கணக்காலே காதல் கணக்கே வாழ்க்கையாககாதலிக்க வரம் வேண்டி
மாரடித்து வலம் வந்த
காளியம்மன் அருட்பலனால்
கனிந்த ஒரு சின்ன காதல்,

பக்கத்து வீட்டு பெண்ணவளே
சிக்குவாள் காதலிலென
பொடியனுக்கு தெரியவில்லை -அது
பொண்ணுக்கும் புரியவில்லை

ஊரெல்லாம் அறிந்த பையன்
"கரவு கிரவு" இல்லாதவன்
மரக்காலை தொழிலோடு
பொருள் சேர்க்கும் இளையவன்

பக்குவமாய் வளர்ந்த இவள்
கணக்கிலை சந்தேகமென்றால்
அக்கணமே விரைந்து இந்த
பொடியனிடம் கேட்டிடுவாள்

பொடியனும் என்ன செய்ய
புரியாது என்று சொல்ல வெட்கம்
ஏதோ சொல்லித்தேற்றி
புரியவைப்பான் விரைவாக

எல்லாம் சொல்லித்தரும் -அவனுக்கு மட்டும்
கல்லானதா இந்த கணிதமென
சின்ன சந்தேகம் இருந்தாலும் -இவளுக்கு
செல்ல பேச்சால் கேட்க வெட்கம்

கணக்கும் விளங்கிச்சாம்
கணக்கும் விட்டாச்சாம்
வெட்கமே கூடி வர
காதலும் கூடியது


வீட்டில் காதலுக்கு அடிதான் விழும்
நாட்டுக்கே உதவாதென்று திட்டுதான் விழும்- அதனால்
சிட்டுக்களாய் பறக்கும் வயதில்
ஓடிப்பொயின காதல் குஞ்சுகளாய்

ஊரெல்லாம் ஒரே கதை
"மரக்காலை மணியத்தின் மூத்த மூர்த்தி
முன்வீட்டு பவளத்தின் சின்ன பிள்ளையுடன்
முத்தான காதலென்று"

என்ன செய்ய ஏது செய்ய
அன்பான காதல் எல்லோ
சொந்தத்தில் என்ன பகையென்று
பந்தங்கள் இணைத்துவைக்க தீர்மானம்

என்ன தம்பி காதலாமெல்லோ?
கேள்விப்பட்டமென்று மற்றோர் கேட்க
"இல்லையுங்கோ கணக்கு படிப்பிச்சனுங்கோ
அப்ப குட்டினனுங்கோ காதல் வந்திட்டுது"
காதல் இளவரச மூர்த்தியின் வரிகள் அன்று
காதல் வந்த காலத்தில்
காதலித்த அன்பையே கட்டினான்
காதலுக்காகவே வாழ்ந்தான்
காதலுக்காய் சாகுறான்

இப்ப.............
என்ன தம்பி காதலுகாய் உயிர்விடுறாய்
பென்னம்பெரிய காதலா என்று மற்றோர் கேட்க

உயிர்விட்டேன் அப்போது
சாகுறேன் இப்போது

"இல்லையுங்கோ கணக்கு தானே படிப்பிச்சனுங்கோ
கணக்கு விடுறாள் பாருங்கோ,
நான் உழைச்ச காசுக்கும் கணக்கும் கேட்கிறாள்
கணக்கு கேட்கும் காதலியானதால் உயிர்விடாமல் எதை நான் விட"
குடும்ப மூர்த்தியின் அண்மைய வரிகள்
குடும்பத்துக்காய் சாகுறேன்
குடும்பத்துக்காய் வாழ்கிறேன்கணக்கு சொல்லிகொடுத்த காதலி
கணக்கே கேட்கிறாள்
கணக்காலே காதலாகி கசிந்தின்று
கணக்கே வாழ்க்கையாக

3 comments:

யாழினி said...

வாவ் சூப்பரா கவிதை எழுதிறீங்களே! அப்போ நீங்க ஒரு பெரிய கவிஞர் என்று சொல்லுங்கோ.

ப்ரியமுடன் வசந்த் said...

கணக்குல பாஸ் ஆனீங்களா இல்லியா?

கோபிநாத் said...

\\\கணக்கு சொல்லிகொடுத்த காதலி
கணக்கே கேட்கிறாள்
கணக்காலே காதலாகி கசிந்தின்று
கணக்கே வாழ்க்கையாக \\

;)))) அய்யோ பாவம்

நல்லாருக்கு ;;;