கோடைகால ஒலிம்பிக் கோலாகல கொண்டாட்டங்களோடு
ஆரம்பமாக இருக்கிறது.
விளையாட்டுகளில் ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ எமது
நாட்டில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் குறிப்பிட்ட
ஒரு சில நாள்கள்
மட்டுமே.ஆகவே அதை மிகப்
பிரமாண்டமாகவே வரவேற்றப்போம் கொண்டாடுவோம் என்று
சந்தோஷத்திலே கொண்டாடி
மகிழ்கிறார்கள்.
கடந்த ஆண்டு மிக அதிகமான மனித உழைப்பால்
ஒலிம்பிக்கின் ஆரம்ப நாள் கொண்டாட்டங்களை
மிகச்சிறப்பாகவே நடத்தி முடித்த சீன நாட்டை தாண்டி இந்த
ஒலிம்பிக்கில் லண்டன் என்ன சிறப்பை ஆரம்பநாள்
வைபவங்களில் காட்டபோகின்றது என்பதுவே உலக மக்களின்
எதிர்பார்ப்பு.ஒவ்வொரு ஒலிம்பிக்கின் ஆரம்பநாள் தொடக்கம்
விளையாட்டுகளை ரசிக்கும் ரசிகர்களாகவே நாங்கள் இருந்து
எதிர்பார்ப்பது அதுவொன்றுதான்.
இன்றைக்கும் லண்டன் நேரம் 9 மணி எப்போது வரும் என்ற
எண்ணம் மட்டுமே.
பதினைந்தாயிரம் கலைஞர்களை உள்ளடக்கி அந்த ஆரம்பநாள்
நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியிருக்கிறது.உலகத்தரம்
வாய்ந்த பிரிட்டிஷ் கலைஞர்களும் தயாரிப்பாளர்களும்
இயக்குனர்களும் இணைந்து அந்த ஆரம்ப நாள் விழா
கொண்டாட்ட நிகழ்வுகளை உருவாக்கியிருக்கிறார்கள்.நான்கு
பில்லியன் மக்கள் பார்வையிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில்
இந்த ஆரம்ப நாள் நிகழ்வுகள் உருவாகியிருக்கிறது.பிரிட்டிஷ்
நாட்டின் தனித்துவத்தை இந்த ஆரம்ப நாள் நிகழ்வுகளில்
முத்திரையிடவேண்டுமேன்பதே மக்களுடையதும்
கலைஞர்களுடையும் மிகப்பெரிய தாகம்.என்றாலும் நிறைவு
வரை யார் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றப்போவது என்றவிடயம்
இரகசியமாகவே பேணப்பட்டு வருகிறது.என்றாலும் பிரிட்டிஷ்
மக்களில் நிறைந்த இடத்தைப்பிடித்த ஒரு சிறந்த விளையாட்டு
வீரன் அல்லது கலாச்சார புள்ளி தான் ஒலிம்பிக் தீபத்தை
ஏற்றலாம் என்ற எதிர்பார்ப்பு.அப்படித்தானே கொடுப்பாங்க
என்றும் நினைக்கலாம்.ஆனாலும் யார் என்று தெரியும் வரை
அது மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவே இருக்கிறது.
ஒலிம்பிக் தீபத்தை தாங்கி வரும் வீரர்கள் நாடுகளின் அகர
ஒழுங்கில் அமைந்து நிறைவில் பிரிட்டிஷ் வீரர் ஒலிம்பிக்
தீபத்தை ஏற்றுவார்.இதற்கு முன்னதாக இங்கிலாந்தின் பல
நகரங்களுக்கும் அழகுபெறும் இடங்களுக்குமூடாக மக்களின்
பலத்த
மகிழ்ச்சி
கரகோஷங்களுக்கும் இசை நாட்டிய
நிகழ்ச்சிகளுக்குமூடாக ஒலிம்பிக் தீபம் இன்று மாலை லண்டன்
ஒலிம்பிக் கிராமத்தை அடைய இருக்கிறது.
ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு ஐல்ஸ் ஒவ் வொண்டர் (Isles of Wonder)என்று பெயரிட்டிருக்கும் லண்டன் ஒலிம்பிக்
ஏற்பாட்டுக்குழு மக்களுக்கு பிரமாண்டமான பிரமிப்பான ஆரம்ப
நாள் நிகழ்வுகளுக்காக தயாராகின்றது.
முற்றிலும் பழமையின் கலாச்சார நிகழ்வுகளுக்கும் தடயங்களுக்கும்
முன்னுரிமை கொடுக்கும் லண்டன் இந்த நிகழ்வுகளிலும் அந்த
கலாச்சார அழகுகளை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் மக்கள்
மத்தியில் இருக்கிறது.லண்டனின் மிகச்சிறந்த கலைஞன், இயக்குனர்
டேனி போயில்( Danny Boyle)மற்றும் அவரது குழுவினர் அதற்கான
பூர்வாங்க ஏற்பாடுகளை சிறப்பாகவே நடத்திமுடித்திருக்கின்றார்கள்.
மற்றும் அமேரிக்கா ஆகிய நாடுகளோடு போட்டியிட்டு தங்கள்
நாட்டிலே நடைபெறும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட லண்டன்
அதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட அனைத்து
சேவைகளையும் விரிவுபடுத்தியிருக்கிறது. ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு செக்கனும் துளித்துளியாக
செதுக்கியிருப்பார்களோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.
பில்லா 2 கள்!!!!!!!
இன்றைய ஆரம்பவிழாவிற்கான ஒத்திகை நிகழ்வுகள் ஒலிம்பிக்
ஏற்பாட்டுக்குழுவினரால் நடத்தி முடிக்கப்பட்டும் இருக்கிறது.
ஒளிச்சேர்க்கையால் அழபெற்றிருக்கிறது.
லண்டனிலே மாறுகின்ற காலநிலை தான் ஒரு சவால். கூடியளவில்
மிகச்சரியாக கணிப்பிடப்படும் காலநிலை எதிர்வு கூறல்களும் ச
றுக்கிவிடுவதும் உண்டு . 8 மணிக்கு மழைத்தூறல் என்றும் 9
மணிக்கு முகில் மூட்டத்தொடும் காலநிலை அமையும் என்று
தற்சமயம் காலநிலை எதிர்வுகூறப்படுகிறது.சில
மணித்தியாலங்களில் அது சிலவேளைகளில் எப்படி மாறிவிடும்
என்பது யாருக்குமே தெரியாத விஷயம்..இப்படியாக காலைநிலை
எதிர்பார்ப்பு.
என்றாலும் லண்டனில் பல வர்ண ஜால ஒளிச்சேர்க்கைகளாலும்
அழகுபெறப்போகும் லண்டன் அதிரவைக்கும் பிரமாண்டமான
இசையால் கலகலப்பும் சந்தோஷமும் அடைய தயாராகின்றது
என்பது மட்டும் உண்மை.
கடந்த ஒலிம்பிக்கில் சீனாவின் பீஜிங்கை விட இந்த ஆண்டு
லண்டன் என்ன எப்படி வித்தியாசமான பிரமாண்டத்தை
மக்களுக்கான பிரமிப்பை லண்டன் கொடுக்கும் என்பதே
லண்டன் என்ன எப்படி வித்தியாசமான பிரமாண்டத்தை
மக்களுக்கான பிரமிப்பை லண்டன் கொடுக்கும் என்பதே
எதிர்பார்ப்பு.கொண்டாட்டத்தில் திளைக்கும் மக்களோடு
உல்லாசமக்களின் உல்லாசத் தளமாக இந்த ஆண்டில் ஒலிம்பிக்
கிராமமே லண்டன் நகரில் அழகோடு
காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.
இன்று இரவுப்பொழுது லண்டன் நகரமே ஒளியிழைகளால்
அழகுபெறப்போகிறது என்பது மட்டும் உறுதி