கருத்துச்செறிவான பதிவுகள் என்றும் நிலைத்திருக்கும்----->அமீரக வலைப்பதிவர் மகாநாடு

இதுவரை வலைப்பதிவில் ஈடுபட்டிருந்த எனக்கு சற்று வித்தியாசமாக வலைப்பதிவர்களை ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பு நேற்று கைகூடியிருந்தது(19/07/09).முக்கியமாக பின்னூட்டம் மூலமாகவே சந்திக்கும் வலைப்பதிவர்களும் அதே போல அவர்களின் வாசகனாக இருந்த எனக்கு அவர்களையெல்லாம் சந்திக்க கிடைத்ததையிட்டு மனம்மகிழ்ந்த நாள் தான் அது.அது மட்டுமல்லாமல் நேரடியாக முதன்முதலில் ஒரு வலைப்பதிவாளனாக வலைப்பூவொன்றிற்க்குசொந்தக்காரனாக அறிமுகம் கொடுத்ததும் அன்றுதான்.

திடீரென்று கிடைத்த சென்ஷியின் தகவலால் கிடைத்த பெரும் சந்தர்ப்பம் தான் அந்த அமீரக வலைப்பதிவர் மகாநாடு.
மாலை நேரம் சரவணபவன் மண்டபத்தின் முன்னால் உள்ள கரமா தமிழ்ப்பூங்காவில் குசும்பனின் தமிழ்தாய்வாழ்த்துடன் ஆரம்பமானது வலைப்பதிவர்மகாநாடு.இத்தனை வலைபதிவர்கள் அமீரகத்தில் இருக்கிறார்களா என்று வியக்கும் அளவுக்கு பதிவர் கூட்டம்.வட்டமேசையாக ஆரம்பமான இந்த மகாநாடு சுல்தான் ஐயாவும் படகு என்ற பதிவுதரும் பதிவரும் வர அது மாவட்டம் ஆனது.

வலைபதிவிடும் சகல பதிவர்களும் தங்களை தங்கள் வலைப்பூக்களுடன் அறிமுகப்படுத்தினர்.அவ்வேளையில் இவர்கள்தான் இப்படியெல்லாம் வலைப்பூவில் போட்டுத்தாக்குபவர்களா என்று ஒரு கணம் வியக்கவும் அவர்களை பார்த்து சிரிக்கவும் வைத்தது.அவை பற்றி தனித்தனியாக அவர்களை பற்றி அவர்கள் பதிவு பற்றி இன்னொருதடவை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
இப்படியாக அறிமுகங்களைத்தொடர்ந்து அண்ணாச்சி ஒலிவாங்கியை கையிலெடுத்தார்.கையிலெடுத்து "பதிவு என்பது எவ்வாறு அமைய வேண்டும்" என்ற கேள்வியை எல்லோர் மீதும் தொடுத்தார்."இது நல்ல கதையாபோச்சு" என்று எல்லோரும் முழிக்க "பதிவு எழுத தொண்ணூறு சதவீதம் படிக்க வேண்டும்" என்றார் அன்பர் ஒருவர்.அன்பரின் பெயர் எனக்கு நினைவில்லை மன்னிக்க வேண்டும்."கடவுளே இனி படிக்க தொடங்க வேணும் என்ற கதையாக போய்விட்டது" என்று எல்லோரும் மனதுக்குள் கிசுகிசுக்க ஐயனார் வாங்கினார் ஒலிவாங்கியை.

"பதிவு என்பதில் முக்கியமாக செறிவு இருக்க வேண்டும்" என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தார்."அதென்ன செறிவு" என்று மகாநாட்டில் ஒரே சலசலப்பு, அதாவது பதிவில் ஏதாவது ஒரு கருத்து, ஒரு தேடல் முக்கியமாக செறிந்து காணப்படவேண்டும் என்பது தான் அவரின் ஆதங்கம்.அதேபோல கருத்துச்செறிவான பதிவுகள் என்றும் நிலைத்திருக்கும் என்றும் கருத்துரைக்கப்பட்டது
தொடர்ந்து அண்ணாச்சி அடுத்த கேள்வியைத்தொடுத்தார்." அது சரி நீங்கள் எல்லோரும் ஏன் வலைப்பதிவில் ஈடுபடுகின்றீர்கள்" என்று மற்றொரு கேள்வி..
அதற்கு நண்பர்களின் தூண்டுதல்கள்,எழுத்துலகத்தில் இருந்த ஆர்வம் என்று எல்லாம் பொய்கள் வர குசும்பன் மட்டும் உண்மையை உளறித்தள்ளினார்."வேலையே இல்லையப்பா.தொடங்கிவிட்டேன் தொடருகின்றேன் என்று சொல்ல எல்லோரும் "தங்களைப்போலவே சொந்த இரத்தமெடா" என்பது போல தலையாட்டினர்.


தொடர்ந்து இன்னுமொரு வலைபதிவர், இவர் தன்னை பட்டிமன்ற பேச்சாளர் என்று அடையாளப்படுத்திக்கொண்டவர் ஒலிவாங்கியை கையிலெடுத்து வளர்ந்துவரும்"பதிவர்களுக்கு நீண்டகால பதிவர்களாகிய நீங்கள் உங்கள் எந்த பதிவை வாசிக்க சொல்வீர்கள்"என்று மிகவும் இலேசாகக்கேட்டார்.

"கடவுள் தான் காக்க வேண்டும்" எல்லோரும் தலையில் கைவைத்து "எல்லாமே நல்ல பதிவுதான்" என்று புன்முறுவல் பூத்தனர்.
தொடர்ந்து வாசகர்களின் எதிர்பார்ப்புக்களுக்கும் வரவேற்ப்புக்கும் அமைவாகத்தான் பதிவுகள் அமையவேண்டும் என்றும் அவை வாசகர்களை சிறந்த வாசகர்களாக்கும் நோக்குடன் அமையவேண்டும் என்றவாறும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.""\

இங்கு இன்னுமொரு விடயத்தை குறிப்பிடவேண்டும்.இந்த மகாநாட்டுக்கு வலைப்பதிவுகளின் வாசகனாக இருக்கும் ஒருவர் கலந்து சிறப்பித்தமைதான்."தமிழின் மீது இருந்த பற்றினாலும் வலைப்பதிவுகளில் இருக்கும் சுவாரஷியத்தாலும் இப்படியான ஒரு மகாநாடு நடைபெறுகிறது என்று கேள்விப்பட்டு இங்கு வந்திருக்கின்றேன்" என்று தன்னை அடையாளம் காட்டி வந்திருந்தார் ஒரு வாசகர்.ஆர். ராஜேந்திரன் என்ற நாமம் கொண்ட இவர் ஹொங்க் ஹொங்க் ரஷ்யா மற்றும் மத்தியகிழக்கு நாடுகள் எல்லாவற்றிற்கும் தனது பணிநிமிர்த்தம் பயணம் செய்யும் இவர் அமீரக வலைப்பதிவர் மகாநாட்டில் கலந்து கொண்டமையை பெருமையுடன் எடுத்துக்கூறி விடைபெற்றார்.

இறுதியில் பரிமாறப்பட்ட வடை கச்சான் மற்றும் நன்னீர் ஆகியவற்றைக்கொண்டுவந்த அன்பர்கள் நண்பர்கள் உட்பட யாவருக்கும் நன்றியுரை கூறப்பட்டு மீண்டும் மீண்டும் மகாநாடு தொடர்ந்து நடைபெறும் என்று உறுதிமொழியெடுக்கப்பட்டு ஐயனாரின் தமிழ்தாய் வாழ்த்துடன் மகாநாடு இனிதே நிறைவுபெற்றது.

13 comments:

கீழை ராஸா said...

நல்ல பகிர்வு...

☀நான் ஆதவன்☀ said...

நீங்களும் போட்டுட்டீங்களா. ஒன்னுமே பேசாம கமுக்கமா இருந்துட்டு இம்புட்டு மேட்டர் எழுதிட்டீங்க போங்க. நானும் போட்ருக்கேன் பாருங்க

கோபிநாத் said...

உங்கள் நடையில் நல்ல பகிர்வு தினேஷ் ;)

சென்ஷி said...

அசத்தல்! நல்ல விவரமா எழுதியிருக்கீங்க தலைவரே! அய்யனார் சொன்ன முக்கியமான ”செறிவு ” எழுத்துக்களை நான் குறிச்சொல்லுல சேர்க்க மறந்துட்டேன் :)))

அழகான விவரித்தல் தன்மை!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அழகாக பகிர்ந்துள்ளீர்கள். நல்ல கவனிப்பு..

//
இங்கு இன்னுமொரு விடயத்தை குறிப்பிடவேண்டும்.இந்த மகாநாட்டுக்கு வலைப்பதிவுகளின் வாசகனாக இருக்கும் ஒருவர் கலந்து சிறப்பித்தமைதான்.//

உண்மை தான். இது தான் தமிழுக்கும் வலைத்தளத்திற்கும் இருக்கும் ஈர்ப்பு

மின்னுது மின்னல் said...

ம் இவ்வளவு நடந்து இருக்கா...?


அடுத்து மீட் பண்ணுவோம் ::)

குசும்பன் said...

தமிழ்தாய் வாழ்த்து நான் பாடி இருந்தா அதன் பிறகு அங்கு யாரும் இருந்திருப்பார்களா?:))))

கரவைக்குரல் said...

நன்றி கீழை ராஸா

பேசாமல் கமுக்கமா இருந்ததால் தான் இம்முட்டு போடமுடிந்தது ஹிஹிஹி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதவா

நடை உடை என்று எல்லாம் சொல்லுறீங்கப்பா ஹிஹிஹிஹி
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி கொபிநாத்

நீங்க செறிவை விட்டது போல எதையெல்லாம் சொல்லாமல் விட்டனோ எனக்குதெரியாது.
ஆனால் என்பார்வையில் என்மனதில் இருந்தவை யெல்லாம் சொல்லிவிட்டேன் சென்ஷி
கருத்துக்கு நன்றி சென்ஷி

தமிழுகும் வலைத்தளத்துக்குமான ஈர்ப்பை எடுத்துக்காட்டியிருக்கின்றீங்கள் செந்தில்
உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்

இவ்வளவு மட்டுமல்ல இன்னும் பல,
வாருங்கள் வாருங்கள் உங்கள் வரவு நல்ல வரவாகட்டும் மின்னுதுமின்னல்
வருகைக்கு நன்றி

இருந்திட்டாங்களே எல்லோரும் குசும்பா
நீங்கள் இறுதியில் தமிழ்தாய் வாழ்த்து பாடிய ஐயனாரை கிண்டல் பண்ணுறீங்க போல இருக்கிறது ஹிஹிஹிஹி
.
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி

Anonymous said...

சுருக்கமான ஆனால் தெளிவான பதிவு தொடர்ந்து நண்பர்களோடு தொடர்பில் இருங்கள்

கலையரசன் said...

அடப்பாவி! சந்திப்பு நடக்கும்போது வாயில பெவிக்கால் வச்சிகிட்டு.. இப்ப போட்டு தாக்குற?
:-)

ம்.. நல்லாயிருக்கு உங்க செறிவுடன் கூடிய, தமிழ்நடை இடுகை!!

srinivasan said...

Good one..

srinivasan said...

Nalla Tamil, good

Radhakrishnan said...

வலைப்பதிவர்களின் மாநாடு குறித்து அறிந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த அந்த காலகட்டத்துக்கு ஏற்றதுபோல எழுதப்படும் எழுத்துக்கள் அந்த அந்த காலகட்டத்துக்குள் முடிந்துவிடும். எல்லா காலத்துக்கும் ஏற்றவாறு எழுதப்படும் எழுத்துக்களே காலத்தை வென்று நிற்கும்.