வாழ்க்கைக்கு அர்த்தம் கொடு-வானவில்லில் தொடரும் சுட்டு விரல்


தற்கொலை தனிமனிதன் தனக்கான வாழ்க்கையின்
நம்பிக்கையை முற்றுமுழுதாக இழக்கும் வேளையில் அவன்
தனக்காக தெரிவுசெய்யும் பாதையாகின்றது,
தனது உயிரென்றாலும் அதை அந்த மனிதனாலேயே
பறித்துக்கொள்ள  உரிமை இல்லை என்று சட்டங்கள் பல
நாடுகளிலும்  இயற்றப்பட்டிருப்பினும் கொலை மற்றும்
தற்கொலைகளின்  எண்ணிக்கைகள்
பெருகிக்கொண்டேபோகின்றன.
என்றாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை
மிகக்குறைவுதான்,ஏனென்றால் அந்த அந்த நாடுகளில்
சட்டப்படி வாழ்வுரிமை அல்லது தங்கி வாழ்வதற்கான
உரிமையுடைய ஒவ்வொரு மனிதனுக்குமானதன்னிறைவான
வாழ்க்கைச்சூழல் அமைந்துகாணப்படுகிறது.
அப்படியான எதிர்கால நிச்சயமான தளத்தில் குறிப்பிட்ட
மனிதனுக்கான வாழ்க்கை பூச்சியமானது எவ்வாறு?

அண்மையில் கேள்விப்பட்ட விடயம்.வாலிபவயது
தமிழ்ப்பெண்ணின் சாவு,அது இயற்கை மரணம் இல்லை
என்பது மட்டும் உண்மை, அது தற்கொலையா? அல்லது
கொலையா? என்று துப்புத்துலங்க முன் அதனைத்தொடர்ந்து
ஐந்து நாள்களில் அந்த பெண்ணின் தந்தையார் தனது
ஆற்றமுடியாத கவலையின் உச்சத்தில் தற்கொலை
செய்திருக்கிறார்.
அதுவும் புலம் பெயர்ந்த நாட்டில் இடம்பெற்றிருக்கிறது.
ஏன் எதற்காக இந்த மரணங்கள் ஏற்பட்டது என்பதை அலசும்
விடயங்களுக்கு அப்பால் இந்த கொலைகளுக்கான செய்திகள்

புலத்தில் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தை ஆரோக்கியமான
பாதையில் சென்றுகொண்டிருக்கிறதா என்ற பார்வை நோக்கில்
சிந்தனைக்குட்படுத்துகிறது.
தெரிவு செய்யப்பட்ட தற்கொலை என்ற   அவனுடைய
பாதை  அவன் மற்றும் அவன் சார்ந்த சமுதாயத்திற்கான ஒரு
தலைக்குனிவே.அந்த சமுதாயமோ,அவன் வாழ்ந்த
சூழலோ அல்லது சார்ந்த  குடும்பமோ அந்த நிலையை
ஒருவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெளிவு.
ஆனால் ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழ் சமுதாயத்தை
நோக்குமிடத்து  அது அந்த தனிமனிதன் சார்ந்தது என்றோ
அல்லது அந்த குடும்பம் சார்ந்த பிரச்சனை என்றோ
ஒதுங்கிவிடவோ ஒதுக்கிவிடவோ முடியாது,இந்த வேளையில்
அவரின்மனைவியின் பெயர் எங்கும் உள்வாங்கபடவில்லை
என்றும்செய்திகள் கிடைத்திருக்கிறது.
தாயக நிலங்களில் தவழ்ந்து வளர்ந்து எத்தனையோ கஷ்டங்கள்
வாழ்க்கை சுமைகளை சுமந்து புலத்தை நோக்கி பயணித்த
சமுதாயம் எங்கள் சமுதாயம்.புலத்தில் உழைத்தென்றாலும்
எங்கள் குடும்பத்தை  சமுதாயத்தை உயர்த்திவிடலாம் என்ற
கனவோடு ஒவ்வொரு நிமிடங்களும் மிகக்கடின  வாழ்க்கையை
அனுபவித்து வாழ்பவர்கள் எந்த வேளையிலும் தற்கொலை என்ற
பாதையை எவர் தெரிவு செய்தாலும் அது ஆமோதிக்க முடியாது.
அன்றைய காலங்களில் புலம்பெயர்ந்த காலங்களில் தனிமை
என்ற கொடுமை எங்கள் சமுதாயத்தை ஆட்டுவித்திருந்ததது.


எங்கோ ஒரு மொழி தெரியாத நாட்டின் நகரத்தில் தனிமையாக
வந்து தொழில் தேடி உழைத்து நிலைத்த சமுதாயம்.இன்றைய
காலங்களில் அப்படியான தனிமை என்ற உணர்வுகள் எந்த ஒரு
மனிதனுக்கும் இருக்கமுடியாது என்று உறுதியாகச்சொல்லலாம்.
ஏனென்றால் ஐரோப்பிய நாடுகளெங்கும் மிகக்கூடியளவு பரம்பலோடு வாழ்கின்றது எங்கள் சமுதாயம்.
ஒரு காலத்தில் புலத்திற்கு வந்த எங்கள் சமுதாயத்தின்
இளைஞர்கள்  போதைவஸ்துகளுக்கு அடிமையாகி  கொலைகள்
தற்கொலைகள் என்ற கவலைக்கிடமான நிலைகில் எல்லாம்
இருந்திருக்கின்றார்கள்.அப்படியான செய்திகள் இப்போது
கிடைப்பது அரிது.ஆனால் உறவுகளில்
விரிசல்கள்,கோபதாபங்கள்,இங்கு பிறக்கும் குழந்தைகளின்
செயற்பாடுகளால் பெற்றோர்களுக்கு வரும் தாக்கங்கள்,குழந்தை
பெற்றோர் இடைவெளிகள்,குடும்பத்தினுள் சண்டைகள்,
விவாகரத்துகள்,இவற்றினால் வரும் கொலைகள் தற்கொலைகள்,
என்று ஒட்டுமொத்த சமுதாயத்தின் பாதை ஆரோக்கியமற்ற
சூழலில் நகர்கின்றது.
ப்படியென்றாலும்  கடின உழைப்புகளோடு
உன்னதமான வாழ்வை அமைக்கக்கூடிய சூழல்களை  கொண்ட
நாடுகளிலிருக்கும் எங்கள் சமுதாயம் வாழ்க்கை என்ற
பயணத்தை அர்த்தமுள்ளதாக்கும்படி சிந்திப்பது சாலச்சிறந்தது.
புலத்தில் எந்த ஒரு தமிழ் மகனும் தன் வாழ்க்கையை நம்பிக்கை
இழக்கும்படியாக சமுதாயம் நகர்த்தக்கூடாது.அப்படியான
சந்தர்ப்பங்களிலும் எமது உறவுகள் என்ற உணர்வோடு மனித
வாழ்க்கையின் அர்த்தத்தை புரியச்செய்தால் அதுவே சிறப்பு.அது
இங்கு பிறக்கும் சிறார்களுக்கும் உணரச்செய்ய வேண்டிய
விடயமாகின்றது.அடுத்த தலைமுறைகள் தமிழ் சமுதாயம்
என்றே நிலைபெறவேண்டும்,தனக்கான செழிப்பான
வாழ்க்கையை அமைக்க எல்லோரும் உழைத்து பிழைக்க வல்ல
நவீன உலகத்தின் முன்னோடியான அபிவிருத்தியடைந்த
நாடுகளில் வாழும் எங்கள் சமுதாயத்திற்கு , கொலை,தற்கொலை
என்ற ஏற்றுக்கொள்ளத்தகாத நம்பிக்கை இழந்தவாழ்க்கைப்பாதை
ஆரோக்கியமானதா?
வாலிப வயதிலேயே வரும் வேண்டத்தகாத இழப்புகள்  தமிழ்
சமுதாயத்தை எதிர்காலத்தில் எந்த நிலைகளுக்கு கொண்டு
செல்கிறது?
குறுகிய நிலையற்ற வாழ்வின் மனதிற்கினிய சந்தோஷங்களை
புரிந்துஉறவுகளோடு பகிர்ந்து,மற்றோரையும் அரவணைத்து
அடுத்த தலைமுறைக்கான சரியான படிப்பினைகளை
எடுத்துச்செல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்கள் சமுதாயத்தில்
அனைவருக்கும் புரியவில்லையா?
உறவுகளின் பிணைப்பும் புரிந்துணர்வற்ற நிலைகளும், சுய நல
சிந்தனைப்போக்குகளும் தொடர்ந்தும் நிலைக்குமாயின்
ஒட்டுமொத்த சமுதாயமும் எங்கள் பண்பாடுகளை, கூடிக்களித்த
வாழ்க்கையின் உண்மையான பாசபிணைப்புகளை அறுத்தெறிந்து
நலமான வாழ்வை இழக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள்
தள்ளப்படலாம் என்று சுட்டிவிரல் சுட்டிக்காட்டுகிறது,


நன்றி வானவில்

பணம் அல்ல குணமே வாழ்க்கை-சுட்டிக்காட்டிய வானவில்


வானவில்
நோர்வேயிலிருந்து வெளிவருகின்ற வானவில் இப்போது லண்டன்
ஐரோப்பிய தேசமெங்கும் பெறக்கூடியதாக இருக்கிறது.வித்தியாசமான
வடிவில் வெறுமனே அரசியல் சார்ந்த விடயங்களுக்கு மட்டும் முன்னுரிமை
கொடுக்காமல் பல அம்ச விடயங்களைஉள்ளடக்கி வானவில்
வெளிவந்துகொண்டிருக்கிறது.
பலதுறை சார்ந்த எழுத்துகளுக்கான இடைவெளி புலத்து தேசத்து
சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளில் இருக்கின்றது என்ற எண்ணத்தை
கருத்தில் கொண்டு ஒவ்வொரு துறைசார் வல்லுனர்களையும்
அவர்களுக்கான பலதுறை சார்ந்த ஆழமான அறிவினை பலதரப்பட்ட
மக்களுக்கும் கொண்டு செல்லவேண்டும் என்ற மிகப்பெரிய சவாலோடு
வெளிவந்துகொண்டிருக்கிறது வானவில்.
இந்த மாத இதழில் பல் துறை சார்ந்தவர்களுக்கான பகிரங்க அழைப்பை கூட
விடுத்திருக்கிறது வானவில்.அந்த அந்த துறைகளில் ஈடுபாடு மற்றும்
ஆழமான அறிவு உடையவர்கள் ஒவ்வொரு பகுதியாக மக்கள் மத்தியில்
பரவவிடும் எண்ணம் இருந்தால் அதற்கான களங்களை உருவாக்க வானவில்
தயாராக இருக்கும் எண்ணத்தை பதிவு செய்திருக்கிறது.
இவை புலத்தில் பல் துறை சார் தமிழ் சஞ்சிகை அல்லது பத்திரிகைக்கான
இடைவெளியை குறைக்கும் என்பது ஆசிரியர் குழுவின் எண்ணம்.
வானவில்லின் ஆரம்ப காலங்கள் இதுவாகையால்
எழுத்தாளர்கள்,ஆர்வலர்கள்,வாசகர்கள் என்று பலதரப்பட்டவர்களின்
கருத்துகளை மிகபெரியளவில் எதிர்பார்க்கிறது வானவில் ஆசிரியர் குழு.


அதற்கான விடயங்களை வானவில்லின் உத்தியோகபூர்வ இணையத்தளம்
சென்று பார்க்க முடியும்.
அழுத்துங்கள் இங்கே வானவில்
பேஸ் புக்கில் வானவில்
கடந்த வானவில்லில் எனது பதிவையும் உள்வாங்கியிருந்தது
மிக்க நன்றிகள் வானவில்லுக்கு
சுட்டிவிரல் என்ற பகுதியினூடாக சுட்டிக்காட்டிய விடயத்தை இன்று
கரவைக்குரல் பதிவு செய்கிறது.


சுட்டி விரல்

பணமல்ல குணமே வாழ்க்கை
உறவுகளும் அவர்களுடனான பிணைப்பும் அதில் கிடைக்கும்
சந்தோஷமான வாழ்க்கையும் யாரும் அறியாததொன்றல்ல.உறவுகள்
என்பது சொந்தத்தினூடாக வருவதுமல்ல.அது தனது சமுதாயம் வரை
உறவுப்பிணைப்புகள் நீளும்.அந்த உறவுபிணைப்புகளில் இருக்கும் உறவு
நிலைகள் தாயகத்திற்கு என்று ஒரு வகையும் புலத்திற்கு என்று
ஒருவகையும் இருக்கபோவதுமில்லை.அப்படியாக அமைந்துவிட்டால் அது
எங்கோ தங்கள் அடையாளங்களை தொலைத்து வேறு பாதைகளில்
சமுதாயம் சென்றுகொண்டிருக்கிறது என்று தான் எண்ணத்தோன்றும்.

புலத்தில் ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்ப பணமானது கிடைக்கும்.
உழைத்து வாழ வேலை கிடைக்காவிட்டால் அந்தந்த வாழும் நாடுகளின்
அரசாங்கம் அவர்களை ஏதோவொரு கட்டுப்பாடுகளுடன் அவர்களுக்கான
பணத்தேவையை ஓரளவு நிறைவு செய்துகொண்டிருக்கிறது.

இவை ஒருபுறமிருக்க வாழ்ந்துகொண்டிருக்கும் மற்றவர்களுடனான
அன்புப்பரிமாறல்களும் பாச உணர்வுகளும் பகிர்ந்துகொள்ளபடுகிறதா
என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுகிறது.இவைதான் ஒரு சமுதாயப்
பிரிவினைகளுக்கான உந்துதலாகத்தான் அமையப்போகிறது.
தாயகம் கடந்து அந்த சமுதாய இருப்பிடம் தாண்டி வேறு புலத்தில்
நிற்கும்போது அங்கு அந்த சமுதாய அடிப்படைவிடயங்களுக்கான
சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படும்போது ஒரு காலத்தில் அந்த சமுதாயம்
பேசாத ஒரு பொருளாக மாறிவிடும் என்பதை எமது சமுதாயம் உணர
மறுக்கின்றது என்பதே இன்றைய கவலை.
அதுவும் வாழ உறுதியான பணவலிமையை ஏதோவொருவகையில்
பெற்றுவிடலாம் என்ற சூழலில் வாழுகின்றவர்கள் தாயகத்தில் வாழ்கின்ற
மகிழ்ச்சியை பெற்றுவிட தேடியலைகின்ற சூழல் ஏன் வருகிறது?
உண்மையில் அடிப்படை விடயங்களை நோக்கும் போது  பணம் என்பது
தேவையானதே, பணத்தாலே மட்டும் மகிழ்வான வாழ்க்கையை
பெற்றுவிடலாம் என்று அற்பத்தனமாக யாரும் நினைப்பார்களா என்றும்
தெரியவில்லை. அதைவிட மகிழ்வான வாழ்க்கை என்பதை பணத்தைவிட
உற்றவர்கள் மற்றவர்கள் மீது காட்டும் அன்பு பாசப்பரிமாறல்கள் அதனூடான
பண்பு என்றும் மகிழ்வைத்தரும் என்பது யாரும் அறியாத விடயமுமல்ல.
ஆனால் புலத்தில் ஒரு சிறிய மனக்கசப்புகளே அல்லது சின்ன சின்ன
புரிந்துணர்வற்ற தன்மைகளே சமுதாயபிரிவினைகளுக்கு
வழிவகுக்கின்றமை சமுதாயப்பாதையை கேள்விக்குறியாக்குகின்றது.

ஊரோடு இருக்கும் காலங்களில் அக்கம்பக்கம் சிலவேளைகளில்
மிகப்பெரிய சண்டைகள் வந்தாலும் அவர்களிடத்தில் ஏதோ ஒரு பிணைப்பு
என்றும் இருக்கும்.புலத்தில் வாழ்கின்ற எமது சமுதாயமும் ஒரே மொழியால்
இனத்தால் ஒன்றிவிட்டபோதும் ஏன் இப்படியாக
மாறுபடுகிறது.அன்பு,பாசம்,இரக்கம்,புரிந்துணர்வு என்பனவெல்லாம்
சிதைந்து பண ஆசை விஞ்சுகிறது என்பதையே சுட்டிக்காட்டவேண்டிய
தேவையெழுகின்றது.

ஓரணியாக திரண்ட இனம் இப்போது சின்னாபின்னமாகி சிதைந்து
போகுமோ என்று சிந்திக்குமளவுக்கு புரிந்துணர்வற்ற போக்கு நிலைகள் காணப்படுகிறது.

சாதரணமாக பாதையோரத்தில் இருந்து உயர்வாக கொள்ளப்படும்
அமைப்புக்கள் வரை சமுதாயத்தில் உள்பிரிவினைகள்
விரிந்துகொண்டேபோகிறது.
புலத்தில் அவை ஒரு வெட்கக்கேடான செயற்பாடுகளாக
விரிந்துகிடக்கின்றது
.உதாரணங்கள் சொல்லி அதை ஒப்புவிக்கவேண்டியதுமில்லை.
அவை சாதாரண ஒவ்வொரு மனங்களும் மௌனமாக நினைத்து
அழுகின்ற விடயங்களாகவோ அல்லது வாய்களால் இவைகளைப்பற்றி
பேசி பேசி பேசிப்பலனில்லை என்று மனம் வெதும்பும்  விடயங்கள்.
தொடர்ந்தும் கைவிடப்பட்ட விடயங்களாக மாறுமேயானால் சமுதாயம்
அடையாளம் தெரியாத இனமாக இன்னும் காலங்களில் மாறிவிடலாம்.

ஒவ்வொரு சமுதாயத்துக்குமான அடையாளம் அந்த மொழி அதன்
கலாச்சாரங்கள் அழிக்கபடமால் எவ்வளவுதூரம் பாதுகாக்கபடுகிறதோ
அவ்வளவுதூரம் அந்த இனம் வாழும் என்பது உண்மை.அந்த உண்மைய
புரிந்துகொண்ட சமுதயாமாக புலத்தில் உண்மையான புரிணர்வை நாடி
செல்ல வேண்டும்.அதைவிடுத்து எங்கள் பணம் எங்கள் வாழ்க்கை என்றும்
நாம் செல்லும் பாதை சரியானதே என்றும் பிடிவாதத்தோடு செல்லும் போக்கு
சொந்த பந்த  பாசங்கள் அறுந்து தமிழ் சமுதாயம் என்று புலத்தில் அற்ற ஒரு
சமுதாயம் என்ற நிலை வந்துவிடும்காலம் தொலைவில் இல்லாது வெகு
சீக்கிரம் வந்துவிடலாம் .அது தம்மை தாமே சுட்டுக்கொண்டு சமுதாயம்
அழிக்கும் நிலைக்கும் தள்ளிவிடும் என்று சுட்டிவிரல் சுட்டிக்காட்டுகிறது.

நன்றி வானவில்

மட்டை ஆடிச்சு இப்ப உடம்பே ஆடப்போகுது!!!!!!!

அந்தக்காலம்
பள்ளிக்கூட பெடியள் கூட பள்ளிக்கு கூடபோகமால்
நீ அடிக்கவே கூடாது என்று சூனியங்கள் சூத்திரங்கள் உச்சரித்தே
காலங்கடத்திய நாட்கள் மறக்க முடியுமா!!!
உன் மட்டையடியை பார்க்கிறதுக்காக காத்திருந்து
நீ அடிக்காமல் போனாலும் அடுத்த மட்டையடிக்காக
காலங்கடத்திய நாட்கள் மறக்கமுடியுமா!!!!
நாடாளுமன்றத்துக்கு உன் மட்டையடியடியால் ரசிகர் சேர்த்து
அங்கு ஒரு கிரிகெட் பந்தயம் போட்டி வைச்சு
அதிலும் ஒரு அரசியல் கிளப்பியிருந்தாய்.
கொஞ்சக்காலம் மட்டையடி ஓய்ந்துபோய்
மலிஞ்சு போன அரசியல் சாணக்கியத்தால்
மட்டையைடிக்கு மீண்டு வந்து ஒய்வு கொடுத்தாய்
மகிந்த சிந்தனாவ அதுக்கும் இடம் கொடுத்து............
மட்டையடிதான் நாட்டுக்கு முக்கியம் என்று தேசப் பற்றுடன் சொன்னது.....
நீ அடிச்சதெல்லாம் மட்டையடி எண்டு சொன்னதை கோவிக்ககூடாது !!!!!
அந்த அடி பந்தயத்துக்கு வேணும் எண்டு கொண்டு வந்ததே நீயல்லவோ.!!!!!!!!!


மட்டை மட்டும் சுழன்று ஆடி அடங்கி போய் இருக்க
நாடாளுமன்றத்திலும் ஆட போய்
பெரிசா ஆடவிடவில்லை போல
ஆனா மக்களுக்காக தான் அந்த பக்கம் போனதெண்டு
வழமையான கதை!!!!!!!!
அதே அரசியல் வாதிகள் போல???????
ஆடமுடியா அரசியலில் ஒரு கால் வைச்சு -இப்ப
உடம்பை ஆட்டுவிக்க நடனத்தில் மறுகால் வைக்கிறாய்
மட்டையடி கிரிக்கெட்டுக்கு ஆரம்பத்து சரியா போச்சு
உடம்பை ஆட்டுவிக்க என்ன ஆட்டம் சரியா போகுமோ
தொந்திகுலுக்கி காலைத்தூக்கி நடனம் ஆடினால்
சந்தி சிரிக்குமென அறிவாயோ மட்டையடி மானிடனே.
கையால் மட்டையடி காலால் குத்தாட்டம்
சித்தமும் பித்தமும் சுழல சுழல ஆட்டிவிடு மானிடா.
உலக நாடக மேடையில் நீயென்ன விதிவிலக்கா?
நடப்பன எல்லாம் நாடகமே என்று நினைக்கட்டும் மானிடங்கள்
நாட்டுக்கட்டைகளும் நாடாளுமன்றத்தில் நின்று வாழ்த்தும்
தகிட தகிடதகிட தகிட தகிட தகிடதகிட தகிட
ஆடு கண்ணா ஆட்டு கண்ணா ஆடு கண்ணா ஆட்டு கண்ணா

நண்பன் இன்னொரு படம் வெளியீடு


நண்பனின் இன்னொரு படம் ...... அது எப்படி இருக்கும்.எப்படி
உருவாகியிருக்கும் என்ன கதையாக இருக்கும் என்ற ஆர்வத்தோடு
வருகைதந்த அனைவருக்கும் நன்றிகள்.
நிச்சயமாக இது நண்பனுக்காக எழுதப்படுவது அல்ல.அந்த படைப்பை எனது
பதிவின் மூலமும் ஒரு அறிமுகத்தை தரவேண்டும் என்ற எண்ணத்தோடு
மட்டுமே  பதிவுசெய்கிறேன்.நிறைவில் உங்கள் விமர்சப்பார்வையை உங்கள்
கருத்துகளில் பதிவு செய்யுங்கள் அந்த படைப்பை மேலும் ஊக்கபடுத்தும் .
நண்பனின் படம் என்றால் எல்லோரும் ஒரு ஆர்வத்தோடு வருவீர்கள்
அதனால் உங்கள் ஆக்கபூர்வமான கருத்து பதிவு செய்யப்படும் என்ற
எதிர்பாபோடு பதிவு செய்திருக்கிறேன்.
லண்டனில் உள்ள கலைஞர்கள் இவர்கள்.கலைத்தாகம் இளைமை
உற்சாகம்,தேடல்கள் என்று தங்களை ஈடுபடுத்தி இன்னுமோர் படைப்பை
வெளியிட்டிருக்கிறார்கள்.பாடல்களுக்கு  தனது நடிப்பை வெளியிட்டுவந்த
நண்பன் குறும்படம் வாயிலாக சிறப்பான நடிப்பை வெளியிடிருக்கிறார்(ன்)
அதுதான் நண்பனின் இன்னொரு படம்


விரதத்தோடு அரைகுறையாக கேக் சாப்பிடும்போது 


                      பின்னுக்கு லண்டன் பாராளுமன்றம் இருக்கிறது என்றுதான் 
                                           கையை காட்டுகிறோம்.நம்புங்கள் 
                               

நண்பன் ஜே ஜே மற்றும் சிந்துவின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது
கலையும் நீயே காதலும் நீயே 

இல்லற வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒரு கலைத்தாகம் உள்ள இளைஞனின்
கதையாக இது அமைந்திருக்கிறது.கலை ,காதல் இல்லற வாழ்க்கையில்
எப்படி சந்திக்கிறது? அந்த காதல் கலைத்தாகமுள்ள  இளைஞர்களுக்குள்
எப்படி மனதின் ஆழங்களில் எப்படி புதைந்துபோயிருக்கிறது என்பதை
குறும்படம் சொல்கிறது.
மிகுதியை நீங்கள் குறும்படத்தை பார்த்து ரசித்து தெரிந்துகொள்ளுங்களேன்.

லண்டனில் இருக்கும் பல்வேறு வேலைப்பளுக்களுக்கு மத்தியில் குறும்படம் 
தயாரிப்பது என்பது மிகக்கடினமான ஒரு காரியம்.
கதை வசனம்,பாடல், நடிப்பு,படப்பிடிப்பு,பின்னணிக்குரல்,பாடல்
இசை,படத்தொகுப்பு என்று பலவேறு கலைஞர்களும் இணைந்து இந்த
படைப்பை மிகச்சிறப்பாக வெளியிட்டிருக்கிறார்கள்.குறும்படத்தில்
ஆரம்பத்தில் அவர்களின் பெயர்கள் பதிவு செய்யபட்டிருக்கின்றது.
அனைவரும் முழு வீச்சோடு தங்கள் கலைப்பணியை ஆற்றிக்
கொண்டிருப்பவர்கள்.நண்பன் ஜே ஜே மற்றும் சிந்து இவர்கள் இருவரையும்
நேரடியாக திரையில் பார்க்கலாம்.





கலைஞர்கள் வாழும்போதே வாழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு
ஈழத்திற்கான  அடையாளங்களாக கலைப்படைப்புகள் மிளிரவேண்டும்.அந்த
கலைஞர்கள் கலையுலக வாழ்வு சிறக்கவேண்டும் என்ற அன்போடு
கரவைக்குரல் தனது வாழ்த்துக்களை பதிவு செய்கிறது.