கொடிகாமத்துக்கும் தட்டிவான் டுபாயிலும் தட்டிவான்


"சீனப்பா சீனப்பா" என்று ஒருவர் இருந்தார் கரவெட்டி கோவிற்சந்தைக்கு கிட்டடியில்.இது ஏதோ அரசகதை சொல்ல தொடங்குவது போலல்லவா இருக்கிறது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.யாழ்ப்பாணம் வடமராட்சியில் பாடசாலை சேவை வாகனசேவை ஓடி பிரசித்தமான ஒருவர்.அவரைத்தொடர்ந்து அவருடைய பிள்ளைகள் தொடர்ந்து சேவை செய்தவர்கள்
இதை ஏன் சொல்கிறேனென்றால் இவர்கள் கையில்தான் தட்டி வான் என்று சொல்லப்படும் ஒருவாகனத்தை நான் சிறுபராயம் முதலே கண்டவன். இப்போது ஒரு சில வாகனங்கள் கொடிகாமத்துக்க்கு ஓடிக்கொண்டிருப்பதாக அறிய முடிகிறது ஈழத்திலிருந்து.

தட்டிவானில் நானும் பயணித்தவன் ஒரு சிலகாலங்கள் பாடசாலைக்கு.அதில் பின்னுக்கு உள்ள தட்டியில் நின்று செல்வதில் ஒரு அளவுகடந்த சந்தோசம். அதுவும் இன்னும் ஒருவிடயம் ஊர்களுக்கு இடையிடையே இந்த தட்டிவான் பயணிக்கும்போது சிறுபராயம் ஆகையால் சத்தம்போட்டு,கும்மாளம் அடித்து செல்வது வழமை.
வாகனத்துக்கு முன்னே ஆசிரியர் ஈஸ்வரநாதன் இருப்பார். அவர் கொஞ்சம் " என்ன..... சத்தம் ......." என்று கேட்க கொஞ்சம் குறையும். பின்னர் அதுவும் கொஞ்சம் மறந்து போக அது கூடும்.



ஒரு நாள் வழமை போலவே சத்தங்கள்போட்டவாறே ஊர்களுக்கு இடையிலே வாகனம் நகர்ந்து செல்கிறது. அணிஞ்சிலடி என்று சொல்லப்படும் ஒரு இடம், அங்கு கொஞ்சம் உள்ளுக்குள் தென்னைகள் அதிகம். அது அங்கிருந்தவகளுக்கு நன்றாகத்தெரியும். அதில் உள்ள தென்னைகளில் உள்ள தென்னோலைகளை ஒவ்வொன்றாக இழுத்து அதை முறிதெடுத்து கொடிகாமம் வீதிவழியே இழுத்துக்கொண்டவாறே ;சென்று அதை சாமியன் அரசடியில் விடுவதில் மிகப்பெரிய சந்தோசம் சிறுவர்களுக்கு. இதை முன்னால் இருந்த ஆசிரியர் அவதானித்தாலும் யார் இதை செய்கின்ற மகான் என்று அவருக்கு தெரியாது.கடைசியில் ஒரு நாள் முடிவெடுத்து எல்லொருக்கும் கொஞ்சம் பதம் பார்த்தார் ஆசிரியர் பக்கத்திலிருந்த பூவரசு மரத்தடியினால்.இதில் கோசலன் மற்றும் நான் எல்லோரும் அடிவாங்கியதாக நினைவு
இப்படி ஒருவித்தியாசமான சுகங்கள் இந்த வாகனத்தில்.
இப்படியான தட்டிவான்கள் இப்போதும் கொடிகாமத்துக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் எரிபொருளுக்கு தட்டுப்பாடான காலத்தில் இந்த வாகனம் மிகப்பெரும் உதவியாக இருந்தது என்பது உண்மைதான்.இப்போது அந்த வாகனம் "அவ்வளவு சரியில்லை" என்றும் "நாகரிகம் இல்லை" என்றும் ஒதுக்கிவருவதும் சுட்டிக்காட்டபட வேண்டிய விடயம். அதை விட்டுவிட்டு இப்போது நாகரிகமான வாகனங்கள் தேடிவருவதும் அறிய முடிகிறது.இந்த வாகனத்தை வைத்திருப்பவர்களும் அதேபோல வடமராட்சி பிரதேசத்தில் இந்த வாகனம் ஓடுவது பற்றி சிலர் நையாண்டி பண்ணுவதும் காணமுடிந்தது.
இது நம்பாதைகள் பற்றி சிந்திக்காத,அறியாத நம்மவர்கள் உள்ளத்திலுருந்து வந்து அவர்கள் வாயினூடாக மட்டும் தான். ஆனால் கொடிகாமசந்தைக்கு இது தான் இருக்கின்ற வாகனங்களில் சிறப்பு.
இப்படியான வாகனம் போலவே ஐக்கிய அரபு இராச்சியம் டுபாயிலும் காணமுடிந்தது.
அதுவும் பாடசாலை சேவைக்கே முற்றுமுழுதாக பயன்படுத்திவரப்படிகிறது.முற்றிலும் சிறிய அளவிலான யன்னல்கள் சூழ்ந்திருக்க ஒருவழிப்படுத்தபட்ட பாதுகாப்பான கதவு,ஆனால் இங்கு தட்டி என்று சொல்லப்படும் பின்னுக்கு அமையும் பகுதி இல்லை.சிலவேளைகளில் தென்னோலை விளையாட்டைப்பற்றி கேள்விப்பட்டாங்களோ தெரியாது.இங்கும் பிள்ளைகள் சந்தோசமாக செல்லும்போது இந்த பதிவு என்னை இடச்செய்திருக்கிறது.அதுமட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகளிலும் அதேபோல அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இது சேவையில் இருக்கிறது என்று அறிய முடிகிறது.
மொத்தத்தில் தட்டி வான் என்பது யாழ்ப்பாணத்தில் அருகிவருகிறதோ என்று சிந்தித்த போது அது டுபாய் மற்றும் மற்றைய நாடுகளில் ஓடுவது அதன் இருப்பை தெளிவுபடுத்தியிருக்கிறது.,

6 comments:

Unknown said...

இங்கேயும் பாவனையிலுள்ளது இந்த வண்டி.... அதெல்லாம் சரிபாருங்கோ.. இந்த தென்னோலைக்கதை எப்ப? பி.முவா, பி.பியா? Prefect Enmity Pupil's Party ஞாபகம் இருக்கா அண்ணா?

ரூபன் தேவேந்திரன் said...

ஹி ஹி...நல்லாயிருக்கு..இன்னும் எழுதுங்கோ

கரவைக்குரல் said...

தம்பி கீத் தில்லுமுல்லுகளுக்கு நேரகாலம் இல்லை கண்டியோ
பி.மு என்ன பி.பி என்ன?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீத்

கோசலன் உங்க சிரிப்பு "அடி சபாஷ் சரியா சொல்லிபோட்டீங்க " என்பதுபோல இருக்கிறது.
நீங்களும் அடி வாங்கினீங்களோ இல்லையோ என்று கொஞ்சம் சந்தேகத்தில் தான் பதிவிட்டேன்.
உங்கள் சிரிப்பு அதை ஆமோதித்துவிட்டது.
வருகைக்கு நன்றி கோசலன்

பால்குடி said...

இனிய நினைவுகள்... தட்டிவான் எங்களின் பிரதேசத்துக்கே உரிய சொத்து. அண்மையில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் நல்ல நிலையிலுள்ள தட்டிவானைக் கண்டபோது அதனருகில் நின்று படம் எடுக்க ஆசைப்பட்டேன். அந்நேரம் கையில் புகைப்படக்கருவி இருக்கவில்லை...

shanthi said...

Nice, Thaddi van Is a land mark Of thenmarachi, even Vadamarachi too.
i belive Only few peoples( Peoples who lives in vadamarachi & Thenmarachi) in this world got That kind of Fabulous experience. i am very proud that i did. thanks for bring back our golden memories.
You are always doing Fantastic job. Well done and keep it up

shanthi

கரவைக்குரல் said...

பால்குடி எம் சூழலின் சொத்துக்களில் உள்ள ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.
சாந்தி உங்கள் கருத்து தட்டிவானில் பயணித்த சுகத்தை பிரதிபலிக்கிறது

வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி பால்குடி

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சாந்தி