யாரிடம் என் கதை சொல்ல

" அன்றைய காலை எனக்கு விடிந்தது இதற்காகத்தானா " என்ற கவலையோடு உட்கார்ந்தான் எல்லாம் வெறுத்தவனாய்.எத்தனையோ கஷ்டங்கள் நெஞ்சில் சுமந்தவனாய் ஒருவாறு தன்குடும்பத்தையும் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் ஒருவாறு ஒப்பேற்றிவிடலாம் என்ற நம்பிக்கையோடு புலம்பெயர்ந்தவன் இவன். சற்று ஒதுக்குப்புறமான இயற்கையின் அழகு கொஞ்சும் அற்புதமான கிராமத்தில் நற்பண்போடு வளர்ந்தவன் தான் இவன். கல்லூரிப் படிப்பில் கொஞ்சம் கம்மி என்றாலும் மற்றவர்களை மதிக்கும் பெரியவர்களை கனம்பண்ணும் பண்புகளோடு தன் பெயருக்கு ஏற்றாற்போல் வளர்ந்த இவன் முத்துக்குமார்.


படிப்பு என்பதும் அதேபோல எந்த செல்வங்களும் இறைவன் எப்படியும் வழங்கலாம் என்பதற்கு இவன் நல்ல ஒரு உதாரணம்.கல்லூரிப்படிப்பில் தேறாதவனாய் இருந்தாலும் கொஞ்சம் தொழிநுட்பத்துறையில் கொஞ்சம் நுட்பமானவன்தான்.அதனாலே அவனில் அவன் பொறியியலாளர்கள் நல்ல அக்கறையாக இருந்தார்கள். அப்படி அவன் திறமை மெச்சுதற்குரியது. இப்படியாக அவன் திறமையால் தெரிவு செய்யப்பட்டவனாய் புலம்பெயர்ந்து வேலைக்கு மத்தியகிழக்கு நாடு ஒன்றிற்கு வந்தான் முத்துக்குமார்.வந்தவனுக்கு எங்கும் தொழில் சுரண்டல்களும் மேலாதிக்கங்களும் எம்மவர்களாலேயே பெருகிக்காணபடுவது கண்டு சற்று சலிப்படைந்தாலும் தன் திறமைக்கு வழிகிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்தான் தன் பணிகளை.வேலைத்தளத்தில் குழாய் பொருத்தும் பணி இவனுக்கு.அதில் பல நுட்பங்களையும் சுறுசுறுப்பையும் வெளிப்படுத்தி முன்னேற்றம் காணலாம் என்றவாறே அவன் தொழில்பயணம்.


வீட்டிலே உள்ளவர்களில் மிக்க பாசம் உள்ள முத்து அடிக்கடி தொலைபேசியினூடு பேசுவான்,அக்கா தங்கை என்று எல்லாம் பாசத்துடன் பேசி அம்மாவில் கவனம் எடுத்தவனாய் அடிக்கடி பேசுவான்.ஒருதடவை அம்மா என்னடா கவனமாக இருடா,நல்லாக சாப்பிடு என்று எல்லாம் சொல்லும்போது அவன் சிரிப்பான்,"ஏனடா சிரிக்கிறாய்" என்று அம்மா கேட்டாலும் அவன் சொல்லவா முடியும் இங்குகிடைக்கும் சம்பளம் அவனுக்கு குறைவு என்று,"இல்லை அம்மா இங்கு வெயில் ஒன்று தான் அம்மா பிரச்சினை மற்றும் படி சாப்பாடு எல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை எல்லா உதவிகளும் இருக்கு அம்மா" என்று தன் அம்மாவை சாந்தப்படுத்துவான்.இப்படியே ஒரு கொஞ்சக்காலம் ஓட்டியவானாய் அவன்,


இவன் நிறுவனத்தில்(கொம்பனி)ஒரு செயற்றிட்ட பொறியியல்முகாமையாளர்.இவர் அந்த மத்தியகிழக்கு நாட்டுக்கு சொந்தமான மொழியாகிய அரபு மொழி பேசுபவர்.கொஞ்சம் தான் நினைப்பதை இருந்தபடி சாதிப்பார்.உண்மையை சொன்னால் உத்தியோகத்தவர்கள் மீது சத்தம் போடுவதினூடாக வேலையை முடித்துவிடலாம் என்று இவர் மனதில் கர்வம்.அதைவிட சத்தம் போடுவதற்காக சம்பளம் வாங்குகிறார் என்று நிறுவனத்திலுள்ளவர்களின் நகைப்புக்குள்ளாபவர் என்று கூட சொல்லலாம்,
இருந்தாலும் அவர் செயற்பாடுகள் எப்போதும் நிறுவனத்துக்கு சாதகமாக இவர் நிறுவனத்தின் சொந்தக்காரருக்கு ரொம்ப பிடித்தவர்.இதன் மூலம் இவர் தான் நினைப்பதை செய்துவிடுவார்.இதெல்லாம் யாருக்கும் சாதகமாகவோ அல்லது மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக அமைவதில்லை என்றாலும் வந்துவிட்டோம் என்ன செய்வது என்றவாறே எல்லோரும் வேலை செய்வது தான் உண்மை


உலகம் ுற்றுவதும்
அதில் இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறி வரும் என்று சும்மா சொல்லவில்லை. ஆனால் அது உலகத்துக்கே வரும் என்றும் யாரும் அறிந்திருக்கவில்லை.
நாடுகள் எல்லாவற்றிலும் பொருளாதார வீழ்ச்சி
,ஆரம்பத்தில் தகவல் தொழினுட்பத்தை தாக்கி அது எல்லா துறைகளையும் தாக்கிக்கொண்டுவந்தது.இது எல்லோர் வேலைவாய்ப்புக்களிலும் எல்லோர் தலைகளிலும் மண் கிள்ளித்தூவும் என்று யார் அறிவார்.ஆனால் அதை சில நிறுவனங்கள் அதை தமக்கு சாதகமாகக்கூட பயன்படுத்தத்தொடங்கிவிட்டது.யார் யார் தமக்கு ஆதரவாக வேலைசெய்யவில்லையோ ,தமக்கு கீழே யார் யார் எல்லாம் சாதகமாக பணி செய்ய இல்லையோ அவரகளையெல்லாம் அவர்கள் சிரேஷ்ட உத்தியோகத்தவர்களால் பணி நிறுத்தம் செய்ய தொடங்கிவிட்ட காலம் கூட.
என்றாலும் முத்துவுக்கு அந்த கவலை எல்லாம் இல்லை.""ஏதோ பொருளாதார வீழ்ச்சியாம்""என்று மட்டும் தான் அவனுக்கு தெரியும்.பணம் வீங்குறது என்றும் அதை பணக்காரர் எல்லாம் பதுக்கினம் என்று எல்லாம் கேள்விப்பட்டான். ஆனால் அதை பற்றி அவன் அலசிக்கொள்ளவில்லை. ஏன் என்றால் நான் நல்லாத்தானே வேலை செய்கின்றேன் பிறகென்ன எனகு கவலை என்று தன் மனதுக்குள்ளே சிந்திப்பவனாய் தொடர்ந்தும் வேலை செய்கிறான்.
ஒரு நாள் தன் அம்மாவுடன் பேசுகிறான்."என்னடா தம்பி............ எங்கடை அப்பாவின் வழியிலை எங்களுக்கு ஒரு மாமா இருந்தாரெடா...... அந்த ஆளின்ரை மூத்த மோன் டுபாயிலையெல்லே வேலை செய்தவன்,.............அவனை வேலை செய்தது போதும் எண்டு சொல்லி வீட்டுக்கு அனுப்பிபோட்டாங்களாமெடா?.....என்ன கதையெடா இது????????? " என்று கேட்க அவனுக்கு அதை எப்படி சொல்வது என்று விளங்காதவனாய் முழித்தான்.
"எனக்கே விளங்க இல்லை இதுக்கு என்ன காரணம் என்று ஏதோ பொருளாதாரம்,பணம்,பொக்கிஷம் என்று கனக்க சொல்லுறாங்கள் இதை நான் எப்படி அம்மாக்கு விளங்கபடுத்திறது" என்று தான் அந்த முழிப்பு. என்றாலும் ஒருவாறாய் "அம்மா.......... அது அவர் கட்டுறதுக்கு இருந்த கட்டிடம் கட்டாமல் நிப்பாட்டி போட்டாங்கள் அது தானாக்கும்" என்று சொல்லி "அவருக்கென்ன படிச்சவர்தானே எங்கை என்றாலும் வேலை எடுத்துப்போடுவார்" என்று சொல்லுவது மட்டுமல்லாமல் அடிக்கடி அவர் வேலை எடுத்திட்டாரா என்று குசலம் விசாரிப்பான்.
இப்படியே காலம் ஒடுகிறது, முத்துவின் திறமைகளும் உத்தியோகத்தர்கள் மட்டத்தில் பரவலாக பேசப்படுகிறது.சந்தோசமும் கூட கூட அவன் தொடர்ந்தும் வேலை செய்கிறான்ஆனால் அன்றைய காலை அவனை இப்படித்தாக்கும் என்று அவன் எண்ணவுமில்லை.வழமைபோலவே சரியான நேரத்துக்கு வேலையை தனக்கு கீழே வேலை செய்பவர்களுக்கும் எல்லாம் வேலைகளையும் அடுக்கெடுத்துக்கொடுத்தும் வேலையையும் ஆரம்பிக்கிறான்.அன்று அந்த பெரியவர் கட்டடபகுதிக்கு விஜயம் என்று பரவலாக பேசப்படுகிறது.எல்லோரும் அவதானமாகவும் அதே போல அந்த பெரியவர் வந்து பிழை ஏதும் கண்டு பிடிப்பவர் ஆதலால் அதை எல்லாவற்றையும் தவிர்த்தவாறே பணி செய்கின்றனர்.முத்துவும் எல்லோர்போலவும் தானுமாக பணி செய்கிறான்.
பெரியவரும் வருகிறார்,ஏணிக்கு மேலே ஏறி நின்றவன் முத்து.பெரியவரை கண்ட பின் மெல்லவாக கீழே இறங்கி வது "குட் மோனிங் சார்" என்று தன் காலை வணக்கம் கூறியவனாய் தன் பணியைப்பார்க்க பெரியவர் அவனை மேலும் கீழுமாக பார்த்தார்.

கொஞ்சம் தள்ளி சென்றவர் திரும்ப வந்து "ஹலோ இங்க வா,என்னை வந்து நீ சந்திக்க வேணும்" என்று சொல்லி விட்டு அவர் போய்விட்டார். இவனுக்கு "அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போச்சு" "ஏன் என்னை வர சொல்லியிருப்பார்" என்றவாறே சிந்தித்தவனாய் அவர் அலுவலகம் போன பின் அவரிடம் போனான்.
அங்கு அவனுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி காத்திருக்கும் என்று அவன் கனவிலும் கருதவில்லை.
""சார் என்னை வர சொன்னீர்கள்"" என்றவாறே அவன் பேச ஆரம்பித்ததும் அவனை தொடர்ந்தும் பேச அனுமதிக்காதவராய் "நீ என்ன உன்மனதில் நினைக்கிறாய்" என்று ஆங்கிலத்தில் கேட்க அவனுக்கும் ஒன்றும் அறியாதவனாய் முழிக்கிறான்."என்ன சார்" என்று அவனும் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் சொல்லத்தொடங்க "நிறுத்து உனக்கு உன் சம்பளத்தில் இரண்டு மணித்தியாலங்கள் வெட்டப்படும், வேலை செய்யும் போது வேலை செய்து கொண்டிரு, குட் மோனிங்க் சொல்ல சொல்லி நான் கேட்டனா?" என்று அவர் பேசிக்கொண்டே போக அவனுக்கு அதை ஏற்றுக்கொள்ள தயார் இல்லை." சார் அதற்கு ஏன் சார் " என்று சொல்லி முடிக்க முதல் "என்ன நீ பேசுறாய் சிரேஷ் உத்தியோகத்தர்களின் உத்தரவு உனக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ன? நீ பணி நிறுத்தப்படுகிறாய் என்று சொல்லி வெளியே போ என்று அவனை துரத்தினார். அவனும் ஒன்றுமே பேசாதவனாய் எங்க இண்டைக்கு நான் முழிச்சு வந்தனோ என்று சிந்தித்தவனாய் வெளியே போனான்.
"குட் மோனிங்க் சொன்னது இப்படி தப்பாக போச்சே......... அப்ப நான் அந்தக்காலம் படிச்சது பெரியோரைக்கண்டால் மரியாதையுடன் கதைப்பதும் பணிவுடன் பேச சொன்னதும் தப்பா?" அப்ப அந்த ஆச்சி டீச்சர் சொல்லிதந்தது தப்பா"" என்ன என்று தலையை போட்டு குழப்பியவனானான்.இப்படியே குழம்பிய படி இருக்க நிறுவனமும் எல்லாம் சரி செய்து முத்துவை விமான நிலையம் வரை அழைத்துச்சென்றது அவனை வீட்டுக்கு அனுப்ப.
விமான நிலையம் உட்சென்றவனாய் அன்றைய காலை எதற்காக விடிந்தது என்று வாழ்க்கையே வெறுத்தவனாய் என் கதையை யாரிடம் சொல்ல என்று மனதிற்குள்ளே அழுதவனாய் விமானத்தில் ஏறத்தயாரானான்.

5 comments:

ச.செந்தில்வேலன் said...

தினேஷ்.. முத்துவைப் போல பலருக்கும் நிகழ்ந்து வருவது வருத்தமானது. என்ன செய்ய? நன்றாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

☀நான் ஆதவன்☀ said...

கொடுமை தினேஷ் இது. இதற்கு உண்மையான ஆட்குறைப்பு காரணத்தைச் சொல்லி வேலையை விட்டு நிறுத்தியிருக்கலாம். :(

கலையரசன் said...

எங்கட ஆபீஸ்ல கூடம்.. குட்மார்னிங் சொன்னா திரும்ப சொல்ல மாட்டுதானுவ!
சில பேருக்கு வேலை நேரத்துல பேசுனா கடுப்பு வரும்...
ஆனா, நீ சொன்ன கதை கொஞ்சம் ஓவராதான் இருக்கு!

கோபிநாத் said...

அட கொடுமையே!! ;(

ஜெஸிலா said...

பாவம் முத்து. எங்கள் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண்ணுக்கு இதைவிட நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. அதனால் முத்துவிடம் உலகம் இந்த வேலை நீக்கத்தில் ஸ்தம்பித்துவிடாது நல்ல வேளை வரவிருப்பதால் இந்த வேலை போய்விட்டது என்று சொல்லிவிடுங்கள்.