முட்டுதோ முட்டுதோ

இதிலை யாரிலை பிழையைச்சொல்ல,என்னதான் சொன்னாலும் அதை பொலிஸ்கேஸ் ஆக்கி போட்டாங்கள்,அதுவும் ஆசியாவிலை ஒரு சில நாட்டு பொலீஸ்காரன் என்றால் "காசைகீசை" குடுத்து தப்பிபோடலாம்,இது இவங்களிட்டை ஒண்டும் செய்யமுடியாது,இவங்கள் எங்கை பிழையைபிடிச்சு தண்டப்பணம் வாங்கலாம் என்று ஓடித்திரியுறாங்கள்,
அதுவும் ஒரு வழிக்கு சரி தான்.இல்லாட்டில் எங்கடை சனத்தை கட்டுபடுத்திறது ரொம்ப கஷ்டம் தான்.தண்டப்பணத்தை கூட்டினால் பிழைகள் செய்வதை ஓரளவுக்கு குறைக்கலாம் என்பது தான் அந்த பொலீஸ்காரரின்ரை எண்ணம்,

எல்லாத்துக்கும் கடுமையான சட்டமும் தண்டமும்,வாகன ஓட்டுவதற்கும் அந்த நாட்டிலை கடும் விதிகள்,
வேகத்தை கொஞ்சம் கூட்டினால் போதுமாம்,"டக்" எண்டு போட்டோ(புகைப்படம் எண்டு ஆங்கிலத்தில் சொல்லுவினம்) எடுத்து அதுக்கு எவ்வளவு தண்டப்பணம் என்று வெப்சைட்டிலை(ஆங்கிலத்தில் இணையத்தளம் எண்டு சொல்லுவினம்)போட்டுவிடுவார்கள்.
அப்படி அந்த அந்த இடத்தில் எவ்வளவு வேகமோ அவ்வளவு வேகத்தத்தை தான் கடைப்பிடிக்க வேண்டும்.
அதேபோல இன்னொரு எங்கெல்லாம் வாகனத்தை கொஞ்ச நேரம் கூட நிறுத்திவிட்டால் அதற்க்கும் பணம்.
அதுக்கு ஒரு மெஷின்(ஆங்கிலத்தில் இயந்திரம்) இருக்கு,அதிலை போடவேண்டியகாசை போட்டுவிட்டு டிக்கெட்(ஆங்கிலத்தில் பற்றுச்சீட்டு) காருக்கு(ஆங்கிலத்தில் மகிழூந்து) முன்னாலை போட்டுவைக்க வேண்டும்.
அப்படி காசு கறக்க நிக்கிறாங்கள் எண்டு நம்மவர்களின் நினைப்பு
விபத்துக்கள் கூடிக்கொண்டு செல்வதாலும் வாகனப்பாவனை அதிகரிப்பதாலும் இதையும் கட்டுப்படுத்த வேணும் என்பதும் இந்த பொலீஸ்காரரின் சிந்தனை,அதனால் இந்த லைசன்ஸ்(ஆங்கிலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் என்று சொல்வார்கள், பொதுவாக லைசன்ஸ் எல்லோரும் சாரதியனுமதிப்பத்திரத்தைத்தான் குறிப்பிடுவார்கள்,ஆனால் எதற்கும்,எந்த ஒரு ஆரம்பத்துக்கும் லைசன்ஸ் இருக்கிறது என்பது நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை) இந்த எடுப்பதையும் கட்டுப்படுத்த தொடங்கிவிட்டார்கள்,அதற்கு என்ன செய்கிறார்கள் ஒருவர் குறந்தளவு ஆறு அல்லது ஏழு தடவை இந்த பரீட்சையில் தோற்றச்செய்கிறார்கள்.பிழை கண்டுபிடிப்பது சுலபம் தானே, அந்த வழியில் ஏதாவது பிழையைக்கண்டுபிடித்து தோற்கச்செய்வார்கள்.எம்மவர்களில் நாடுகளில் இப்படியெல்லாம் பரீட்சையில் தோற்கடிக்கச்செய்பவர்களை எப்படி என்னமாதிரி கையாட எப்படி லைசன்ஸ் எடுக்கவேணும் என்பதற்கெல்லாம் வேறு முறை இருக்கு

அப்ப இந்த ஆளும் மற்றவர்கள் எல்லோரும் ஆறேழு தடவையில் எடுத்த லைசன்ஸை பத்தாவது தடவையில் பாஸ் (தேறி)பண்ணி ஒரு வாகனமும் எடுத்துட்டார்,எடுத்த வாகனத்தை எப்படி கவனமாக ஓடவேணும் என்று தனக்குள் திட்டம் போட்டு ஒரு கரையாக ஓடுவது தான் இவரின் வழமை."நடுவாலை ஓடினால் ரண்டு பக்கமும் முந்துறாங்கள் எந்த பக்கம் முட்டுவாங்கள் எண்டு தெரியாது அது பெரிய பயங்கரம்" என்று மனதிலேயே நினைத்தவராக ஓடும் அந்த ஆள்.
இப்பிடித்தான் ஒரு நாள் தன் நண்பர் கூட்டத்தோடு ஒரு இடத்துக்கு பயணித்தார் அந்த அன்பர்.வழமைபோலவே பாதயோரத்தில் நிறுத்தி தனதும் நண்பர்களதும் எல்லாம் காரியங்களையும் முடித்துவிட்டு மீண்டும் வாகனத்தில் ஏறினார் அவர்,
உண்மையில் அவருக்கு வாகனத்தை பின்பக்கமாக ஓட்டி திருப்புவதில் கொஞ்சம் பயம் தான்.ஆனால் அவர் காட்டிகொள்வதில்லை,ஆனால் அது நண்பர்களுக்கு தெரியும்,ஆகவே அதை அப்படியாவது ஒரு நாள் வெளிக்காட்ட வேண்டும் என்று எப்பவோ திட்டம் போட்டார்கள் நண்பர்கள்.அப்ப தன் நண்பரில் ஒருவருக்கு "அடேய் பின்னுக்கு பாரடா" எண்டு சொல்லிவிட்டு வாகனத்தை பின்புறமாக ஓட்டினார்.
"மச்சான் என்ன பயப்பிடுறாய் போல" என்று நண்பர்கள் நக்கலடித்தவர்களாய் பின்னுக்கு பார்த்தபடி இருந்தார்கள்."சி... சி..... என்ன பயம்?ஒரு பயமும் இல்லை நீங்கள் பின்னுக்கு எங்கையாவது முட்டுதோ எண்டு பாருங்கோ" என்று சொன்னவராய் பின்பக்கம் ஓட்டுகிறார் அன்பர்.
வாகனங்கள் கூடியளவு தரித்திருந்த அந்த இடத்தில் சாதுரியமாக ஓட்டுகிறார்,
"ரைட் ரைட் ரைட் ரைட்" என்று வழி நடத்துகிறது நண்பர்கள் குரல்.திடீரென்று 'படார்' என்று சத்தம், "என்னடா இது என்னடா நடந்தது" என்று அவன் ஓடியவனாய் அவன் கீழே இறங்கி ஓடிவர அதிலிருந்த ஒரு நண்பர் "ம்ம் இப்பதாண்டா முட்டினது" என்று சொல்லி சிரித்தான்.
"நீ தானே சொன்னனீ பின்னுக்கு முட்டுதோ என்று பார் எண்டு ம்ம் அது இப்பதான் முட்டினது" என்று சொல்லிச்சிரித்தான்.உணமையில் அவன் கவனக்குறைவால்தான் அந்த சின்ன விபத்து நிகழ்ந்தாலும் "முட்டுதோ" என்று பார்க்க சொன்னதால் தான் முட்டுமட்டும் தான் சொல்லவில்லை என்றும் அதேபோல "தான் முதலே அவனுக்கு பயம் இருக்கோ என்று கேட்க அப்படி ஒன்றுமே இல்லாதவன் போல நடித்து மனப்பயத்தால் தான் அது முட்டிவிட்டது" நண்பர்களிடம் சொல்லி சிரித்தான்.

ஆனால் வழமைபோலவே அது எந்த சின்ன வகையான விபத்தாக இருந்தாலும் தண்டப்பணம் அறவிடவும் விபத்துக்கான காரணம் கேட்கவும் பொலீஸ்காரன் வந்துவிட்டான்,
யாரிலைதான் பிழையைச்சொன்னாலும் அது பொலீஸ்கேஸ் ஆக்கியாச்சு,சின்ன பிழைக்கு பெரிய தண்டம் என்று தலையிலே கையை வத்தார் அந்த அன்பர்

குறிப்பு: இங்கு சில வழமையாக நம்மவர்கள் ஆங்கிலத்தில் அமைந்த சொற்களை அன்றாடம் பாவிப்பதால் அவற்றை அப்படியே நானும் எழுத்திலிட்டுவிட்டு அவற்றின் தமிழ் சொற்களை நகைச்சுவைக்காக ஆங்கிலத்தில் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.அதே போல நடந்த ஒரு சம்பவத்தில் இந்த கதைப்போக்கின் முடிவைத்தந்தவர் நண்பர் நவரூபன் அவர்கள், நன்றி நவரூபன்

2 comments:

Unknown said...

இப்பிடி முட்டின கதை என்னட்டை ஒண்டு இருக்கு... நேரம் வராக்கை பதிவேத்திறன்

வேந்தன் said...

:))))