நண்பன் இன்னொரு படம் வெளியீடு


நண்பனின் இன்னொரு படம் ...... அது எப்படி இருக்கும்.எப்படி
உருவாகியிருக்கும் என்ன கதையாக இருக்கும் என்ற ஆர்வத்தோடு
வருகைதந்த அனைவருக்கும் நன்றிகள்.
நிச்சயமாக இது நண்பனுக்காக எழுதப்படுவது அல்ல.அந்த படைப்பை எனது
பதிவின் மூலமும் ஒரு அறிமுகத்தை தரவேண்டும் என்ற எண்ணத்தோடு
மட்டுமே  பதிவுசெய்கிறேன்.நிறைவில் உங்கள் விமர்சப்பார்வையை உங்கள்
கருத்துகளில் பதிவு செய்யுங்கள் அந்த படைப்பை மேலும் ஊக்கபடுத்தும் .
நண்பனின் படம் என்றால் எல்லோரும் ஒரு ஆர்வத்தோடு வருவீர்கள்
அதனால் உங்கள் ஆக்கபூர்வமான கருத்து பதிவு செய்யப்படும் என்ற
எதிர்பாபோடு பதிவு செய்திருக்கிறேன்.
லண்டனில் உள்ள கலைஞர்கள் இவர்கள்.கலைத்தாகம் இளைமை
உற்சாகம்,தேடல்கள் என்று தங்களை ஈடுபடுத்தி இன்னுமோர் படைப்பை
வெளியிட்டிருக்கிறார்கள்.பாடல்களுக்கு  தனது நடிப்பை வெளியிட்டுவந்த
நண்பன் குறும்படம் வாயிலாக சிறப்பான நடிப்பை வெளியிடிருக்கிறார்(ன்)
அதுதான் நண்பனின் இன்னொரு படம்


விரதத்தோடு அரைகுறையாக கேக் சாப்பிடும்போது 


                      பின்னுக்கு லண்டன் பாராளுமன்றம் இருக்கிறது என்றுதான் 
                                           கையை காட்டுகிறோம்.நம்புங்கள் 
                               

நண்பன் ஜே ஜே மற்றும் சிந்துவின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது
கலையும் நீயே காதலும் நீயே 

இல்லற வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒரு கலைத்தாகம் உள்ள இளைஞனின்
கதையாக இது அமைந்திருக்கிறது.கலை ,காதல் இல்லற வாழ்க்கையில்
எப்படி சந்திக்கிறது? அந்த காதல் கலைத்தாகமுள்ள  இளைஞர்களுக்குள்
எப்படி மனதின் ஆழங்களில் எப்படி புதைந்துபோயிருக்கிறது என்பதை
குறும்படம் சொல்கிறது.
மிகுதியை நீங்கள் குறும்படத்தை பார்த்து ரசித்து தெரிந்துகொள்ளுங்களேன்.

லண்டனில் இருக்கும் பல்வேறு வேலைப்பளுக்களுக்கு மத்தியில் குறும்படம் 
தயாரிப்பது என்பது மிகக்கடினமான ஒரு காரியம்.
கதை வசனம்,பாடல், நடிப்பு,படப்பிடிப்பு,பின்னணிக்குரல்,பாடல்
இசை,படத்தொகுப்பு என்று பலவேறு கலைஞர்களும் இணைந்து இந்த
படைப்பை மிகச்சிறப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்.குறும்படத்தில்
ஆரம்பத்தில் அவர்களின் பெயர்கள் பதிவு செய்யபட்டிருக்கின்றது.
அனைவரும் முழு வீச்சோடு தங்கள் கலைப்பணியை ஆற்றிக்
கொண்டிருப்பவர்கள்.நண்பன் ஜே ஜே மற்றும் சிந்து இவர்கள் இருவரையும்
நேரடியாக திரையில் பார்க்கலாம்.





கலைஞர்கள் வாழும்போதே வாழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு
ஈழத்திற்கான  அடையாளங்களாக கலைப்படைப்புகள் மிளிரவேண்டும்.அந்த
கலைஞர்கள் கலையுலக வாழ்வு சிறக்கவேண்டும் என்ற அன்போடு
கரவைக்குரல் தனது வாழ்த்துக்களை பதிவு செய்கிறது.

சாமியார்,பக்தர்கள், முதலாளிகள், ஊடகங்கள், ஊகங்கள்-மோதல்கள்

ஆரம்பத்திலேயே ஓட்ட நறுக்கபடவேண்டிய பிரச்சனைகளை இப்பொழுது
இந்து மத சங்கங்கள் தங்கள் கைகளில் தூக்கி எடுத்திருக்கிறது.இந்து மதம்
பற்றிய விடயங்கள் பொழுதுபோக்கு விடயங்களுக்காக பாவிக்கப்பட்டு
தூசிக்கபடுகின்றது என்று இந்து மதத்திற்காக அவலக்குரலெழுப்பும் காலம்
இன்றைய காலங்களாகிவிட்டது.
இந்து மத சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் பலராலும்
நகைச்சுவைக்குமளவிற்கு சாமியார்களின் செயற்பாடுகள் அமைந்துவிட்டதா
என்ற கேள்வி எழுகிறது.

கேள்விகள் எழும்பக்கத்திலேயே விடைகளும் கிடக்கிறது.
அண்மையில் வெளியான "ஒரு கல் ஒரு கண்ணாடி" என்ற திரைப்படத்தில்
சாமியார் பற்றிய விடயம் இந்துமதத்தை சார்ந்த அமைப்புகளால் பலத்த
எதிர்ப்பு வெளியிடப்பட்டது.அந்த திரைப்படம் திரைக்கு வர அனுமதிக்கக்
கூடாது என்பதற்காக வழக்கும் தொடரப்பட்டது.என்றாலும் அந்த வழக்கு
தள்ளிப்போடபட்டு திரைப்படமும் வெளியாகிவிட்டது.
ஒரு திரைப்படம் அந்த அந்த காலங்களில் மக்கள் மத்தியில் பேசப்படும்
விடயங்களை சமுக செயற்பாடுகளின் கண்ணாடியாக வெளிவருவது
தவிர்க்க முடியாததொன்றுதான்.அப்படி அமைந்தால் தானே திரைப்படமும்
மக்கள் மத்தியில் பேசப்படும்.இது சினிமாத்துறை சார்ந்தவர்களின் கருத்து.
ஆனால் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எல்லைகளை
கண்காணிக்க அந்தந்த துறைக்கு தரநிர்ணயம் மற்றும் கட்டுப்பாட்டுத்துறை
இருக்கிறது என்ற அடிப்படையில் அவர்களினுடாக அந்த திரைப்படமும் வந்து வெற்றியோடு ஓடிக்கொண்டிருக்கிறது.புலத்திலும் ஓடுகிறது.
மொத்தத்தில் சாமியார் பற்றிய விடயம் திரைப்படத்தில் வருகின்றது என்பதை  இந்துமதம் சார்ந்த அமைப்புகள் கூக்குரல் எழுப்பி அது தெரியாத
பாமரக்குடிமகனுக்கும் தெரியப்படுத்தி சில நிமிடங்களே வரும் காட்சிக்காக
திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிக்கு ஒருவகையில் மறைமுகமாக
வழிகொடுத்திருக்கிறார்கள் என்பது தெளிவு.

சாமியார்கள்
சாமியார்கள் உண்மையில் இந்துமதத்தின் அடிப்படைகொட்பாடுகளையும்
அதன் வழி கிடைக்கும் நிறைந்த வழிகாட்டுதல் சிந்தனைகளையும் எந்தவித
எதிர்பார்ப்புகளுமின்றி அறவழியில் மக்கள் மத்தியில் இறைபணி
செய்துவருபவர்களாக பார்க்கபடுகின்றார்கள்.ஆனால் இன்றையகாலங்களில்
சிலர் அவர்கள் மக்கள் மத்தியில் நம்பப்படுவதற்கும் உத்தம சீலர்களாக
வருவதற்கும் மக்களிலிருந்து  ஏதோ ஒரு வகையில் வேறுபடவேண்டும்
என்று நினைகிறார்கள்.
ஏதோ மதம் தழுவிய அற்புதங்களோ அல்லது மக்களால்
செய்யமுடியாததொன்றை செய்து காட்ட வேண்டும் என்று பிரயத்தனம்

எடுப்பதனால் அதன் பின்னர் எல்லோராலும் உற்று நோக்கப்படும் நபர்களாக
மாறியும்விடுகிறார்கள்.அன்றைய காலங்களில் மக்கள் மத்தியில் அறவழி
சிந்தனைகளை விதைத்து நற்காரியங்கள் பல செய்து மக்களால் நெஞ்சிருத்தி
ஏற்றுகொள்ளப்பட்டவர்கள் ஏராளமிருக்கிறார்கள்.அவர்களின் சிந்தனைகளும் 
செயற்பாடுகளும் அப்படி அவர்களை ஏற்றுக்கொள்ளவைத்ததும் உண்மையே.
ஒரு சில சாமியார்களின் ஏற்றுக்கொள்ளத்தகாத செயற்பாடுகளினால்
ஒட்டுமொத்தமாக இறைபணி செய்பவர்களும் வஞ்சிக்கபடுகிறார்கள் என்ற
கவலை எல்லோர் மத்தியிலும் இருப்பதும் உண்மையான விடயம் தான்.
இப்போது ஆதீனங்களின் நம்பபத்தன்மைகள் மீது கேள்விக்குறிகள் 
போடுகின்ற அளவுக்கு சாமியார்கள் பிரச்சனை தலை விரித்தாடுகிறது.


பக்தர்கள்
பக்தர்கள் உண்மையில் இந்த விடயங்களில் ஒரு வகையிலான
ஏமாற்றவாளிகள்.அவர்களின் மிதமிஞ்சிய இறைபக்தி ஒரு சில
சாமியார்களினால் ஏதோ ஒரு வகையில் பயன்படுத்தபடுகின்றமை கவலை
தரும் விடயமாகின்றது.
அவர்கள் எங்கு சென்றாலும் "அவர்களுக்கான சேவை இறைவனுக்கான பணி" என்று சாமியார்களுக்கான பணிவிடைகளுக்காகவும்
வழிபடுதல்களுக்காகவும் பின் தொடர்கின்ற தன்மை இறைபணியை கூறி
பக்தர்கள் ஏமாற்றப் படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
அதுமட்டுமல்லாமல் அவர்கள் பாவித்த பொருள்களை வீடுகளில்
பாதுகாத்து வைத்திருந்தாலோ அல்லது வழிபடும் இடங்களில் வைத்து
வழிபட்டாலோ அது இறைவனுக்கான சேவை என்றும் அந்த சாமியாரே
வீட்டில் வந்து குடிகொண்டு அருள்புரிவதாக நினைக்கும் மக்களும்
இருக்கிறார்கள்.
அதுவும் நவீன தொழிநுட்பங்களால் முன்னேறிய நாடுகளில்
வாழும் புலத்து மக்களும் பக்தர்களாக இப்படியாக அற்ப சிந்தனைகளால்
கட்டுப்பட்டு ஏமாற்றப்படும் நிலைகள் காணப்படுவதாக சொல்லபடுகிறது.
என்றும் அவர்கள்  சாமியார்களின் உண்மை நிலைத்தன்மைகள்
தெரியாமலேயே சாமியார்களை பின்தொடர்கின்ற தன்மை பக்தர்கள்
அத்தோடு அப்படியான சாமியாரின்நிலைகளை புரிந்துகொள்ளமுடியாத
அறிவு ,இந்து மததத்துவங்களால் ஏமாற்றபடுகின்றார்களோ என்ற பார்வை
இருக்கத்தான் செய்கிறது.


முதலாளிகள்
இந்த சாமியார்கள் விடயங்களில் முதலாளிகள் எங்கு சம்பந்தபடுகின்றார்கள் என்பது ஒரு கேள்விக்குரிய விடயமே.புலத்தில் இந்த முதலாளிகளின்
ஆதிக்கம் சாமியார் விடயங்களில் அதிகம் காணப்படுகிறது.
அதற்காக அந்த வகை முதலாளிகள் தங்களை அந்த அந்த சாமியார்களை
பின்தொடர்பவர்களாக காட்டிக்கொள்வார்கள்.அத்தோடு அந்த சாமியார்களை
புலத்திற்கு வரவழைக்க உதவியும் செய்துகொள்வார்கள்.பணம் செலவழித்து
அவர்களை கொண்டு வந்து அந்த சாமியார்களுக்கு விளம்பரம் கொடுத்து
மக்களிடம் பணம் சேர்த்து உழைக்கிறார்களாம்.சாமியாரை சந்திக்க
குறைந்தளவு கூடியளவு என்று பணம் எல்லைகளை விதிப்பதும் கூடியளவு
பணம் செலுத்துகின்றவர்களுக்கு அந்த சாமியார் வீடு சென்றும் அருட்பயன்
கொடுப்பதாக வழிமுறைகளை கையாளுகின்றார்கள்.அதில் லாபம்
இருக்கிறதோ இல்லையோ என்பதில்லை பேசப்படுகின்ற விடயம்.
பணம் சேர்க்கபடுகிறது என்பதும் அதுவும் மத நெறிகளை மக்களின்
வழிபாடுகளை பணம் சுரண்டும் நடவடிக்கைகளுக்காக
பயன்படுத்தபடுகின்றது என்பதுமே மற்றவர்களால் பார்க்கபடுகிறது.
ஒட்டு மொத்தத்தில் புலத்தில் ஒரு சில முதலாளிகள் ஏதோ ஒருவகையில்
இந்து மத சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் மற்றவர்கள்
வஞ்சிக்கப்படும் நிலைக்கு கைகொர்க்கின்றார்கள் என்பது தெளிவாகிறது.
எங்கள் காசு எங்கள் சாமியார் நாங்கள் எதுவும் செய்வோம் என்ற சிந்தனை
முதலாளிகளும் புலத்திலிருப்பதும் கவலைதரகூடிய விடயமே.அவர்கள்
அறப் பணிகளுக்காக தங்கள் நலம் சாராமல் பொதுநலம் சார்ந்து
செய்வார்களேயானால் அது சிறந்த மேலான சேவையாகவிருக்கும் என்பது
திண்ணம்.
ஊடகங்கள்

ஊடகங்கள் ஒவ்வொரு நாள்களும் அசையும் உலகத்தையும் அந்த
ஊடகம்சார்ந்த சமுதாயத்தையும் ,அந்த ஊடகத்தின் நேயர்களின்
எதிர்பார்ப்புகளையும்பார்த்துக்கொண்டேதானிருக்கும்.நடைமுறை
செய்திகளை உடனுக்குடன் தருகின்ற போது ஊடகங்களின் உயிர்ப்புத்தன்மை பேணப்படுகிறது.அது எந்த முறையிலும் வழங்கப்படலாம்.
உண்மையான பிரச்சனைகளை உறுதியான தெளிவோடு
சொல்லவேண்டும் என்ற அடிப்படையில் ஊடகங்கள் உறுதியோடு பல்வேறு
வகைகளைக் கையாண்டு மக்கள் மத்தியில் கருத்துக்களை விதைக்கும்.
அந்தவகையில் சாமியார்கள் சார்ந்த விடயங்கள் சமூகத்தினால்
நோக்கப்படும் காலமாகிவிட்ட இந்த காலங்களில் ஊடகங்களும்
கையிலேடுக்கவேண்டிய நிலைகளுக்கு தள்ளபட்டிருக்கின்றன.
ஊடகங்கள் சுட்டிக்காட்டும் விடயங்கள் மிகைப்படுத்தப் பட்டனாவாக
இருக்கிறது என்று குற்றஞ்சாட்டும் இருக்கிறது.
என்றாலும் எந்த சாமியார்களால் இந்த வினை என்பதை அறிந்து அந்த
கூட்டங்களை வெளிப்படையோடு சுட்டிக்காட்டும் நிலைக்கு வரவேண்டும்
என்பதே மக்களுடைய எதிர்பார்ப்பு. இதற்காக இந்துமத அமைப்புகள் தங்கள்
செயற்பாடுகளை விஸ்தரிக்க வேண்டும்.மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக
உண்மை நிலைகளை தெளிவுபடுத்த வேண்டுமேயொழிய அதை
சுட்டிக்காட்டும் சினிமா மற்றும் ஊடகங்கள் மீது பாய்வதில் எந்த அர்த்தமும்
கிடையாது.
அதற்கு ஆதரவளிக்கும் ஊடகங்கள் மக்கள்மத்தியில் நிலைபெறும் என்பதும் திண்ணம்.
புலத்தில் இப்படியான சாமிக்கோல வருகையாளர்களை இனங்காண
வேண்டிய நிலைக்குள் சமுதாயம் தள்ளபட்டுக்கொண்டிருக்கிறது.
உண்மை எது பொய் எது என்ற உண்மைத்தன்மைகள் அறியாதவர்களாக
சமுதாயம் மாற்றப்பட்டுவிடுமோ என்ற அச்ச நிலைகள் உருவாகியிருக்கிறது.


ஊகங்கள்
உண்மை எது பொய் எது என்பது எல்லோருக்கும் ஒரு வகையான ஊகங்கள்.
சமயம் சார்ந்த அறநெறிக்கருத்துக்களை மக்களுக்கு இறைபணி போல்
செய்யமுற்படும் மனிதர்களில் உண்மையாளர்கள் யார் ,நெஞ்சில்
வஞ்சகத்தோடு வந்து சமயோசிதமாக ஏமாற்றமுற்படுபவர்கள் யார்
என்றெல்லாம் ஊகங்கள் கிளம்புகிறது,
எல்லா ஊகங்களும் ஒன்று சேர்ந்து மோதுகின்றன.மோதல்கள் இந்த
சாமியார்கள் விடயத்தை எல்லோருக்கும் கதைக்களமாகி
விவாதப்பொருளாகி நகைச்சுவைக்குமளவிற்கு வளர்க்கிறது.
உண்மை என்ற வழியில் அறப்பணியில் ஈடுபடும் இறை
சேவையாளர்களையும் இப்படியான ஊகங்கள் வசைபாடுகிறது என்பது தான்
கவலை தரும் விடயம்.ஊகங்கள் மோதல்களுக்கு காரணமே
உண்மைத்தன்மையற்ற சாமியார்களின் செயற்பாடுகள் என்பதை மக்கள்
மற்றும் அமைப்புக்கள் வெளிப்படுத்தவேண்டும்.உண்மைத்தன்மைகளை
இனங்கான வேண்டிய மற்றும் வெளிப்படுத்த வேண்டிய காலத்தின்
கட்டாயத்தில் இந்து மத அமைப்புகள் இருக்கிறதேயொழிய மாற்றாக
வெளிபடுத்தும் ஊடகங்கள்: மீதோ படைப்பாளிகள் மீதோ அல்லது ஊகங்கள்
மீதோ கவனம் செலுத்துவதில் அர்த்தம் கிடையாது.
இனங்கண்டு வெளிப்படுத்தி தவறானவர்கள் ஓரங்கட்ட அதிகாரமுள்ள இந்து
ஆதீனங்களோ அல்லது அமைப்புக்களோ முன்வரவேண்டும் என்பதே இறை
பணியாளர்களின் எதிர்பார்ப்பு.




ஒவ்வொரு நிலையிலும் ஏன் இப்படி மக்களால் சிந்திக்க வேண்டிஇருக்கிறது என்பதை எல்லோரும் கேட்கும் காலம் எப்போது வருமோ அபோதுதான் இப்படியான நலிவான சிந்தனையோடு கூடிய செயற்பாடுகளுக்கான விடிவு கிடைக்கும்.அந்த செயற்பாடுகளை இந்துமத அமைப்புகள் ஆரம்பத்திலேயே
அடைளாளம் கண்டு நறுக்கத் தயாராகுங்கள்.அதைவிடுத்து காலம் கடந்த
ஞானம் மற்றவர்கள் கேலிகூத்தாக பார்க்கும்படியாகத்தான் வரவைக்கும்.
அறப்பணியில் ஈடுபட்டு இறை சேவை சிந்தனையாளர்களுக்கு சில சாமியார்
செயற்பாடுகள் மற்றும் இந்த சாமியார்கள் பற்றிய கண்ணோட்டங்கள்
கவலை தரும் விடயம் என்பதே மறுக்கப்படமுடியாத உண்மையாகிறது.