வாழ்க்கைக்கு அர்த்தம் கொடு-வானவில்லில் தொடரும் சுட்டு விரல்


தற்கொலை தனிமனிதன் தனக்கான வாழ்க்கையின்
நம்பிக்கையை முற்றுமுழுதாக இழக்கும் வேளையில் அவன்
தனக்காக தெரிவுசெய்யும் பாதையாகின்றது,
தனது உயிரென்றாலும் அதை அந்த மனிதனாலேயே
பறித்துக்கொள்ள  உரிமை இல்லை என்று சட்டங்கள் பல
நாடுகளிலும்  இயற்றப்பட்டிருப்பினும் கொலை மற்றும்
தற்கொலைகளின்  எண்ணிக்கைகள்
பெருகிக்கொண்டேபோகின்றன.
என்றாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை
மிகக்குறைவுதான்,ஏனென்றால் அந்த அந்த நாடுகளில்
சட்டப்படி வாழ்வுரிமை அல்லது தங்கி வாழ்வதற்கான
உரிமையுடைய ஒவ்வொரு மனிதனுக்குமானதன்னிறைவான
வாழ்க்கைச்சூழல் அமைந்துகாணப்படுகிறது.
அப்படியான எதிர்கால நிச்சயமான தளத்தில் குறிப்பிட்ட
மனிதனுக்கான வாழ்க்கை பூச்சியமானது எவ்வாறு?

அண்மையில் கேள்விப்பட்ட விடயம்.வாலிபவயது
தமிழ்ப்பெண்ணின் சாவு,அது இயற்கை மரணம் இல்லை
என்பது மட்டும் உண்மை, அது தற்கொலையா? அல்லது
கொலையா? என்று துப்புத்துலங்க முன் அதனைத்தொடர்ந்து
ஐந்து நாள்களில் அந்த பெண்ணின் தந்தையார் தனது
ஆற்றமுடியாத கவலையின் உச்சத்தில் தற்கொலை
செய்திருக்கிறார்.
அதுவும் புலம் பெயர்ந்த நாட்டில் இடம்பெற்றிருக்கிறது.
ஏன் எதற்காக இந்த மரணங்கள் ஏற்பட்டது என்பதை அலசும்
விடயங்களுக்கு அப்பால் இந்த கொலைகளுக்கான செய்திகள்

புலத்தில் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தை ஆரோக்கியமான
பாதையில் சென்றுகொண்டிருக்கிறதா என்ற பார்வை நோக்கில்
சிந்தனைக்குட்படுத்துகிறது.
தெரிவு செய்யப்பட்ட தற்கொலை என்ற   அவனுடைய
பாதை  அவன் மற்றும் அவன் சார்ந்த சமுதாயத்திற்கான ஒரு
தலைக்குனிவே.அந்த சமுதாயமோ,அவன் வாழ்ந்த
சூழலோ அல்லது சார்ந்த  குடும்பமோ அந்த நிலையை
ஒருவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெளிவு.
ஆனால் ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழ் சமுதாயத்தை
நோக்குமிடத்து  அது அந்த தனிமனிதன் சார்ந்தது என்றோ
அல்லது அந்த குடும்பம் சார்ந்த பிரச்சனை என்றோ
ஒதுங்கிவிடவோ ஒதுக்கிவிடவோ முடியாது,இந்த வேளையில்
அவரின்மனைவியின் பெயர் எங்கும் உள்வாங்கபடவில்லை
என்றும்செய்திகள் கிடைத்திருக்கிறது.
தாயக நிலங்களில் தவழ்ந்து வளர்ந்து எத்தனையோ கஷ்டங்கள்
வாழ்க்கை சுமைகளை சுமந்து புலத்தை நோக்கி பயணித்த
சமுதாயம் எங்கள் சமுதாயம்.புலத்தில் உழைத்தென்றாலும்
எங்கள் குடும்பத்தை  சமுதாயத்தை உயர்த்திவிடலாம் என்ற
கனவோடு ஒவ்வொரு நிமிடங்களும் மிகக்கடின  வாழ்க்கையை
அனுபவித்து வாழ்பவர்கள் எந்த வேளையிலும் தற்கொலை என்ற
பாதையை எவர் தெரிவு செய்தாலும் அது ஆமோதிக்க முடியாது.
அன்றைய காலங்களில் புலம்பெயர்ந்த காலங்களில் தனிமை
என்ற கொடுமை எங்கள் சமுதாயத்தை ஆட்டுவித்திருந்ததது.


எங்கோ ஒரு மொழி தெரியாத நாட்டின் நகரத்தில் தனிமையாக
வந்து தொழில் தேடி உழைத்து நிலைத்த சமுதாயம்.இன்றைய
காலங்களில் அப்படியான தனிமை என்ற உணர்வுகள் எந்த ஒரு
மனிதனுக்கும் இருக்கமுடியாது என்று உறுதியாகச்சொல்லலாம்.
ஏனென்றால் ஐரோப்பிய நாடுகளெங்கும் மிகக்கூடியளவு பரம்பலோடு வாழ்கின்றது எங்கள் சமுதாயம்.
ஒரு காலத்தில் புலத்திற்கு வந்த எங்கள் சமுதாயத்தின்
இளைஞர்கள்  போதைவஸ்துகளுக்கு அடிமையாகி  கொலைகள்
தற்கொலைகள் என்ற கவலைக்கிடமான நிலைகில் எல்லாம்
இருந்திருக்கின்றார்கள்.அப்படியான செய்திகள் இப்போது
கிடைப்பது அரிது.ஆனால் உறவுகளில்
விரிசல்கள்,கோபதாபங்கள்,இங்கு பிறக்கும் குழந்தைகளின்
செயற்பாடுகளால் பெற்றோர்களுக்கு வரும் தாக்கங்கள்,குழந்தை
பெற்றோர் இடைவெளிகள்,குடும்பத்தினுள் சண்டைகள்,
விவாகரத்துகள்,இவற்றினால் வரும் கொலைகள் தற்கொலைகள்,
என்று ஒட்டுமொத்த சமுதாயத்தின் பாதை ஆரோக்கியமற்ற
சூழலில் நகர்கின்றது.
ப்படியென்றாலும்  கடின உழைப்புகளோடு
உன்னதமான வாழ்வை அமைக்கக்கூடிய சூழல்களை  கொண்ட
நாடுகளிலிருக்கும் எங்கள் சமுதாயம் வாழ்க்கை என்ற
பயணத்தை அர்த்தமுள்ளதாக்கும்படி சிந்திப்பது சாலச்சிறந்தது.
புலத்தில் எந்த ஒரு தமிழ் மகனும் தன் வாழ்க்கையை நம்பிக்கை
இழக்கும்படியாக சமுதாயம் நகர்த்தக்கூடாது.அப்படியான
சந்தர்ப்பங்களிலும் எமது உறவுகள் என்ற உணர்வோடு மனித
வாழ்க்கையின் அர்த்தத்தை புரியச்செய்தால் அதுவே சிறப்பு.அது
இங்கு பிறக்கும் சிறார்களுக்கும் உணரச்செய்ய வேண்டிய
விடயமாகின்றது.அடுத்த தலைமுறைகள் தமிழ் சமுதாயம்
என்றே நிலைபெறவேண்டும்,தனக்கான செழிப்பான
வாழ்க்கையை அமைக்க எல்லோரும் உழைத்து பிழைக்க வல்ல
நவீன உலகத்தின் முன்னோடியான அபிவிருத்தியடைந்த
நாடுகளில் வாழும் எங்கள் சமுதாயத்திற்கு , கொலை,தற்கொலை
என்ற ஏற்றுக்கொள்ளத்தகாத நம்பிக்கை இழந்தவாழ்க்கைப்பாதை
ஆரோக்கியமானதா?
வாலிப வயதிலேயே வரும் வேண்டத்தகாத இழப்புகள்  தமிழ்
சமுதாயத்தை எதிர்காலத்தில் எந்த நிலைகளுக்கு கொண்டு
செல்கிறது?
குறுகிய நிலையற்ற வாழ்வின் மனதிற்கினிய சந்தோஷங்களை
புரிந்துஉறவுகளோடு பகிர்ந்து,மற்றோரையும் அரவணைத்து
அடுத்த தலைமுறைக்கான சரியான படிப்பினைகளை
எடுத்துச்செல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்கள் சமுதாயத்தில்
அனைவருக்கும் புரியவில்லையா?
உறவுகளின் பிணைப்பும் புரிந்துணர்வற்ற நிலைகளும், சுய நல
சிந்தனைப்போக்குகளும் தொடர்ந்தும் நிலைக்குமாயின்
ஒட்டுமொத்த சமுதாயமும் எங்கள் பண்பாடுகளை, கூடிக்களித்த
வாழ்க்கையின் உண்மையான பாசபிணைப்புகளை அறுத்தெறிந்து
நலமான வாழ்வை இழக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள்
தள்ளப்படலாம் என்று சுட்டிவிரல் சுட்டிக்காட்டுகிறது,


நன்றி வானவில்

3 comments:

jeyamanthra said...

புலம்பெயர்ந்த சமுதாயம் ஒரு வேரறுந்த மரம் என்று சொல்வதில் தவறில்லை. தலைமுறைகளுக்குள் தூரம் என்பது சொந்த நாடுகளிலேயே சகஜம். ஆனால் புலம்பெயர்ந்து வாழும்போது அந்தத் தூரம் இன்னும் அதிகமாகிவிடுகிறது பரிமாணங்களில். எனவே நீங்கள் குறிப்பிடுவது போல குறுகிய நோக்கத்தில் வாழும் எங்களுக்குள் இப்படியான நிகழ்வுகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடரும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

anuthinan said...

இதற்க்கு என்ன பதில் சொல்வது என்றே தெரிய இல்லை நண்பரே!

கரவைக்குரல் said...

நன்றி உங்கள் கருத்துக்கு ஜெயமந்திரா.

அனுதினன் //பதில் கிடைக்காததால் தான் எழுதியிருக்கிறேன்.நீங்களும் கைவிடுகின்றஈர்களே......//