"வணக்கம்" சொன்னால் என்ன வெட்கமா?
எந்த ஒரு மனிதனும் தன் சார்ந்த சமுதாயத்தின் அடையாளங்களை தழுவிச்செல்வதில் என்ன தப்பு இருக்கிறது.
சாதரணமாக தமிழைத் தாய்மொழியாக கொள்பவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது வணக்கம் கூறி வரவேற்பது வழமை.வணக்கம் சொல்வதினூடாக தங்கள் அன்பை கூட பரிமாறிக்கொள்வார்கள் என்பதும் மறுக்கமுடியாது.
ஆனால் ஏன் எம்மவர்களில் சிலர் மட்டும் இதைக் தங்களின் வழமையாக்கிக்கொள்ள தயங்குகிறார்கள் என்றுதான் புரியவில்லை.
சிலர் வணக்கம் கூறுவதினூடாக தங்களை தமிழன் என்று அடையாளப்படுத்திவிடுவார்களோ என்று சிந்திப்பதும் அதேபோல சில இடங்களில் இதை நாம் சொல்லிவிட்டால் தங்களுக்கு நாகரிகம் இல்லை என்று சிந்திப்பதும் தான் இதற்கு காரணம் போலும்,
அதற்கு நாம் வந்த வழிகள் எங்களை ஒரு பயந்த சூழலில் கொண்டுவந்து விட்டது என்றாலும் அதை தங்களுக்குள்ளே பகிர்ந்து கொள்வதில் என்ன தப்பு இருக்கிறது?
உண்மையில் எனக்கு இந்த பதிவை போடுவதற்கு காரணம் சில தமிழ் அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியை தொடங்கும்போது வணக்கம் சொல்வதற்க்கு பதிலாக “ஹைய்(HI)” ”ஹெலோ(HELLO)” என்று எல்லாம் வார்த்தைகளை பயன்படுத்துவது தான்.
உண்மையில் நடைமுறையில் மக்கள் எப்படி வாழ்கிறார்களோ,எப்படி தங்களுக்குள்ளே எப்படி தங்கள் வரவேற்பை பகிர்ந்து கொள்கிறார்களோ அவ்வாறே அறிவிப்பாளனும் தொடரவேண்டும் என்று அறிவிப்பாளர்கள் நியாயம் கற்பித்தாலும் அது எம் அடையாளங்களை இல்லாது பண்ணுவது மட்டுமல்லாமல் அதற்கு வெகுஜன இலத்திரனியல் ஊடகங்களும் உடந்தையாக இருக்கிறதா என்ற கேள்விதான்.முக்கியமாக சில பிரபலமான தொலைக்காட்சிகள் கூட நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் வணக்கம் என்று சொல்வதையே தவிர்த்துவருகிறது.சற்று சிரிப்போடு ஏதாவது சொல்லிவிட்டு தொடர்ந்தும் நிகழ்ச்சியை செய்துவிட்டு கடைசியில் இரண்டு கையும் அசைத்தவர்களாய் ”ஹா கூ” என்று கத்தியவாறே பைய்(BYE) சொல்வார்கள், நிகழ்ச்சி முடிந்துவிடும்.இதைவிட செய்திகள் வாசிக்க ஆரம்பத்திலாவது இருகரம் கூப்பி வணக்கம் சொல்வதில் என்ன வெட்கத்தை உணர்கிறார்களோ தெரியவில்லை.இவையெல்லாம் வெகுஜன இலத்திரனியல் ஊடகங்கள் தங்கள் தனித்துவத்தை இழப்பதோடு தமிழின்,தமிழனின் அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்துவருகிறது என்றல்லாவா எண்ணத்தோன்றுகிறது.
சிலவேளைகளில் இது போன்ற விடயங்கள் சிறுவிடயமாக இந்நிறுவனங்களால் கருதப்பட்டு கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்படாது விடக்கூடும்.ஆனால் காலத்தின் ஓட்டத்தில் இவைபோன்ற விடயங்கள் மக்களால் கவனத்தில் எடுக்கப்படும் என்பது உண்மை மட்டுமல்ல அது அனைவரது விருப்பமும் எதிர்பார்ப்புமாகும்.
ஆகவே எம்மினத்தின் அடையாளங்களை அவ்வப்போது தவறாமல் வெளிப்படுத்தி அவரவர்கள் தத்தமக்குரிய பங்களிப்பை உணர்ந்து அவற்றை என்றும் அழியாது பாதுகாப்போமாக.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
உங்கள் கேள்விகள் சரி. நிகழ்ச்சியில் ஹாய் சொல்றாங்க வணக்கம் சொல்வதில்லை எல்லாம் சரி. ஆனால் செய்தி வாசிப்பவர் இருகரம் கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு சரியாக தோன்றவில்லை.
//தமிழனின் அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்துவருகிறது என்றல்லாவா எண்ணத்தோன்றுகிறது.// வணக்கம் சொல்வது தமிழர்கள் மட்டுமா. மலையாளி நமஸ்காரம் என்கிறார்கள், ஹிந்தியாட்கள் நமஸ்தே சொல்றாங்க அதனால் இது நம்ம அடையாளமென்று பார்க்க முடியாது. வணக்கம் என்பத் ஒரு வாழ்த்து greetings அவ்வளவுதான்.
உண்மைதான், இப்ப இலத்திரனியல் ஊடகங்களில் "வணக்கம்" எண்டு சொல்லக் கேட்பதே அரிதாகி விட்டது.
வணக்கம் சொல்வது தமிழர் பண்பாடு. மறைந்து போய்க்கொண்டிருக்கும் தமிழ்க் கலாச்சாரத்தின் ஒரு சிறிய அடையாளமும் கூட. உங்கள் கருத்தினை நான் வரவேற்கிறேன்.
உண்மை....
இன்று பலரும் "வணக்கம்", "நன்றி" போன்ற சில வார்த்தைகளை மறந்து விட்டனரோ என்று தோன்றுகிறது!
Post a Comment