சரி என்று எண்ணியோ அல்லது இதற்காக யாழ்ப்பாணத்தை நம்பியிருக்கக்கூடாது என்று சிந்தித்தோ என்னவோ அதை கொண்டுவர வேண்டும் என்று விரும்பியிருந்திருக்கலாம் தென்னிலங்கை. பெரிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது போல காட்சிப்படுத்தி அதை காலிமுகத்திடலில் நாட்ட தீர்மானித்தார்கள். உல்லாச பிரயாணிகளை கவரும் என்ற அடிப்படையில் காலிமுகத்திடலில் நாட்ட பெரிய திட்டம் . யாழ்ப்பாணத்திலிருந்து பனையோடு அதற்குரிய மண்ணையும் கொண்டுவந்து நாட்டினார்கள். அது மிகக்கஷ்டப்பட்டு தான் மெல்ல மெல்ல வளர்ந்து சில சந்தர்ப்பங்களில் பட்டுப் போகும் நிலையில் காணப்படுகிறது என்பது தான் உண்மை. அந்த பனையே யாழில் இருந்திருந்தால் அது விறு விறு என்று வளர்ந்து இப்போது கள் இல்லை சகல பயனும் அனுபவித்திருக்கலாம்

அதுதான் எங்கெங்கு என்னென்ன வளர முடியும் என்று விதிமுறை இருக்கிறதல்லவா? அதெனடிப்படையில் என்ன தான் குறிப்பிட்ட பிரதேச வளங்களை வேறு எங்கும் எடுத்துச்சென்று அதனை பயன் தருமாறு திணித்தாலும் அதன் பயன் அனுபவிப்பது கடினம். மாறாக அதனை பராமரிக்க வேறு விதமாக செலவழிக்க வேண்டிவரும் என்பது புரிந்திருக்கும்

3 comments:

Anonymous said...

உங்கள் கருத்துக்களை வித்தியாசமான அணுகுமுறையோடு நகைச்சுவையோடு வெளிப்படுத்தும் வித்தியாசமான எழுத்தாளராக இருக்கின்றீர்கள்.
எங்கள் வாழ்த்துக்கள் கரவைக்குரலுக்கு

தாசன் said...

(உங்கள் கருத்துக்களை வித்தியாசமான அணுகுமுறையோடு நகைச்சுவையோடு வெளிப்படுத்தும் வித்தியாசமான எழுத்தாளராக இருக்கின்றீர்கள்.
எங்கள் வாழ்த்துக்கள் கரவைக்குரலுக்கு)

நண்பரே உங்கள் கருத்து நன்று.

சீ.....என்ன இது. சின்னப்பிள்ளையை போல பெயரை சொல்லாமல் வாழ்த்து சொல்லும் பழக்கம்.

கரவைக்குரல் said...

உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு கிடைப்பதையிட்டு எனக்கு மகிழ்ச்சி.

அதோடு உங்கள் இனிய பெயரையும் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

நன்றி