திருகுதாள பொடியனிடம் வாங்கிக்கட்டிய ஆசிரியர்

நல்ல ஒரு ராஜா அவர் காந்தர்வ ராஜா
நல்ல ஒரு வளத்தி அவர் நடையோ தனி


இவர் ஒரு ஆசிரியர் அதனாலே இவர் பெயர் சொல்ல கூடாது , ஏனென்றால் கடைசிமட்டும் வாசியுங்கோ அப்ப தெரியும் பெயர் சொல்லுறது நல்லதோ இல்லையோ என்று.

ஆசிரியர்கள் சம்மந்தப்பட்ட நகைச்சுவைகள் ஏராளம்.அதில் எவ்வளவு தூரம் உண்மைத்தன்மைகள் இருக்கிறது என்று எனக்கு தெரியாது.ஆனால் இது நடந்த கதைதான்.

பாடங்கள்,பாடமாக்குதல்,பரீட்சைகள்,முடிவுகள்,கூட,குறைய,இப்படியே குறிச்சொற்களுடன் மாணவக்காலங்கள்.வருசக்கணக்காக படித்ததை மூன்று மணிகளில் மூளையைகலக்கிக்கொட்டி அதையே முடிவாக்கி அதை வாழ்க்கையின் முடிவாக்கிவிடுவதால் அதற்க்கு அவ்வளவு முக்கியத்துவம்.இதனால் தான் பரீட்சையை சோதனை என்றார்களோ என்னவோ "சோதனைகள் இல்லாத வாழ்க்கையுமில்லை,சோதனையை காணாமல் மனிதனுக்கு வெற்றியும் இல்லை" என்று யார் சொன்னார்களோ எனக்கு தெரியாது, ஆனால் எனக்கு இப்படி மனசில வருகிறது.

இப்படித்தான் ஒருதடவை சோதனை, எல்லோரும் இறுதி நிமிடம் வரை இருகின்ற குறிப்புக்கள் எல்லாம் பார்த்தபடியே இருக்க ஆசிரியர் வந்தார். "சரி தொடங்குவமே" என்றார் அந்த ராஜா ஆசிரியர்.ஆசிரியர் என்னைபோல நல்ல வளத்தி என்றாலும் என்னை விட கொஞ்சம் கட்டை தான். அதை விட ஆசிரியர் கதைக்கும் போதெல்லாம் தன் காதையோ அல்லது நாடியையோ தடவித்தடவித்தான் பேசுவார்.

அப்ப ஆசிரியர் வந்ததும் எல்லாரும் குறிப்பு புத்தகங்களையெல்லாம் வெளியிலே வைத்துவிட்டு மூளையை கொஞ்சமும் ஆட்டாமல் வந்து தங்கள் தங்கள் இருப்பிடங்களில் உட்கார்ந்த்தார்கள்.ஏன் மூளையை ஆட்டினால் மூளை கலங்கினால் கிடக்கிறதெல்லாம் போனால் பிறகு எதை சோதனைக்கு எழுதிறது என்பதற்காகத்தான் மூளையை ஆட்ட பயம்.

சோதனை ஆரம்பம்

பொதுவாக ஆசிரியர்மாருக்கு சந்தேகமோ அல்லது மாணவர்கள் மீது அக்கறையோ தெரியாது பரீட்சை நேரத்தில் அங்கும் இங்கும் நடந்தபடியேதான் இருப்பார்கள்.ஏனென்றால் பார்த்தெழுதுதல் மற்றும் பிரதி செய்தல் தமிழில் அதை கொப்பி அடித்தல் என்பர்,அவற்றையெல்லாம் மாணவர்கள் தவிர்க்கவேண்டும் என்பதற்காக.அது பொதுவானது தான்.அப்படி ஆசிரியர்கள் அங்குமிங்கும் நடந்து திரிந்தாலும் மாணவர்கள் அவர்களை விட கெட்டிக்காரர்களாக இயங்கிக்கொண்டேயிருப்பார்கள்.இது இந்த காந்தர்வ ராஜா ஆசிரியருக்கு ரொம்பவே தெரியுமோ என்னவோ அவர் அங்கும் இங்கும் நடப்பது மட்டுமல்ல கொஞ்சம் வித்தியாசமான முறையில் அவதானிப்பார்.
இவ்வளவு தூரம் இவர் அவதானிப்பாரென்று மாணவர்களுக்கும் தெரியாமலில்லை. ஆனால் இவருக்கும் திருகுதாளம் போட வேணும் என்பது மாணவர்களின் எண்ணம்.

அப்போது பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது

சயா கொஞ்சம் கெட்டிக்காரன்.கணித ஆசிரியர்களில் பிரபல்யமான ஒரு ஆசிரியர் நல்லையா அவர்களால் அவன் நகைச்சுவைகளுக்கு பாராட்டுபெற்ற ஒரு மாணவன்.
அப்படியான அவன் பரீட்சை நேரத்தில் திடீரென்று மெல்ல ஏதும் சொல்லுவதும் ஆசிரியர் திரும்பும்போது ஏதுமே அறியாதவனாக இருப்பவனுமாக பரீட்சை எழுதியபடியே இருந்தான்.ஒரு கட்டத்தில் அவன் மெல்ல சொன்னான் "டேய் இவர் ஏனடா அடிக்கடி தன் நாடியையும் காதையும் தடவிக்கொண்டே நடந்து திரியுறார்" என்று. இந்த பெரிய வசனம் சொல்லும்போது ஆசிரியருக்கு இவன் மேல் கண்பட்டது.ஆனால் அவருக்கு சரியாக மதிப்பிடமுடியவில்லை இவன்தானென்று.ஏனென்றால் சயாவும் திருகுதாளத்தில் புலி.
ஆசிரியருக்கு இந்த பரீட்சை முடிவடைய முதல் யாரென்று உறுதிசெய்யவேண்டும் என்ற எண்ணம்.
ஒருகட்டத்தில் அவர் மாணவர்கள் யாவருக்கும் பின்னுக்கு சென்று அப்படியே வெளியில் சென்று விட்டது போல் பாவனைசெய்து சயாவிற்க்கு முன்னே வராமல் அவன் தலை அங்கும் இங்கும் ஆடுகிறதா என்று பார்த்தால் இல்லை. அவன் தலை ஆடவே இல்லை. அவன் ஆசிரியர் பின்னாலே நிற்கின்றார் என்று விளங்கியிருந்தான். .கரும்பலைகையில் சிறிதான விம்பம் அதைனைக்கொண்டு அவன் அறிந்து கொண்டான்.
ஆனால் ஆசிரியருக்கு எப்படியாவது இவனை அடையாளம் கண்டுவிடவேண்டும் என்று மனதிலெடுத்து இன்னுமொரு உத்தியைக் கையாண்டார்.ஆசிரியர் அது எப்படியும் வெற்றியைத்தரும் என்பதில் உறுதியெடுத்து

அவனுக்கு பின்னாலே சென்று அவனுக்கு குரல் கொடுக்கிறார்."டேய் டேய் எட்டாவது கேள்விக்கு என்ன விடையெடா" டேய் சொல்லு டா " என்று.ஆனால் சயா இது யாரென்றே அறியவில்லை.ஏனென்றால் அவன் அப்ப தான் பரீட்சை எழுதவே ஆரம்பித்தது.அவனுக்கு கோவம் பொங்கிகொண்டு வந்தது பின்னுக்கு இருந்த நீதன் மேல்.இவ்வலவு நேரமும் ஆசிரியருடன் விளையாடிக்கொண்டிருந்தது போதாது என்று இப்ப நான் எழுதும் நேரம் பார்த்து எட்டாவது கேள்விக்கு என்ன விடையென்றால் நான் என்ன செய்ய என்று நினைத்த படியே அவன் இருக்க திரும்பவும் அவன் கேட்டது போல் உணர்வு எட்டாவது கேள்விக்கு என்ன விடையென்று.
திரும்பவும் ஆசிரியர் மெல்லவாக கேட்க "கொஞ்சம் பேசாமல் இருடா பே............. மொக்கா லூசுத்தனமாக கேட்கிறாய் அப்படி இப்படி" கொஞ்சம் கூடுதலாக திட்டித்தீர்த்தான்.
தெரியும் தானே நண்பர்களை ஏசும்போது எப்படியெல்லாம் ஏசுவார்களோ அப்படியெல்லாம் ஏசிமுடிய எல்லா மாணவர்களும் பெரிதாக சிரித்தார்கள்.
ஆசிரியருக்கு என்ன செய்ய ஏது செய்ய இப்படி ஏசிப்போட்டானே என்று அங்கும் இங்கும் பார்க்க "அட இவர் தான் என்றால் கொஞ்சம் கூட ஏசியிருக்கலாமே" என்று ஆசிரியருக்கு முன்னால் வெட்கப்பட்டவனாய் நடிக்க மீண்டும் எல்லோரும் மீண்டும் தொடர்ந்தார்கள்.என்றாலும் இடைக்கிடை விம்மி விம்மி சிரிப்புடன் பரீட்சை முடித்தாலும் வீடு செல்லும் வரை அது தான் கதை எல்லோருக்கும்.

இப்ப சொல்லுங்கோ வழமையாக ஆசிரியரிடம் ஏச்சு வாங்கும் மாணவர்களை கண்டிருக்கிறோம் அப்படியிருக்க இப்படி ஏச்சு வாங்கிய ஆசிரியரின் பெயரை சொல்ல கூடாதுதானே என்ன? ஆனால் இதை வாசித்ததை வைத்து நீங்கள் யாரென்று கண்டுபிடித்தால் நான் என்ன செய்ய?

15 comments:

யாத்ரீகன் said...

:-))))))))))))))

தும்பளையான் said...

இது நிச்சயமா RK வாத்தியிண்ட வேலையாத்தான் இருக்கும். அந்தாளுக்குத்தான் மூளை இந்த ரேஞ்சில வேலை செய்யிறது...

ஜெஸிலா said...

சிரிக்க வைக்கிறதெல்லாம் சரி, உங்க வலைப்பக்கம் வந்தால் பாட்டு ஒலிக்கும்னு சொல்லியிருக்க கூடாது. அலுவலகத்தில் வைத்து தந்த சுட்டியை தட்டினால் சத்தமாக பாட்டு :-(.

RAD MADHAV said...

நல்ல நகைச்சுவை அனுபவம். எனக்கும் இதுபோல் அனுபவங்கள் உள்ளன.
அப்புறம் என்னங்க உங்க தலைப்பு 'கரவையின் ஓசை.
ம்ம்....வித்தியாசமா இருந்தாலும் நல்லா இருக்கு. :-)

கலையரசன் said...

இக்கட்டான சூழ்நிலைதான் தோழா..
நகைச்சுவை சொல்லும் நடை அழகாக வருகிறது உங்களுக்கு..

அது ஒரு கனாக் காலம் said...

வாருங்கள் எங்கள் இலங்கை நண்பரே... நீங்க பிட்டு பத்தி கேள்வி பட்ருக்குகீங்களா... எங்க பசங்க அதுல கில்லாடி.. உங்களுடைய அனுபவத்தை, உங்கள் தொனியில் படிப்பது சுவாரசியமாக இருந்தது. ...

Naadi said...

ஐயா

இது தங்களுக்கு தங்கள் வாழ்வில் நடந்த சம்பவம் என்று நினைக்கிறன்.

பதிவு நன்றாக இருந்தது

Rathai Ramajayam said...

மிகவும் நன்றாக இருக்கு. வித்தியாசமானவொரு முயற்சி. பாராட்டுக்கள்.

கரவைக்குரல் said...

தும்பளை நாமம் தாங்கி வந்தவனே நான் யாருடைய பெயரும் சொல்ல இல்லையே
என்னை யாரிடமும் மாட்டிவிடாதீங்கப்பா
வரவுக்கு நன்றி

பாட்டு வந்தவுடன் மிகவும் வேகமாக அதை தேடிக்கண்டு பிடித்து நிறுத்தியிருப்பீர்களே
அதை நினைத்து சிரித்திருப்பீர்களே, அது போதும், சிரிக்க வைத்த மகிழ்ச்சியுடன்
வரவுக்கு நன்றி ஜெசீலா

ராம் மாதேவ் உங்கள் நகைச்சுவை அனுபவங்களையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்
எதிர்பாத்திருக்கின்றோம்
சொந்த ஊரான கரவையின் நாமத்தில் அங்கிருந்து வரும் ஓசையாகத்தான் அந்த நாமம்
வேறொன்றும் பெரிதாக இல்லை
வரவுக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி

கலையரசா உங்கள் கருத்து என்னை ஊக்குவிப்பதாகிறது.
வந்ததுக்கும் சொன்னதுக்கு நன்றி

பிட்டு என்பதில் கில்லாடி என்று சொல்ல விளைவது என்னவோ?
ஹிஹிஹி
சுவாரஷ்யமான கருத்துக்கு நன்றி கனாக்கால அன்பரே


நாடி கருத்துக்கு நன்றி

என் முயற்சியை பாரட்டிய ராதை ராமஜெயம் உங்கள் வரவு மகிழ்ச்சி
நன்றி கருத்துக்கு

சினேகிதி said...

இதுவரைக்கும் இந்தக்கதை தெரிஞ்சாக்கள் உங்களைக் கண்டுபிடிச்சிருப்பினம்.

நான் இப்படி ஒன்று எழுதும்போது ஆசிரியரின் பெயரை எழுதிவிட்டேன்...என்னைக் கண்டுபிடிச்சு என் குடும்பத்தையே கண்டுபிடிச்சிருக்கினம் ஆக்கள்.

நல்லா இருக்கு வலைப்பதிவு.

கீத் குமாரசாமி said...

தும்பளையான் சும்மா இருமய்யா... கரைவைக்குரல்.. ஆஸ்திரேலியா பழைய மாணவர் சங்க ஆண்டு மலருக்கு ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதி நான் இதே காந்தர்வ ராஜாவோட பட்ட பாடு சொல்லி மாளாது. என் அப்பா வேறு பாடசாலை அபிவிருத்தி சங்கத்தில் இருந்தாரா... ஊஹூம்.. ஒரே தொல்லை போங்கோ... உங்கள் சம்பந்தப்பட்ட ஒரு பதிவு சமீபத்தில் எழுதினேன்.. படித்துப் பாருங்களேன்
http://kiruthikan.blogspot.com/2009/07/blog-post_26.html

பால்குடி said...

பள்ளிக்கூடத்தில “வன்னி” வாழ்க்கை இனிய நகைச்சுவை உணர்வு நிறைந்தது. எங்களுக்கு படிப்பிச்ச ஆசிரியர்களும் நகைச்சுவையாளர்களே... அதிலும் கணிதம் கற்பிப்பவர்கள்... சொல்லவே வேண்டாம்....

வந்தியத்தேவன் said...

//அதை விட ஆசிரியர் கதைக்கும் போதெல்லாம் தன் காதையோ அல்லது நாடியையோ தடவித்தடவித்தான் பேசுவார்.//

ஆஹா அவரா இவர். இவருக்கு நாங்கள் செய்த கொடுமைகள் பல.

கரவைக்குரல் said...

உங்கள் பின்னூடங்களே மொத்தத்தில் ஒரு பெரிய பதிவாகிவிடும் போலவிருக்கிறது.
ஹிஹிஹி
கீத்குமாரசாமி நீங்க பட்ட பாடு போதும் என்று பெருமூச்சு விடுறீங்க, என்ன இன்னுமொரு கட்டுரை எழுதித்தரச்சொல்லியா தொல்லை ?
உங்கள் பதிவைப்பார்த்தேன் மிக்க நன்றி என்னையும் ஏதோ தொடர்புபடுத்தி எழுதியிருக்கின்றீர்கள்
நன்றி வரவுக்கும் கருத்துக்கும் உங்கள் பதிவுக்கும்

கணக்கு படிப்பித்தவர்களுக்கு கணக்கு விட்டதும் அவர்களின் நகைச்சுவைகள் பற்றியும் பகிர்ந்துள்ள பால்குடி
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

வந்தி உங்கள் கொடுமைகள் பல என்று சொல்லுகின்றீகள், பதிந்து விடுங்களேன் உங்கள் பதிவில்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வந்தி

Anonymous said...

aiyo...!ithu rajesh kanthan'e(RK)thaan.anthaaloda naangal paddapaadu konjamo...!avar ippa oyvu petrirukka vendum.nengalum hartley'in mainthano...?pathivu padikka pallikke poy vanthamaathiri oru santhosham.-raavan rajhkumar-jaffna