அப்பா.................! இது உங்களை நினைத்து

நினைவுகளில் நீங்கள் எப்போதும்

வருடத்தில் இரண்டு நாள்கள்
மனங்குமுறி அழுதிடுவேன்
ஒன்று என் பிறந்த நாள்
மற்றது தைமாதம் கடைசிநாள்
எல்லோர் வாழ்விலும் தை பிறந்தால்
வழி பிறக்கும் எனக்கும்
அன்று வந்த தை மாதம்
வலி கொண்டுவருமென்று யாரறிவார்
வழிகாட்டிய என்தெய்வம் என் தந்தை
என்னை விட்டு பிரிந்த இரவு அது
அதுவே வாட்டுகிறது இன்றுவரைக்கும்

முதல் நாள் உங்கள் முன்னாலே
வயலின் இசை மீட்ட
சுவையாக சொன்னீர்களே
"தம்பி அவன் நல்லாக வாசிப்பான்" என்று
நிச்சயமாக உங்கள் சொல்லுக்காகவே
அதே வயலின் எடுத்து
எட்டு மேடை ஏறிவிட்டேன்
அத்தனையின் ஆரம்பமும் நீங்களே

அடிப்படைக்கல்வியின் அடிப்படை நீங்களே
கண்டிப்பாய் சொல்லித்தந்தாலும்
அன்பின் அத்திவாரம் நீங்கள்
கணிதத்தின் கடுமையை
இலகுவில் புரியவைத்தீர்கள்
வாழ்க்கையின் சோதனைகள்
சாதனைகள் என்று சொல்லுவீர்கள்
மற்றவர்கள் அன்பு வாழ்க்கையின்
வெற்றி என்றும் சொல்லிதந்தீர்கள்
அத்தனையும் உண்மை அப்பா
தந்தைக்கு தந்தையாய்
ஆசானுக்கு ஆசானாய்
என்வாழ்க்கையின் ஆரம்பம் நீங்களே

எந்தக்கலையிலும் துணிவோடு
மேடைக்கூச்சம் தவிர்த்து
முன்செல்லவைத்த முன்னோடி நீங்கள்
மேடையில் நீங்கள் நவரசமாய்
நடித்து நடித்து பாடலோடு கதையிசைக்க
ரசித்தவர்கள் ஏராளம் -அதையே
என்னை படிக்க வைத்தவர் நீங்கள்
என்னையும் மேடையில் இருக்க வைத்து
கதையிசைத்து பாடவைத்து
அழகு பார்த்தீர்களே
அதற்காக உங்கள் பெயர் நிலைக்க
என்னார்வம் என்றும் நிலைக்கும்
மற்றோரால் பாராட்டப்பட்டதுண்டு நான்
அப்போது உங்களையே நான் நினைத்திடுவேன்
இறைவன் புகழோடும்
விடுதலை வேட்கையோடும்
உங்களால் படைக்கபட்ட கதையெல்லாம்
பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன்
உங்களுக்காய் பேணுகின்றேன்
இன்னும் சொல்ல வேண்டியவை
நிறையவே இருக்கு அப்பா
அவ்வப்போது காலங்கள் உங்கள் பெயர் சொல்லும்
என்மீது மற்றோர் கண்ட திறமைகளில்
அடிப்படையும் ஆரம்பமும் நீங்களே
அந்த அத்திவாரம் என்றும் வெற்றியாய்
இறைவன் புகழோடும்
விடுதலை வேட்கையோடும்
உங்களால் படைக்கபட்ட கதையெல்லாம்
பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன்
உங்களுக்காய் பேணுகின்றேன்
இன்னும் சொல்ல வேண்டியவை
நிறையவே இருக்கு அப்பா
அவ்வப்போது காலங்கள் உங்கள் பெயர் சொல்லும்
என்மீது மற்றோர் கண்ட திறமைகளில்
அடிப்படையும் ஆரம்பமும் நீங்களே
அந்த அத்திவாரம் என்றும் வெற்றியாய்
நினைவுகளில் என் உள்ளங்களில்
நீங்களே எப்போதும்

7 comments:

vasu said...

orumanikorumani ehtir ehthir olithida omgaram reengaram sangeetham ezzaithida.......

kanner kurallil kargikkum singam,vaanam ullavarai vaanam paadiyin kural vaalum thamil ullangalil

thamilai alikka palar,valarkka silar vanampaadi pola

karthi said...

ur father'll be with u in all times. dn't worry

Anonymous said...

Every one has a guide for every thing. Your father is not only your guide but also he is a strong base of your service. This is a good starting.I appriciate your service on develope our language. Keep it up and God bless you.

Anonymous said...

மற்றவர்கள் அன்பு வாழ்க்கையின்
வெற்றி என்றும் சொல்லிதந்தீர்கள்
wow ithu 100% unmai... rempa nice..... iphadiyana oru appaku neenka mahana piranthathu neenka seeitha puniyam, vazhka valamudam, MAY JESUS BLESS YOU!!!

Nirosha said...

Superbbbbbbbb

Nithy Samy said...

நிட்சயமாக உங்கள் அப்பா உங்களுக்கு ஒரு வழிகாட்டி என்பதை விட அவரின் மறு வடிவம் தான் நீங்கள் என்று கூறுவது சாலப் பொருந்தும் வாழ்க வளர்க..
அமரர் வானம்பாடி யோகராஜா ஆசிரியர் அவர்களை எப்போ நினைத்தாலும் கண்கள் குளமாகும், அப்படி
எல்லோர் மனதிலும் நீங்க இடம் பிடித்தவர் உங்கள் அப்பா!

நேசமுடன்... said...

வரலாறு வாழ்த்த வளம் சேர்த்து வாழ்க!
கண்கள் கலங்கி மனம் வலித்தது!

அப்பா! என்ன ஒரு ஒலி மந்திரம்!

இதற்கு மேல்...என்ன சொல்ல ....

அப்பன் உன் திறமைகள் இன்னும் மெருகேறட்டும்.
வாழத்துக்கள்! தமிழ் வளர்த்து வாழ்க!