மாமாவான கதை

அடி மேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பது எல்லோரும் கேள்விப்பட்டதொன்றுதான்.
அதேபோல் இடி மேல் இடி இடித்தால் என்னவாகும்?
உதாரணத்துக்கு அரிசியை இடித்தால் அது மாவாகும், மாவை இடித்தால் அது மாமாவாகும்.மாமாவாகும் விளைவின் கடினப்பாதைதான் இது

எனக்கு தெரியும், "யாரும் மாமா ஆன கதை" என்றால் அதெல்லாம் எப்படி என்று எல்லாரும் கலைச்சுக்கொண்டு வருவீங்க என்று.இப்ப வந்திட்டீங்க என்ன??????????????????
சரி

எல்லாரும் எப்படியோ எப்படியோ மாமா ஆகியிருப்பீர்கள், பலகாதலர்களை இணைத்து வைத்து அவர்களை வாழ வைத்த பெருந்தகைகளும் அவ்வப்போது மாமாக்களே,
எனக்கு நல்ல நினைவு இருக்கிறது இருகாதலர்கள் இணைந்தபோது அவர்களை இணைத்து வைத்த ஒரு நண்பியை என் நண்பன் ஒருவன் மாமி என்று அழைத்த போது அந்த பொண்ணுக்கு மூக்குக்கு நேரேகோவம் வந்தது.
இதே போல என் நண்பன் ஒருவனுக்கு இப்படி சொன்னபோது "நண்பா இப்படி என்னை மாமா என்று அழைத்தால் எத்தனை தடவைதான் நான் மாமாவாகிக்கொண்டே இருப்பது" என்று சந்தோசம் கலந்து தன் உள்ளக்கிடக்கையை பகிர்ந்து கொண்டபோது "இன்றிலிருந்து "காதலை வாழவைத்த மாமா ஆகுவாய்" என்று சூழ்ந்திருந்தவர்களால் பாராட்டப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் சிலர் பிறக்கும்போதே இவர்களின் பாட்டன்,பாட்டி,பூட்டன்,பூட்டி செய்த விதிப்பயனின் விளைவாக மாமாவாகவே பிறந்தவர்களும் இருக்கிறார்கள்.இப்படியாக மாமா ஆனால் அல்லது மாமி ஆனால் சிலருக்கு சந்தோசம்,சிலருக்கு கோவம்,சிலருக்கு வயது போகிறதே என்ற கவலை,;இப்படி ஏராளம்,
இதைவிட சிலருக்கு மாமா என்றால் கொஞ்சம் பயமும் கூட,ஏனென்றால் வீட்டுக்கு ஒருவருக்காவது பிள்ளை பயந்து வளர வேணும் என்று குழந்தையை வளர்ப்பதுதான், எனக்கு நல்ல நினைவு இருக்கிறது என் பக்கத்துவீட்டு வினோ வீட்டுக்கூரைக்கு மேலே பட்டம் விட்டுகொண்டு இருந்தாலும் "ஆசைமாமா வாறாரடா" என்று சொல்லிவிட்டால் விட்ட பட்டத்தை கைவிட்டுவிட அது வையிரவர் கோயில் வேம்பு மரத்தில் மாட்டிவிட
நடுவீட்டில் புத்தகமும் கையுமாக தணல் பறக்கும் படிப்பு.அப்படி மாமா என்றால் பயந்துகொள்ளும் பிள்ளைகள் வேறுஇது இவனுக்கு அன்று அதிகாலை விடியும் வரையோ அவன் மாமாவாகப்போறான் என்று தெரியாது.வெளி நாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தற்காலிகவாழ்க்கை.இவன் அவ்வப்போது வாரவிடுமுறைதினங்களில் தன் ஒரேஒரு உறவினன் வீட்டுக்கு சென்றுவருவது வழமை,சிலவேளைகளில் விடுமுறை நாள்களில் பிந்திய நித்திரை விழித்தெழுதலால் போக மனம் மறுத்துவிட்டால் அண்ணன் தொலைபேசி அழைப்பும் வந்துவிடும்.தன் குழந்தைகளுடன் குடும்பமாக இருக்கும் அண்ணன் அவனை வரும்படி கட்டாயம் அழைத்திடுவான்.
இப்படித்தான் ஒரு நாள் வழமைபோல வாரவிடுமுறையில் அண்ணன் வீட்டுக்கு போனான் இவன்.வழமைபோலவே அண்ணனின் சின்னஞ்சிறுகுழந்தைகளுடன் விளையாடுவதும் தொலைக்காட்சி பார்ப்பதுமாக இவன் வேலை, அக்கா மத்தியானம் பப்படம் உட்பட நாலு கறியுடன் சாப்பாடு, அதையும் சாப்பிட்டுவிட்டு திரும்பவும் அண்ணாவுடன் ஊர்க்கதையும் சின்னஞ்சிறிசுகளுடன் விளையாட்டும்,இதைவிட வேறொன்றும் அவன் பண்ணிவிடுவதுமில்லை.சில வேளைகளில் கொஞ்சம் வெளியிடங்களுக்கு போய் வருவதும் உண்டு.ஆனால் அன்று மட்டும் வழமைக்கு மாறாக அக்கா குசினியை விட்டு வெளியேறாமல் கொஞ்சம் வேகமாக ஏதோ பண்ணுறா, "என்ன அக்கா ஏதும் பொரிச்சு கிரிச்சு தரப்போறீங்களோ" என்று இவன் என்றவாறு நகைச்சுவை வார்த்தைகளால் பம்பல் விட
"இல்லை இல்லை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு மீண்டும் தடல்புடலாக நடக்குது.
"சரி அப்ப அண்ணா நாங்க போட்டு வாறம் " என்று பக்கத்திலிருந்த தாசன் அண்ணாவையும்தட்டிக்கொண்டு எழும்ப இண்டைக்கு போகமுடியாது வேளைக்கு" என்றான் அண்ணா
"இல்லை இண்டைக்கு ஒரு விசேஷம் முடிச்சுக்கொண்டு போங்க" என்று அண்ணன் கதை தொடர்ந்தது." என்னடாப்பா இது என்ன எண்டு விளங்க இல்லை" என்று தாசன் அண்ணா நித்திரை வெறி முகத்தில் தெரிய இவனை ஒரு பார்வை.கொஞ்ச நேரம் விட்டு அண்ணா கதிரை எல்லாம் ஒருகரையாக அடுக்கி படங்கொன்று விரித்து பெட்டி நிறைய இருந்த விளையாட்டு பொருள்கள் எல்லாம் எடுத்து அடுக்க இவனும் அடுக்கிறான் ஏதும் அறியாதவனாக,இவனுக்கு பக்கத்தில் நின்ற தாசன் அண்ணாவும் இவனோடு சேர்ந்து அடுக்கி முடிய,அக்கா ஒருதட்டிலே ஏதோ அடுக்கியபடி வந்தா. "என்ன அக்கா" என்று கேட்பதற்க்குமுதல் அண்ணா மற்ற அறைக்குள் இருந்த படி புகைப்பட கருவியுடன் வந்தார், எல்லாமே சரியாக வர அண்ணன் மகள் ரிஷா படங்கிலே இருத்த இவன் கையிலே அந்த தட்டு கொடுத்த அக்கா "இந்த பல்லுகொழுக்கட்டையை ரிஷாவின்மேல் கொட்டுங்கோ" என்று கொடுத்தார்.'நல்ல மாமாவை கண்டுபிடிச்சிட்டீங்க அக்கா" என்று சொல்லியபடி வாங்கிய இவன் ரிஷா படங்கிலே முதலில் சிரித்து பின்பு அழுதபடி இருக்க விளையாட்டு பொருள்கள் சூழ்ந்திருக்க அக்காவின் அரவணைப்பில் இருக்க இவன் மற்றும் தாசன் அண்ணா பல்லுகொழுக்கட்டையை தலைமேலே கொட்டுகிறார்கள்
முளைத்துவிட்ட முதற்பல்லுடன் எல்லாமே சிறக்க கிளவிதோட்டத்தானை வேண்டியவனாக இவன் கொட்டிவிட்ட பல்லுகொழுக்கட்டையை தூக்கினாள் ரிஷா.அதைக்கண்டு இவனுக்கு கொஞ்சம் சந்தோசம்.
திடீரென இப்படியாக மாமாவாகிவிட்டதை எண்ணி ஒரு சிரிப்பு மனதுக்குள் இவனுக்கு.சிரிப்போடு கொட்டிவிட்ட பல்லுகொழுக்கட்டையை ஒரு தட்டில் மீண்டும் நிரப்பி அக்கா கொடுக்க ஒன்றுமே விடாமல் எல்லோரும் சேர்ந்து பகிர்ந்துவிட்டு "அக்கா என்னை நீங்கள் மாமா ஆக்கி போட்டீங்க என்ன?"என்று சிரித்தவாறாக மீண்டும் திரும்பினான் இவன் தன் தங்குமிடம் நோக்கி.

No comments: