வாழ்க உதயன்


அதிகாலை விடியுமுன்
கதியாக எம்வாசல் வந்து
கதவைத்தட்டி செய்தி சொல்லும்
உதயனே வாழ்க

தனித்துவமாய் செய்திகள் அதில்
துணிச்சலுடன் உண்மைகள்
நெருக்கடிகள் பலவரினும்
ஒரு நாளும் தவறாமல்
விரைவுடனே வந்து எம்
வீடுதட்டி செய்தி சொல்லும்
உதயனே வாழ்க

மூலையென்ன முடுக்கென்ன
முந்திச்செல்லும் ஊடகம் நீ
எந்த மூலை செய்தியெனினும்
உன்பார்வை அங்கிருக்கும்.
மின்னல் போல் விரைந்து நீ
சொன்ன சொல் தப்பாமல் எம்
வாசல் வந்து செய்திக்கதைகள் சொல்லும்
உதயனே வாழ்வாயாக

விருத்துக்கு உன்பெயர்
அறிவித்த கணத்திலே
ஆர்ப்பரித்த ஊடக உலகின்
கரகோசங்களின் மிகையொலி
உன்பெருமை பறைசாற்றும்.

ஈழத்தின் படைப்பாகளிகளை
வளர்த்தெடுத்த உத்தமன் நீ
(பல்)வித்தைகளின் வரவிலக்கணம்
வித்தியாதர சிறப்புனக்கு - உதயா
சித்திக்கும் என்றும் வெற்றியுனக்கு


மக்கள் மனமறிந்து - அங்கு
உணர்வுகளை சரிவரவுணர்ந்து
உலக ஊடங்கங்களில் தனித்துவமாய்
உலவும் உதயனே வாழ்க பெருமையுடன்

அண்மையில் அதியுயர் கௌரவ விருது ஒன்று உதயன் நாளேட்டுக்கு வழங்கப்பட்டிருப்பதையிட்டு கரவைக்குரல் மகிழ்ச்சியடைகிறது.இலங்கை பத்திரிகை ஆசிரிய சங்கமும் இலங்கை பத்திரிகை நிறுவனமும் ஏற்பாடு செய்த இந்த விழாவில் இந்த கௌரவம் அளிக்கப்பட்டிருக்கிறது. "" சேமபால"' விருது ஆகிய அதிஉயர் விருது அளிக்கப்படிருப்பதையிட்டு கரவைக்குரல் மகிழ்ச்சியடவதோடு ஆசிரியர் வித்தியாதரன் அவர்களையும் உதயனையும் வாழ்த்துவதில் பெருமையடைகிறது.

2 comments:

Anonymous said...

பல தடைகளையும் தாண்டி துணிவுடன் செயலாற்றும் உதயன் இக்கு வாழ்த்துக்கள் .

யாழினி said...

வாழ்த்துக்கள் உதயன் பத்திரிகைக்கு!