நல்ல கைதட்டு போடுங்கள் தாயகத்தின் பதிவர் சந்திப்புக்கு

தாயகத்தின் பதிவர் சந்திப்பு வெகுசிறப்பாக ஒழுங்குபடுத்தபட்டு அதே போல எல்லோரும் சபாஷ் போடும்படியாக நடந்தேறியிருக்கிறது.நேரகாலத்துக்கு ஆரம்பம்,ஐம்பதிற்கும் மேற்பட்ட பதிவர்களின் வரவு,நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பு,கருத்துரைகள் என்றும் அத்தோடு உலகெங்கும் இருக்கும் பதிவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு மற்றும் அவர்கள் சுவாரஷ்யமான கருத்துக்கள் என்று முற்றிலும் வித்தியாசமாக எல்லோரும் பாரட்டும் படியாக நடந்தேறியிருக்கிறது,தாயகத்தில் பிறந்திருந்தாலும் அதில் பங்கு பற்ற முடியவில்லையே என்ற கவலை இருந்தாலும் அதை ஒரு மன மூலையில் ஒதுக்கிவைத்துவிட்டு அனைவரதும் எதிர்பார்ப்புக்களுக்கு அமைவாக வெற்றிகரமாக நடைபெற்றமை மிகச்சந்தோசத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மூத்த எழுத்தாளர்கள் கலாநிதி அந்தனி ஜீவா,கவிஞர் திரு மேமன்கவி மற்றும் சிறப்பு விருந்தினர் எழில்வேந்தன் பொன்றவர்களின் வருகை நிகழ்வை சிறப்பூட்டியிருக்கிறது.அவர்களின் வாழ்த்துக்களும் வரவேற்புக்களும் நீண்டகாலம் வாழவைக்கும் என்ற புத்துணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

கலந்துகொண்ட எல்லோரதும் கருத்துரைகளும் அத்தோடு இணையத்தளம் வாயிலாக இணைந்து கொண்ட அனைத்துபதிவர்களின் கருத்துக்களும் நகைச்சுவையாக பகிரப்பட்டது,மிகவும் உல்லாசமாக முதற்கட்டத்திலேயே அரங்கேறியிருகிறது இந்த சந்திப்பு.
எல்லாவற்றிலும் மேலாக நேரடி ஒளிபரப்பு மெச்சுதற்குரியது. இதை தந்த கௌபாய்மது இதை தன்னுடைய பதிவில் ஒலிப்பதிவையும் இட்டிருக்கிறார்.எம்மைப்போன்ற தாயகத்தின் பதிவர்சந்திப்பை எதிர்பார்ப்போடு காத்திருந்தவர்களுக்கு வரப்பிரசாதமாக தந்தவருக்கு மிக்க நன்றிகள்.ஆனால் நான் வரப்பிரசாதத்தை அனுபவிக்க தவறிவிட்டது கவலையடையவைக்கிறது.

அதைவிட பிறந்த நாள் கொண்டாட்டமும் பதிவர் சந்திப்பும் கூடிவந்து அதை கொண்டாடப்பட்டதும் பதிவர் சந்திப்பை மெருகூட்டியிருக்கிறது.பத்தாவது பிறந்த நாளுக்காக பத்துபேர் தெரிவுசெய்யபட்டு சிறப்பு விருந்தினர்களால் கேக் வெட்டப்பட்டது.சிறப்பம்சமான விடயம்.

இதைவிட அங்கு இடம் பெற்ற சம்பவங்கள் மற்றும் கருத்துரைகள் புகைப்படங்கள் என்பன பல்வேறு வலைப்பூக்களிலும் தொகுக்கப்பட்டிருக்கிறது,இதுவரையில் நான் அறிந்த வகையில் யார் யார் தொகுக்கப்பட்டிருக்கிறார்களோ அவற்றை உங்களுக்கு கீழேதருகிறேன்.மீண்டும் நான் மீளிசைக்கவில்லை,

ஆதிரை(புகைப்படங்கள்)
வந்தி
புல்லட்
ஈழவன்
கிருத்திகன் குமாரசாமி
கௌபாய்மது(ஒலிவடிவில்)
தாய்மடி
வசந்தன்
மயூரேசன்
சந்ருவின் பக்கம்

யெஸ் பாலபாரதி

மொத்தத்தில் இப்படியான பதிவர் சந்திப்பை ஒழுங்கமைத்தவர்களும் அதில் பங்குபற்றியவர்களும் பாரட்டுக்குரியவர்கள்.கைதட்டுக்குரியவர்கள்.அதேபோல தொடர்ந்தும் வெற்றியுடன் நடைபோட்டு கலை கலச்சார நிகழ்வுகளுக்கு இன்னோரனவகையில் இடம் கொடுத்து நீண்டகாலம் பதிவர்கள் அவர்கள் திறமைகள் எழுத்துக்கள் வாழ வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு,அவை கூடிவந்துகொண்டிருக்கிறது,என்றென்றும் நிலைத்து வாழும்

9 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துக்கள்

குசும்பன் said...

நேரடி ஒளிபரப்பு அது இதுன்னு கலக்கிட்டாங்க மக்கள்! அதான் உங்கள் குறைய போக்க அமீரக மீட்டிங் போடுறோமே:)

Unknown said...

சந்தோசமாக இருக்கெல்லோ கரவைக்குரல் அண்ணா

குசும்பனும் வந்திருந்தார் இணைய அரட்டைக்கு...

ARV Loshan said...

நன்றி சகோதரா.. எங்களுக்கும் உங்கள் போன்றோரின் பங்குபற்றுகை இல்லாமை இழப்பு தான்..

உங்கை நடத்தினா sponsor செய்யுங்கோ.. வாறம்.. ;)

குசும்பன் அண்ணோய்.. நாமும் வர ரெடி.. sponsor பண்ணுவீங்களா|? ticketக்கும் சேர்த்து ..

நாகா said...

Congrats..!

கோபிநாத் said...

அனைத்து பதிவர்களின் சுட்டிக்கும் நன்றி..;)

Anonymous said...

உங்களைப்போன்ற தமிழ் ஆர்வலர்களை வரவேற்கிறேன்...எங்கள் உறவுப்பாலம் நீண்டு கொண்டு போகட்டும்..

Unknown said...

பதிவிட்ட என்னை நினைவூட்டியமைக்கு நன்றியும், தங்களின் பதிவுக்கான பாராட்டுதலும்!

//பிறந்த நாள் கொண்டாட்டமும் பதிவர் சந்திப்பும் கூடிவந்து அதை கொண்டாடப்பட்டதும் பதிவர் சந்திப்பை மெருகூட்டியிருக்கிறது//
பிறந்தநாள் கொண்டாடினாலும் கூட அங்கே கேக் வெட்டியது புல்லட்டின் 50 ஆம் பதிவை எட்டியதற்காகத் தான் என்றொரு கதை அடிபடுகின்றது, எதுக்கும் ஒரு தரம் கேட்டு விடுங்கள்.