காதலர் தினம்
உலகம் கொண்டாடும்
காதல்….
இலக்கியமெங்கும்
நேசித்ததும் காதல்…
புராதனத்திலிருந்து
பூசித்ததும் காதல்….
உயிருள்ளவரை நிலைபெறப்போவதும்
காதல் தான்…..
பள்ளிக்கூடத்திலிருந்து
படலை வரை காதல் இயங்கும்...
சில வாழ்வையே இயக்கும்…
பள்ளிக்காதல் சில
புஷ்வாணமாகும்..
சில வாழ்ந்து நிலைக்கும்…..
பல என்றும் மனதில்
நிலைக்கும்….
காதலில் கலக்ககுவது
எப்படி??????
கலைத்து கலைத்து
காதலித்துப்பார்
அது என்றும் களைக்காத
சுகமாகும்……
நேரகாலம் தெரியாது
போகும்!!
இரவு பகலாகும்!
சாப்பாட்டு நேரங்கள்
மறந்து போகும்….
குளிக்கும் நேரம்
மாறும்..
அப்படி குளித்தாலும்
அது மணிக்கணக்காகிவிடும்….
பகலில் நடை நித்திரையாக்குவதும்
காதல் தான்….
பகல் கனவும் காதல் கனவாகும்…….
இரவில் காதல் கதையை
காதோடு கேட்ட ருசிகள்
தொலைபேசியும் அறியும்
காதல் கதை…..
ஒரே கதையை காது திரும்ப திரும்ப கேட்டாலும்
உற்சாகம் மெருகேறும்….......
வீட்டிலிருந்து
சிலரை ஓடவைக்கும்….
காதலின் வெற்றிக்கான
பாதை அது என்பர்…..
காதலை கொண்டாட சிலருக்கு
பயம் கொஞ்சம் இருக்கு….
யார் யாரையோ காதலிச்சு
போடுமோ என் பிள்ளை என்று தான்….
எவனுக்கு எவளென்று
எழுதியிருக்கு – அதை
களவாக்காமால் கெளரவமாக்கின்
வாழ்க்கையில் வெற்றி
கருதிவிட்டோர் வாழ்வும்
என்றும் சுகமே……
காதல் சில கனவாகும்
…..
இன்னும் சில கதையாகும்…
சில மணமேடவரை ஏறும்….
வென்ற காதலை உலகம்
பேச மறுக்கும்
அதை மனதில் இருக்கவைத்து
மறந்துபோகும்…
பிரிந்தயையும் தோற்றதையும்
வாய்க்கு வாய் உச்சரிக்கும் உலகம்
காதலிப்பவர்கள்
காதலை ரசிப்பவர்கள்
காதலை ருசிப்பவர்கள்
காதலில்
காத்திருக்கும் சுகம் காணுவோர்....
நினைவில்
காதல் பட்டியல் நீளுகிறது.............
ஏனெனில் உலகம் கொண்டாடுவதும்
காதல் தான்………
கொண்டாடும் காதலுக்கு ஒரு தினம்.......
அன்பின் பெருமையை
சொல்ல அது……
பாசத்தின் வலிமையை
சொல்ல அது……
காதலை காதலித்து
காதலால் வாழ்வமைத்து
காலமெல்லாம் காதல்
நிலைக்கட்டும்…
காதல் தொடரும்
காதல் கவியும் தொடரும்
காதலில் உங்களில் ஒருவன்
யோகா தினேஷ்
No comments:
Post a Comment