சுதந்திரம், உரிமை என்பதற்கு அப்பால் கௌரவம் என்பது ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் பார்க்கப்படுகிறது.""அவன் எப்படி இப்படி கதைக்கலாம்.இவன்
எப்படி அப்படி கதைக்கலாம்,அப்படி செய்தால் என் கௌரவம் என்னாகிறது?
கௌரவம் குறைந்ததால் நான் எப்படி அவனை முகம் முழிப்பது""
என்றெல்லாம் அற்ப விடயங்களுக்கெல்லாம் கௌரவம்.
"அவன் அதை செய்துவிட்டானோ நானும் விடபோவதில்லை" என்று ஒரு
கௌரவம் என்ற விடயத்திற்காகவே தங்கள் பணத்தை செலவு செய்து
தங்களை தங்கள் வாழ்வை அழித்துக்கொண்டவர்களும் ஏராளம்.
"அவன் அதை செய்துவிட்டானோ நானும் விடபோவதில்லை" என்று ஒரு
கௌரவம் என்ற விடயத்திற்காகவே தங்கள் பணத்தை செலவு செய்து
தங்களை தங்கள் வாழ்வை அழித்துக்கொண்டவர்களும் ஏராளம்.
ஆனால் கௌரவத்தோடு மற்றவர்கள் மதிக்கும் படி வாழ்பவர்களும் ஏராளம்.
என்றாலும் தனிமனித கௌரவம் என்பது எலோருக்கும் உரித்துடையது.
அவரவர் உயரம், ஆழம்,இடைவெளிகள்,தனித்துவம்,திறமை,
புலமை,நாகரிகங்கள் மதிக்கப்படும் போது அவரவர் கெளரவங்களுக்கு
உண்மையான இடம் வழங்கபடுகிறதாக கருதலாம்.உண்மையில் அவை
மதிக்கப்படவேண்டிய ஒன்றுதான்.ஒவ்வொரு துறைக்குமான கௌரவங்கள்
என்றும் நோக்கப்படலாம்.உண்மையில் எமது கலைகள் ,படைப்புக்கள்
திறமைகளுக்கும் அப்படியான கௌரவங்கள் வழங்கப்படுவது
அரிதாகிக்கொண்டு போகின்ற நிலைகளும் காணப்படுகிறது.உண்மையில்
இதற்காக இப்படியான கௌரவக் குறைச்சல்களுக்காக விவாதிக்கும் அல்லது
கையிலெடுக்கும் காலம் வரவேண்டும் என்பதே படைப்பாளிகளின்
எண்ணமாகிறது.
மனிதர்களை இனம் பார்த்து இடம்பார்த்து திசை பார்த்து நிறம் பார்த்து
மொழிபார்த்து கௌரவம் கொடுக்கும் காலம் இருக்கும் வரைக்கும்
மனிதர்களை நோக்கி தாக்கப்படும் ,மனம் தாங்கப்படும் படலமும்
தொடரத்தான் செய்யும்.
இவையெல்லாம் உண்மையான கெளரவக்குறைச்சல் இதுதான்.ஆனால்
இவை எல்லாவற்றையும் தாண்டி புலமையாளர்களுக்கு கௌரவம்
கொடுக்கவேண்டும் என்று செயற்படும் அமைப்புகளும் ஊடகங்களும்
செயற்படும் தளங்களும் இருக்கின்றன.ஆனால் அவற்றை ஏளனம் செய்யும்
மனிதர்களும் ஒரு புறம் வாய்க்கு வந்தபடி பேசுவதும் உண்டு.ஆனால்
இவர்கள் காலத்தால் எங்கள் அடையாளங்களை அழிக்கிறோம் என்பதும்
காலத்தில் நாணிக்குறுகி நசுக்கப்படுவோம் என்பதும் அறியாமல்
இருக்கிறார்களோ அல்லது தெரிந்து தான் செய்கிறார்களோ என்பது
புரியாதவிடயமாகிறது. இவர்கள் கௌரவக் குறைச்சல் என்பது
தெரிந்தும் தெரியாத,புரிந்தும் புரியாத மானுடப்பிறவிகள்.
இன்றைய நாள்களில் உலகளவில் பேசப்படும் தொழி நுட்பங்களில் ஒன்று
அப்பிள் நிறுவனத்தின் ஐ போன் (I Phone)உம் அடங்கும்.உலகில் முதல்
தரத்திலிருக்கும் அந்த தொழி நுட்பம் எல்லோராலும் வியப்போடு
பார்க்கும்படியாக தனது சேவைகளை விஸ்தரித்துக்கொண்டு விஸ்வருபம்
எடுக்கின்றது என்றே சொல்லிவிடலாம்.கையில் இருந்துகொண்டு உலகின் எந்த
மூலைக்கும் அழைத்துக்கொண்டு சென்றுவிடும்.
இப்போது இந்த அப்பிள் நிறுவனத்திற்கும் ஒரு கௌரவக் குறைச்சலாம்.
அண்மையில் இணையத்தளத்தில் வந்த வீடியோ தான் இதற்கு
முழுகாரணமாகிவிட்டது.
என்ன ஒரு ஐ போனை தாறுமாறாக சுட்டிருக்கிறார்.
ஏன் சுட்டார் என்றால் இப்படி கூடிய காசுகொடுத்து வாங்கிய ஐபோன்
எவ்வளவு தூரம் சேதமாகிறது என்பது பற்றிஅறிந்துகொள்ளத்தானாம்.
அதுவும் கூடிய காசுக்கு வாங்கியது ஒரு சில நொடிகளில் எவ்வளவு
சேதமாகிறது என்று அறிந்துகொள்ளவே இப்படி ஒரு சூடு அப்பிளின்
ஐபோனுக்கு.
அந்த சூடு அப்பிளுக்கு கொஞ்சம் ஆழமாக சுட்டுவிட்டதாம்.
ஆழமாக சுட்ட சூடு இப்போது எப்படி சுட்டாலும் பாதிக்காதபடி செய்யப்
போகின்றார்களாம் அப்பிள் நிறுவனத்தினர்.
துப்பாக்கி ரவைகள் துளைக்காத தகடுகளாலான ஐபோன்கள்
உருவாகப்போகிறது.அதற்கு பெரிய விலை வித்தியாசம் கூட
கொடுக்கப்போவதுமில்லை என்று அடித்து சொல்கிறது.
50கலிபர் துப்பாக்கிரவை என்றாலும் அது பட்டுத் தெறிக்குமே தவிர துளைத்து கெடுக்கபோவதில்லை,மாறாக துளைக்காதபடி அந்த தகடுகள் பாதுகாப்பு
கவசங்களாகப்போகிறது.
கவசங்களாகப்போகிறது.
ஒரு ஐபோனுக்கு சுட்ட சூடு எங்குபோய் சுட்டிருக்கிறது என்று பார்த்தீர்களா?
ஆனால் ஐபோனை போட்டோ எடுக்க மட்டுமே பாவிபோருக்கும் அந்த
துளையை மட்டும் தகட்டால் மூடாது அமையவிருக்கிறது என்று
சொல்லப்படுகிறது.
மொத்தத்தில் ஒருவர் சுட்ட சூடு அப்பிளை அந்த மாதிரி சுட்டிருக்கிறது என்பது
மட்டும் தெளிவு.
கெளரவக்குறைச்சல் என்று முதலாளிகள், முதல் தரத்திலிருப்பவர்கள்
எதையும் செய்ய
தயாராக இருக்கும் காலம் வரைக்கும் அதை பாவித்து
பயனடைபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.என்றாலும் வேற்று நாட்டின்
ஏற்றுமதி பொருளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் தனது உற்பத்திக்காக
அதன் முதலிடத்திற்காக கௌரவம் பார்ப்பதில் தப்பேதுமில்லைதானே.
அப்படியான கௌரவப் பார்வைகள் பாவனையாளர்களுக்கு நல்ல
சேவைதான்.
ம்ம்ம் அப்பிளின் நியாயமான கௌரவ குறைச்சல் தண்ணீருக்கும் அதனால்
வரும் பாதிப்பிற்கும் இருக்கட்டும்.
கௌரவக் குறைச்சல்கள் என்ற பார்வைகள் நியாயமாக தேவையோடு மேலான சிந்தனையோடு வாழட்டும்.
படங்கள் இணையம்
No comments:
Post a Comment