சுவாரஷ்யவிருது கரவைக்குரலுக்கும்

வலைப்பதிவுகளில் தற்காலங்களில் உலவிவரும் "சுவாரஷ்யபதிவர் விருது" இப்போது கரவைக்குரலின் கைகளில் கிட்டியிருக்கிறது. "விருது பெற்றுக்கொள்ள நான் தகுதியானவானா?" என்பது என் மனதில் கேட்கும் கேள்விகளில் ஒன்று. மனதில் பட்ட விடயங்கள் மற்றும் உள்ளத்து உணர்வுகள் எல்லாம் சொல்லிவந்த எனக்கு மனதில்பட்டு குமுறிக்கொண்டு வந்த பல விடயங்கள் சொல்லவில்லையே என்ற ஆதங்கம் இன்றும் வாட்டுகிறது, அது என்றும் வாட்டும் என்பதும் நான் அறிவேன், ஆனால் சொல்ல முடியாத நிலை அறிவீர்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்கின்றேன்.

அது மட்டுமல்ல "விருது" என்ற சொல் ஒரு பெரிதான சொல் என்பதும் என் பார்வை. அதனாலே இந்த அன பதிவுகளுக்கு கிடைத்த பரிசாகவும் அதே போல தொடர்ந்தும் பதிவிட தந்த அனுமதியுடன் கிடைத்த அங்கீகாரமாகவே கருதி கடலேறியின் அன்பை,மதிப்பை ஏற்றுமகிழ்கின்றேன்.மண் வாசனை வீசும் பதிவுகளின் சொந்தக்காரன் என்று என்னை அறிமுகம் செய்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதுடன் உங்கள் பரிசு என்னை பதிவுலகத்தில் ஊக்கி என்பதோடு அதை தந்த உங்கள் கரத்துக்கு என்றும் நான் நன்றியுடையவன்.

இதை விட என்னை சங்கடத்துக்குள் மாட்டிவிட்டதையும் நான் சொல்லத்தான் வேண்டும்.அறிந்த அறியாத எத்தனையோ வலைப்பதிவாளர்களின் வாசகன் நான்.கோசலன்,ஆரவார தாசன்,கீத் குமாரசாமி, என்று நான் அறிந்த
வலைப்பதிவர்கள் என்னைக்கவர்ந்தவர்கள் போல் உங்களையும் கவர்ந்திருப்பார்கள்,ஆனால் அவர்களுடன் நட்பு என்ற விருது மேலிடுகிறது.மற்றும் சில பதிவர்கள் என் மனதில் வந்தாலும் அவர்கள் ஏலவே பெற்றுவிட்டதால் அவர்களை நான் தொடர்ந்தும் பிரேரிக்கவில்லை.அறு சுவை என்று எல்லாம் அறுவர்களின் பதிவுகள் தெரிவுசெய்யப்பட்டுவந்தாலும் சற்றுவித்தியாசமாக மூன்று முத்தான பதிவுகளை சுவாரஷ்யமாக அறிவிக்கலாம் என்று எண்ணுகின்றேன்.

மண் வாசனை என்றும் இன்னும் என்னவோ எல்லாம் கரவைக்குரலைப்புகழ்பாடி தந்த விருது இந்த மூன்று முத்துக்களுக்கு

இவரும் தன் பதிவுகளில் மண்வாசனையை அடிக்கடி தொட்டுச்செல்பவர்.கசப்பான சம்பவங்களையே சுவாரஷ்யமாக சொல்லிக்கொண்டிருப்பவர், விடிவெள்ளிக்கு சொந்தக்காரன்.தன்னையே வெட்டி என்று சொல்லி பெருமைப்படும் பதிவர்
www.vidivu-carthi.blogspot.com

இவர் தன் பதிவுகளில் வித்தியாசமான பல சிந்தனைகளையும் அவ்வப்போதுவரும் அனுபவங்களும் சுவாரஷ்யமாக சொல்வதில் சிறப்பானவர்.நகைச்சுவைக்கும் இவர் பதிவுகளில் குறைவில்லை.
அற்புதமான பதிவர் தொடுவானத்துக்கு சொந்தக்காரர்.
www.skylinelk.blogspot.com

இவர் ஒரு கவிஞர்,என்றாலும் சுவாரஷ்யமான கட்டுரைகளும் இவர் பதிவினை அலங்கரிக்க காணமுடியும்.
இவர் கவிகளில் உணர்வுகளினூடு கலந்த உண்மை பொதிந்திருக்கும். நிலவில் ஒரு தேசம் அமைக்க வரும் புதுக்கவிஞர்.
www.nilavil-oru-thesam.blogspot.com


இவர்களோடு பதிவுலகில் உலாவரும் சகல அன்பான பதிவர்கள் அனைவரையும் வாழ்த்தி விருதளித்த அன்பன் கடலேறிக்கு சொந்தக்காரன் ஆதிரைக்கு என் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.

13 comments:

கோபிநாத் said...

உங்களுக்கும்..உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

கலையரசன் said...

வாழ்த்துகள்... உங்களுக்கும், உங்களிடம் இருந்து பெற்ற அனைவருக்கும்!!

கலையரசன் said...

மெல்போன் நேரம், அமீரக நேரம், லண்டன் நரம்- முன்னு
வச்சிருக்கீங்களே...
அப்படியே,
ராவுகாலம்,
எமகண்டம்
எல்லாம் காட்டுற கடிகாரத்தையும் வச்சிடுங்க பாஸ்!!

கார்த்தி said...

நன்றி நண்பா உங்களது விருதுக்கு.
விருதுகள்தான் ஒருவரை உயர்த்தும் துாண்கள்..
என்ர பதிவுகளையும் நீங்கள் வாசிக்கிறீர்களா. உருப்பட்ட மாதிரிதான்.
தொடர்ந்து எழுதுங்கள்....

வினோத் கெளதம் said...

வாழ்த்துக்கள் தினேஷ்..

வினோத் கெளதம் said...

//அப்படியே,
ராவுகாலம்,
எமகண்டம்
எல்லாம் காட்டுற கடிகாரத்தையும் வச்சிடுங்க பாஸ்!!//

செம காமெடி..ஹா ஹா ஹா..

வேந்தன் said...

உங்களின் சுவாரஷ்ய விருதுக்கு மிக்க நன்றி.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
விருது பெற்ற உங்களுக்கும் உங்களிடமிருந்து விருது பெறும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

geevanathy said...

வாழ்த்துகள் நண்பரே...

உங்களுக்கும், உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும்!!

யாழினி said...

நன்றி கரவைக் குரல் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் தந்த விருதின் மூலம். இன்று நான் அதற்கான பதிவினை இடுகிறேன்.

யாழினி said...

உங்களிற்கு கிடைத்த விருதிற்கும் எனது வாழ்த்துதல்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

கார்த்தி said...

நண்பரே நீங்கள் தந்த விருதை நானும் 2பேருக்கு பாஸ் பண்ணிட்டேன். பார்க்க விரும்பினால் இந்த Link ஊடாக பாருங்கள்.
http://vidivu-carthi.blogspot.com/2009/07/blog-post.html

சென்ஷி said...

உங்களுக்கும்..உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Jazeela said...

விருதுக்கு வாழ்த்துகள்.