பொய்யான உலகத்தில் பொய்யான வாழ்க்கை

பொய் சொல்ல போறேன்

வாழ்க்கையில் எத்தனையோ விடயங்கள் நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும் எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு வழிகாட்டி
சென்றிருக்கின்றார்கள்.அத்தனை விடயங்களையும் கடைப்பிடிக்கலாமா இல்லையா என்பது வேறு விடயம்
ஆனால் அத்தனை அம்சங்களையும் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றி என்பது நிச்சயம்.எந்த ஒரு அம்சத்தையும் அவர்கள் தங்கள் அனுபவங்கள் வாயிலாக கூறியிருப்பதுதான் அவற்றின் சிறப்பு ஆகும்.
"பொய் சொல்ல கூடாது பாப்பா" என்று எட்டயபுரத்துக்கவிஞன் பாரதி பாட அதை சிறு பராயம் முதலே அக்கு வேறு ஆணிவேறாக பெற்றோர் ஆசிரியர் என்று எல்லோரும் அடிப்படையாக ஊட்டி வளர்ப்பர்.
பொய் சொல்லி விட்டால் அதற்கு சிறு தண்டனையும் வேறு.
ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக நல்ல பெரும் உதவிக்காக்க அல்லது பெரு நன்மைக்காக ஒரு சிறிய பொய் சொன்னால் பரவாயில்லை என்று உலகத்தமிழ் மறையை எமக்குத்தந்த பொய்யாமொழிப்புலவன் வள்ளுவன் உரைத்திருக்கின்றான்.இதன் மூலம் மற்றவர் பெருநன்மை அடைந்துகொள்ளமுடியும் என்பது வள்ளுவனின் நம்பிக்கை.தன் ஆணித்தரமான கருத்தை வலுவூட்ட அதை அவர் ஒரு பெரிய தர்மம் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
மொத்தத்தில் பொய் சொல்லக்கூடாது என்பதுதான் வரையறையாக இருக்கிறது இந்த உலகத்தில்.
ஆனால் ஒருத்தியை காதலிக்கவும் திருமண பந்தத்தில் இணைத்து வைக்கவும் ஆயிரம் பொய் கூட சொல்லிவிடலாம் என்கிறது இந்த உலகம்.
பொய்யை சொல்லி பின்னர் வாழ்கையின் போது குடும்பங்கள் அந்த பொய்யை அறிந்து சின்னபின்னமாகி போவதும் தவிர்க்கமுடியாததொன்றாகி இருக்கிறது .
அதற்காக "நீ ரொம்ப அழகி என்றும்,உன்னை விட இந்த உலகத்தில் யாரும் இல்லை என்றும் பொய்யைத்தான் சொல்ல போறேன் என்று கூறிவிட்டு பொய்யை சொல்லலாமா?
உன்னைப்பற்றி சொல்லவதெல்லாம் பொய் என்று சொல்லிவிட்டு காதலிக்கு அந்த ஆணே பொய்யை சொல்கின்றான் என்றால்,அதை அந்த காதலையும் நம்புகின்றாள் என்றால் இந்த பொய்யான உலகத்தில் இதுதான் பொய்யான வாழ்க்கையோ?என்ற கேள்வி வரத்தான் செய்கிறது

பொய் சொல்ல போறேன் பொய் சொல்ல போறேன் நீ ரொம்ப அழகி யெடி

2 comments:

Anonymous said...

சிறந்த விளக்கம்
ஆழமான ஆராய்வு
தொடரட்டும்

Anonymous said...

ஐயா கரவை குரல் அவர்களே!!! வள்ளுவனை பொய்யா மொழிப் புலவனென்றுரைப்பதை நீங்கள் நன்கறிவீர்கள். அவனே கூறியிருக்கிறான் ஒரு உண்மையை காப்பாற்ற பொய் கூறலாம் என்று. காதல் என்ற ஒரு உண்மையை காப்பாற்ற சில பொய் கூறுவது தப்பா ஐயா......