அரசியல்வாதிகளே கவனம்!!!!!!!!!!!!!!!!! இது செருப்பெறி காலம்
அரசியல் வாதிகள் மக்களுக்கு வேண்டியவர்களாக இருப்பவர்கள் என்பதைவிட இப்போதெல்லாம் வேண்டாதவர்களாக மாறிவருகிறார்கள் என்பது தான் இன்றைய நிலையாக மாறி வருகிறது.
அரசியல் வாதிகள் மக்களுக்காக தங்கள் சேவை என்று அடிக்கடி சொன்னாலும் அவர்கள் எவ்வளவு தூரம் அவர்களுக்கு வேண்டியவர்கள் என்பது அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு உணர்த்த மக்கள் தயாராகிவிட்டார்களோ என்றவாறாக அண்மை சம்பவங்கள் உணர்த்திவருகின்றன.
தேர்தல் காலங்களில் அரசியல் மேடையில் ஒரு பேச்சும் அதிகார கதிரையில் ஏறிய பின் ஒரு பேச்சும் பேசினால் அது மக்களுக்கு விளங்காமல் விடுமா என்ன?
அதிகார கதிரை என்பது மக்களுக்காகவே என்றில்லாமல் தங்களின் சொந்த கதிரை என்று நினைத்து அதில் குதிரை ஆடினால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்வார்களா என்று சற்றேனும் சிந்திக்காமல் அரசியல் நடத்தும் அரசியல்வாதியை மக்கள் எவ்வாறாக உலகில் நடத்துகிறார்கள் என்பதும் அதே போல சற்றேனும் தனது கொள்கையிலிருந்து விலகாமல் தனது இலக்கை அடியும் வரை யாருக்கும் மடியாமல் பயணிப்பவரை மக்கள் எவ்வாறாக உலகமெல்லாம் நடத்துகிறார்கள் என்பதும் எல்லோருக்கும் வெளிச்சம்.
இன்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க் அவர்கள் இந்தியாவின் அஹமதாபாட் என்ற இடத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்து ஒருவர் மூடுகாலணியால் வீசி இருக்கிறார்.
இது இன்று ஆரம்பித்த விடயமொன்றல்ல.உலகின் வல்லரசாக கணிக்கப்படும் நாடுகளில் முதலாவதாக இந்திய பிரதமருக்கு வீசியதும் அல்ல.
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அவர்களுக்குத்தான் இது ஆரம்பம்.ஈராக்கில் ஊடகவியலாளர் மகாநாட்டில் பேசிக்கொண்டிருந்தபோது ஆரம்பித்த இந்த செருப்பெறி
இப்போது இன்னொரு வல்லரசாக கணிக்கப்படும் இந்தியாவில் பரவியிருக்கிறது.
இதற்கு முதல் இந்தியாவிலேயே ஒரு சிறந்த அமைச்சராக கவனிக்கபடுவது மட்டுமல்லாமல் தமிழ் நாட்டை பிரதி நித்துவப்படுத்தும் நடுவண் அமைச்சர் பா.சிதம்பரத்தின் மீது செருப்பெறி விழுந்தது.
இது மட்டுமல்லாமல் இன்னோர் அமைச்சர் மீதும் வீசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதற்கும் பாதுகாப்பு வழங்கலாம் செருப்புக்கு எப்படி பாதுகாப்பு வழங்குவது என்று முழிக்கிறதாம் பாதுகாப்பு அணி.
"என்ன செருப்பு போடாமல் வாருங்கள்' என்று சொல்வதா என்று தீவிர சிந்தனையில் இருக்கிறார்களாம்.
இதைவிட அதிகார கதிரையில் இருக்கும்போது மக்களுக்காக இருந்துவிட்டால் இப்படியான சங்கடமொன்றும் தேவையில்லையே?
இதுமட்டுமில்லை மக்களின் துயர்துடைக்காமல் மக்களின் உண்மையான ஏக்கம் என்னவென்று புரியாமல் மாறாக துன்பத்துக்கு தூண்டுதலாகவும் உதவியாகவும் இருக்கும் அரசியல் வாதிகளுக்கும் பதில்சொல்லும் காலம் வெகுதூரத்தில் இல்லை
நீங்கள் வாழும் காலத்தில் உங்களுக்கு பதில் கிடைக்கும் உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு.
இது செருப்பெறி காலம் இனி என்னவெல்லாம்வரும்மென்று பார்த்துகொண்டே இருங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல அரசியல்வாதிகள் மீதுகூட ஷு வீசப்படலாம்..
இது அசிங்கமான கலாச்சாரம்தான் சந்தேகமில்லாமல்....
சில நேரங்களில் ஒட்டுமொத்த எதிர்ப்புகளுக்கு ஆளாபவர்கள் மீது ஷூ வீசப்படும்போது பலரது கோபத்தின் வெளிப்பாடாக அது பார்க்கப்பட்டாலும்..ஷு வீசப்படுபவர்கள் எல்லாம் மோசமான அரசியல்வாதிகளுமல்ல ஷூ எறிவது போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்களும் உரிமை வீரர்களுமல்ல.....
உங்கள் வருகைக்கு நன்றி பிரபு
உங்கள் ஆழமான கருத்துக்கும் நன்றி
ஷூ எறியப்படுவது அசிங்கமான கலாச்சாரம் தான்
அதை தூண்டுவதும் இந்த அரசியல் வாதிகளின் செயற்பாடுகள் தான்
இதில் மறுப்பிற்கு இடம் இல்லை.
அதைத்தான் நீங்கள் சில நேரங்களில் ஒட்டுமொத்த எதிர்ப்புக்களுக்கு ஆளாபவர்கள் என்று கூறி அதை கோவத்தின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டது நோக்கவேண்டியதொன்று.
குறிப்பிட்ட மக்களின் துயர் துடைக்காமல் மக்களின் உண்மையான தேவை, ஏக்கம் என்ன என்று புரியாமல் . மாறாக துன்பத்துக்கு தூண்டுதலாகவும் உதவியாகவும் இருக்கும் அரசியல் வாதிகளுக்கு தான் இந்த பிரச்சனை.
மக்களால் எதிர்ப்பை முடிந்தளவு எப்படி காட்ட முடியும் என்றும் இருக்கிறதல்லவா?
பாதிப்பினாலேயே எதிர்ப்பாகி அவை பல சேர்ந்து உரிமை வீரர்களை உருவாகும் என்பதில் சந்தேகமும் இல்லை
Post a Comment