நல்ல அனுபவம் கேளுங்கோ.
நடுராத்திரியிலை வரும் எண்டு யார் தான் நினைச்சது.
கனவில்லை பாருங்கோ,
நீங்கள் நடுராத்திரி எண்டாபோல கனவெண்டு நினைச்சிடுவீங்கள்.
இங்கை பொடியளுக்கு கூடுதலாக நடுராத்திரியிலைதானே வேலை முடியிறது ,
வேலை முடிஞ்சாலும் பஸ்க்கும் ரெயினுக்கும் இந்த குளிருக்குள்ள காத்து நிக்க வேண்டிய நேரம்,
குளிரெண்டால் அது குத்துறகுளிர்,
அதென்ன குத்துற குளிர்? சில்லென்ற குளிர்? கடுங்குளிர்?
அது சொல்லி விளங்காது,அனுபவிச்சுத்தான் பார்க்க வேணும்,
நடந்த ஒரு விசயம்தான் சொல்ல போறன்.
அதுக்காக எனக்குத்தான் நடந்தது எண்டு மட்டும் நினைச்சுப்போடாதீங்கப்பா,
ஏனெண்டால் இங்கிலாந்து வந்தவுடன் அது வரவேற்ற திறம் பதிவிலை சொல்ல ஆயிரம் தொல்லைபேசி அழைப்பு,
அதால முற்கூட்டியே ஒரு சொல்லிவைக்கிறது நல்லதுதானே என்ன?
அனுபவிச்சபொடியன் சொல்ல சொல்ல
நான் விழுந்து விழுந்து சிரிக்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அதைத்தான் சொல்ல போறன்.
பஸ்க்கு காத்து நிக்கேக்க இரண்டு அப்பாவி பொடியள் தரவளி ஆடி ஆடி வருகுதுகள், நல்ல குளிருக்கு நல்ல சுடுபானம் அடிச்சு நடைபாதை தெரியாமல் நடந்து வருகினமாம்,
அங்கை ஒருகால் இங்கை ஒருகால் எண்டு சுடுபான விளையாட்டுக்களையும் ஆட்டங்களையும் ரசிச்சாராம் e.
இவர் ரசிச்சதை அந்த பொடியள் கண்டுவிட்டாங்களோ என்னவோ? இவரை வடிவேலாக்க பாத்துட்டாங்கள் எண்டுதான் விளங்குது.ஏனெண்டால் இப்படியான விசயங்கள் திரைப்படங்களில் நகைச்சுவையாக பார்ப்பதுண்டு.
அப்ப பாருங்கோவன்…………………………………
கிட்ட வந்தாங்களாம் அந்த சுடுபான குடிச்ச பொடியள்.
( இந்த உரையாடல் எல்லாம் முழுதும் ஆங்கிலத்தில் நடந்த உரையாடல்கள் என்றாலும் இங்கு எம் மொழியில் மொழிமாற்றப்பட்டிருக்கிறது- இடையிடையே சம்பாஷணை சுவைக்காக ஆங்கிலக்கலப்பு வருகிறது)
”Give me a சிகரெட்” இது தான் முதல் கேள்வி இந்த பொடியனிடம்
”என்னட்டை இல்லை சிகரெட்” எண்டாராம் நம்மவர்
“ இல்லை இல்லை Give me a சிகரெட்”
“ அட என்னடா வில்லங்கமா போச்சு”
நடுராத்திரியிலை வந்து உயிரை வாங்குறாங்கள், இவ்வளவுகாலமும் சிகரெட் தொட்டதேயில்லை, இங்க வந்த பிறகு இந்த ஓஃவ் லைசன்ஸ் தான் தொட வைச்சது, இவங்கள் என்ன எண்டால் சும்மா இருக்கிறன் என்னை சுண்டி இழுக்கிறாங்கள் எண்டு மனதுக்குள் நினைச்சவராக,
‘Please don`t disturb me” நம்மவர் கொஞ்சம் மிடுக்காக சொல்லி பார்க்கிறார்.
அவங்கள் எங்கை கேட்டால் தானே
”Nooooooooooooooo உன்னட்டை கட்டாயம் சிகரெட் இருக்க வேணும் பெரிய bag எல்லாம் நீ வைச்சிருக்கிறாய் give ,me a சிகரெட் ”
அட அங்க பார் அதிலை ஒரு ஓஃப் லைசன்சன்ஸ் கடை ஒண்டு இருக்கு அதிலை போய் வாங்குங்கோ எண்டு புத்திமதி பண்ணுறார் நம்மவர்
என்ன இது அடிக்கடி ஓஃவ் லைசன்ஸ் என்று சொல்ல்கிறேனே அது என்னவாக இருக்கும் என்று நீங்கள் மனதினுள் நினைக்கலாம் அல்லவா?
இங்கிலாந்திலை பொதுவாக பெரிய பெரிய பல்பொருள்வாணிபக்கடைகள் தவிர்ந்த மற்றைய கடைகள் எல்லாம் ஓஃப் லைசன்ஸ் எண்டு அழகாக சொல்லுறது பாருங்கோ, கூடுதலாக நம்மவர்கள் தான் இதற்கு முதலாளிகள்.
அப்ப நம்மவரின் புத்திமதிக்கு பிறகு
”ம்ம்ம் இப்படியான கதை சொல்லி என்னை கோவக்காரனாக மாத்தவேண்டாம்,சரியோ give me a சிகரெட்” எண்டு சொன்னானாங்களாம் அவங்கள்.
”அட இதென்ன வில்லங்கமடா
சும்மா நிண்ட என்னை சிகரட் கேட்டுப்போட்டு கோவக்காரன் ஆக்க வேண்டாம் எண்டு என்னை வில்லங்கத்துக்கு இழுக்கிறான்” எண்டு மனதுக்குள் சிந்தித்த நம்மவர்
பேசாமலே இருந்தாராம், இன்னும் கதைச்சால் நான் தான் கடைசியிலை வடிவேலாக வேணும் எண்டு நினைச்சுக்கொண்டு.
அதுக்கு பிறகு பஸ்சும் வர அவங்களும் பஸ்சிலை ஏறுறாங்கள், இரண்டு தட்டு பஸ் எண்டதாலை அவங்கள் மேலுக்கு ஏற இவர் கீழுக்கு பின்னுக்கு போய் இருக்கிறார்.
ஐயோ அவங்கள் மேலுக்கு போறாங்கள் இனி நிம்மதியாக பயணிக்கலாமே என்று மனதினுள் எண்ணியவார சென்ற நம்மவருக்கு தொடர்ந்து என்ன நடந்தது? ”பட்ட பெரும்பாடு போதுமென்று” இருந்தவருக்கு மீண்டும் நடந்தது என்ன?
அடுத்த பதிவு வரை கொஞ்சம் பொறுத்திருப்போமா?
புலத்தில் நம்மவர்கள் வாழும் வாழ்க்கை புண்ணியம் செய்து அமைந்திருக்கும் வாழ்க்கையோ? இப்படித்தான் நம்மவர்கள் வாழ்க்கை ஓடுது. இன்னும் வரும் இந்த நம்மவரும் பெரும்பாடு
7 comments:
உப்பிடி நிறைய அனுபவங்கள் இருக்குப் போல. எனக்கு இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவும் வருது.
//இந்த குளிருக்குள்ள காத்து நிக்க வேண்டிய நேரம்,
குளிரெண்டால் அது குத்துறகுளிர்,
அதென்ன குத்துற குளிர்? சில்லென்ற குளிர்? கடுங்குளிர்?
அது சொல்லி விளங்காது,அனுபவிச்சுத்தான் பார்க்க வேணும்//
உண்மைதான் இதெல்லாம் அனுபவித்தால் தான் நம்ம ஊரின் அருமை தெரியும்.
என்னிடம் ஒரு பெட்டை சிகரட் கேட்டால் நான் குடிப்பதில்லை என்றவுடன் \ஆங்கில கெட்டவார்த்தையில் திட்டிவிட்டுப் போய்விட்டாள், நல்ல வடிவான இந்தியச்சாயல் பெட்டை அவள் போனபின்னர் தான் சிகரட் குடியாமைக்கு வருந்தினேன். ஹிஹிஹி
நல்லாத் தான் "குளிர்" விட்டுப் போச்சு ;)
ம்..சொல்லுங்கோ கேட்பம் இன்னும் ..கேக்க நல்லாதான் இருக்கு
yen ipdi tention pannuriyal....... sollungovan mihuthiyai
எங்கடை ஒஸ்ரேலியாவிலையும் உப்பிடியான சம்பவங்கள் நிறைய நடந்திருக்கு. நல்ல பகிர்வுகள்.
வன்னியின் சூட்டில் வாழ்ந்து பழகியவனுக்கு இந்த ஜில் என்ற குளிரை தாங்க முடியல.
mathisutha.blogspot.com
சுவரஸ்யமாக இருக்கு... பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்
Post a Comment