துள்ளி விளையாடித்திரிந்த ஐந்து வயது சிறுமி எப்போதும் உற்சாகமாக
ஓடித்திருவாள்.
அன்றைய நாளும் அவள் தன்னுடைய மாமாவின் கடைக்குள் தன்னுடைய அண்ணா மற்றும் தங்கையோடும் ஓடியாடித்திரிந்து விளையாடியிருக்கிறாள்.
திடீரென்று வந்த காவாலிகள் அவளை நாற்காலியில் உட்காரசெய்துவிட்டனர்.
அவளுடைய கனவு நல்ல ஒரு நடனம் ஆடக்கூடியவளாக
வரவேண்டுமென்பது??????
அவள் அதற்காக கற்றுக்கொண்டுமிருந்திருக்கிறாள் போலும்.
பெற்றோர் அவளின் நல்ல கனவுக்காக ஏங்கியிருந்து இன்று அவளுக்கு நாற்காலியிலிருத்தி பணிசெய்ய வேண்டியதாயிற்று.
துஷா
கடந்த வருடம் மார்ச் மாதம் நடந்த கோஸ்டி மோதலில் துரத்திக்கொண்டு வந்த கோஷ்டியினர் தாறுமாறாக சுட்டதில் துப்பாக்கி குண்டுகள் அவளுக்கும்
பாய்ந்துகொண்டது.
மாமாவின் கடையில் துப்பாக்கி குண்டுகள் அவள் நெஞ்சில் பாய்வதற்கு
முன்னரும் அவள் மிகவும் சுறுசுறுப்பாக உற்சாகமாக ஒடிந்திரிந்த
ஒளிப்பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள் லண்டன் காவல் துறையினர்.
அம்மாவுடன் கடையில் நின்ற அந்த குழந்தை சுடப்பட்டதால்
பிரித்தானியாவில் அது பரபரப்பானது.
மிகக்குறைந்தவயதில் பிரித்தானியாவில் முதன்முதலாக சுடப்பட்டிருக்கிறார்.
அதுவும் ஒரு பரபரப்பிற்கு காரணம்.ஒரு காலத்தில் கோஸ்டி மோதல்கள் சர்வசாதரணமாய் இருந்திருக்கிறது.
பின்னர் பிரித்தானிய பொலிசாரின் முயற்சியால் அது கொஞ்சம்
குறைக்கபட்டது என்றே சொல்ல வேண்டும்..இருந்தாலும் இதெல்லாம் அறியுமா இந்த பச்சிளம் சிறுமி?????
சூடு பட்டவுடன் அவள் இதயம் நின்றிருக்கிறது.உடல் செயற்பாடுகளை இழந்திருக்கிறாள்.
இரண்டு தடவைகள் இறந்து பிழைத்திருக்கிறாள்.சூடு பட்டவுடன் இதயம்
நின்றதுபோலவே மீண்டும் வைத்தியசாலையிலும் இதயம் நின்றிருக்கிறது.
அவளை காப்பாற்ற மருத்துவர்கள் மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
துப்பாக்கி ரவையொன்று நெஞ்சினூடாக பாய்ந்து முள்ளந்தண்டை தாக்கி
வெளியேறியிருக்கிறது.இவையெல்லாம் மருத்துவர்கள் குறித்த விடயங்கள்.
குற்றசாட்டை முற்றாக மறுக்கும் குற்றவாளிகளாக இனங் காணபட்டவர்கள்.
எந்த அடிப்படையில் அவர்கள் மறுப்பு என்று தெரியவில்லை.ஆனால் குற்றஞ் சாட்டபட்ட மூவரும் ஏற்கனவே வேறு வேறு குற்றங்களில்
தேடபட்டவர்களும் இனங்காணப் பட்டவர்க்களுமாவர்.
அன்றைய நாள் பிரயன்(Brayan) என்ற போதைவஸ்துகளை விநியோகிக்கின்ற ஒருவனை லண்டன் ஸ்ரொக்வெல்(Stockwell)பகுதியில் துரத்திவந்த அந்த மூவர் கொண்ட குழு அந்த நபர் கடைக்குள் ஓட
கலைத்து வந்தவர்கள் சரமாரியாக சுட்டபோது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றிருக்கிறது.
பிரித்தானிய தடவியல் நிபுணர்களும் பொலிசாரும் மேற்கொண்ட
முயற்சியால் அந்த மூவரையும் வீடு தேடிச்சென்று கைது செய்திருக்கிறார்கள்.
நன்றி Daily Mailகடையில் பொருத்தபட்ட கமெராக்கள் வீதிகளில் பொருத்தபட்ட கமெராக்கள்
உதவியோடும் ஒவ்வொரு தடயங்கள் உதவியோடும் மிகப்பெரிய
முயற்சியோடு அவர்களை கைது செய்ய அவர்கள் தங்கள் குற்றங்களை எந்த
அடிப்படையில் தங்கள் குற்றச்சாடுக்களை மறுக்கிறார்கள் என்பது
தெரியவில்லை.
நன்றி Daily Mailதுஷாவின் மாமா இப்போது "இனி இந்த கடை வேண்டாம்" என்று கடையை மூடுகின்ற அளவிற்கு அவர்களை கவலை வாட்டியிருக்கிறது.
துள்ளித்திரிந்த மற்றவர்களை உற்றவர்களை எப்போது சந்தோசமாக
வைத்திருக்கக்கூடிய புன்னகையோடு கூடிய அந்த பச்சிளஞ்சிறுமி கால்கள்
செயலிழந்திருக்கும் நிலை காண எந்த மனிதனுக்கு பொறுக்கும்.
ஆனால் குற்றஞ் சாட்டபட்டவர்கள் சர்வ சாதாரணம் போல நிற்கிறார்களாம்.
இங்கிலாந்தின் இன்றைய கூடுதலான பத்திரிகைகள் இந்த செய்தியை தங்கள்
முற்பக்கத்தில் பிரசுரித்திருக்கின்றன.கடந்த வருடம் இடம்பெற்ற இந்த
சம்பவத்தின் சிசிரிவி(CCTV) கமெராவின் ஒளிப்பதிவுகளையும்
புகைப்படங்களையும் லண்டன் போலீசார் பெற்றோரின் ஒப்புதலோடு வெளியிட்டிருக்கிறார்கள்.
அது குற்றஞ் சாட்டபட்டவர்களின் மறுப்பிற்கு கிடைத்த பதிலடியாக இருக்கிறது.
நன்றி Daily Mailவெளியிட்ட வேளையில் துஷாவின் அம்மா கதறியழுத காட்சி அங்கிருந்த
எல்லோரையும் கண்ணீர் விட வைத்திருக்கிறது.துள்ளித்திருந்த அந்த சிறுமி
ஒரேயடியாக விழுகின்ற காட்சி எல்லோரையும் கண்ணீர்விட வைத்திருக்கிறது.
அதன் பிறகு அந்த காவாலிகள் தங்கள் சைக்கிளில் தாங்கள் இருக்கும் இடம் நோக்கி உல்லாசமாக சந்தோசமாக கலகலப்பாக வேகமாக செல்கின்றார்கள்.
இங்கு உயிருக்காக போராடிக்கொண்டிருக்கின்றது என்பது அவர்களுக்கு தெரியாமலிருக்க போவதுமில்லை. இந்த குற்றஞ்ச்சாட்டபட்டவர்களுக்கான தீர்ப்பு வருகின்ற ஏப்ரல் மாதம்
சொல்லப்பட இருக்கின்றது என்று செய்தி வெளியாகியிருக்கிறது.
விளையாடித்திரிந்த சிறுமியின் இந்த பரிதாபகரமான நிலையை இங்கிலாந்தின் முன்னணிப் பத்திரிகைகள் முதல் பக்கத்தில் துஷாவின் புன்னகை தோய்ந்த முகத்தோடு வெளியிட்டிருக்கின்றார்கள்.
எத்தனை செய்திகள் வெளியிட்டாலும் குற்றம் இனங் காணபட்டவர்களுக்கு எந்தப்பெரிய தண்டனைகள் வழங்கினாலும் சிறுமி இழந்த வாழ்க்கையை
பெற்றுத்தர முடியுமா என்று கேட்டால் அதற்கான விடை
கேள்விக்குறியாகவே இருக்கிறது.
எல்லோரும் ஒளிப்பதிவின் காட்சிகளை பார்த்து கண்ணீர் விட்ட போதும்
இன்றும் அவள் சிரித்துக்கொண்டே விளையாடியபடி உட்கார்ந்திருக்கிறாள் அந்த பச்சிளஞ் சிறுமி.
தீர்ப்பு எதுவாக இருந்தாலும் துஷா மீண்டும் எழுந்து நடக்க வேண்டும்.
துள்ளித்திரிந்து மற்றவர்களுக்கான புன்னகையை வரவழைக்கும் நடனம் ஆடிக்காட்டவேண்டும் என்பதே உண்மையான ஏக்கம்
நன்றி தினக்குரல்
குறிப்பு :
லண்டன் பொலிஸ் அதிகாரிகளும் சில உத்தியோகத்தர்களும் இணைந்து
துஷாவின் மருத்துவ செலவிற்கும் அந்த சிறுமிக்கான வாழ்வாதார
தேவைகளுக்குமாக ஒரு பணம் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை
மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதை டெய்லிமெயில்(Daily mail)
இணையத்தளம் வாயிலாக அறிந்துகொண்டேன்
அதற்கான கணக்கிலக்கம் என்பவற்றை தொடர்புகொள்கின்றவர்களுக்கு
தருவதற்கான ஏற்பாட்டினை செய்யமுடியும்.
முடிந்தவர்கள் மின்னஞ்சல் முகவரி ஊடாக தொடர்புகொள்ளுங்கள்-
karavaikkural@gmail.com
2 comments:
வருத்தமான செய்தி
கள்ளம், கபடமறிய சின்னஞ்சிறிய மலரின் மென்மையான இலட்ச்சியக் கனவுகளைச் சிதைத்தவர்களை எண்ணினால் இதயம் கனக்கிறது. இருப்பினும் அம்மலரின் வாட்டத்தைப் போக்க வேண்டும் என்று எம் புலம்பெயர் மட்டுமல்லாது நாம் வாழும் நாட்டின் மக்களும் முன்வருவது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது. முயற்சிகளுக்கு ஆண்டவன் துணை நிச்சயம் உண்டு.
Post a Comment